Wednesday, October 12, 2011

6 வித்தியாசமென்ன அதுக்குமேலயும் சொல்லலாம் அமைதிச்சாரல்!!!

புதுகைக்கு போயிட்டு வந்தே எங்க ஊரு ரொம்ப மாறிப்போச்சுன்னு
புலம்பும் படியா மாறியிருக்கு ஊரு. மும்பை மாற்றம் கேக்கணுமா?!!!
வசாய். மேற்கு ரயில்வே பகுதி. இங்கேயிருந்துதான் சர்ச்கேட்டுக்கு
என் பயணம் தினம் தினம்.

வசாய் ஷ்டேஷனில் இரவு இறங்கியதும் மார்க்கெட்டில் காய்கறி
வாங்கிக்கொண்டு போவேன். பஸ்ஸ்டாண்ட் ஷ்டேஷன் கிட்ட
கிட்ட இருக்கும். பஸ்ஸ்டாண்டில் இருந்து திரும்பும் முனையில்
காய்கறி. இப்ப அதைக்காணவே காணோம். காய்கறி மார்க்கெட்
இருந்த இடத்தில் பெரிய்ய பெரிய கடைகள் வந்திருக்கு.

அந்தேரியில் பானேரி என்று புடவைக்கடை உண்டு. எனக்கு மிகவும்
பிடித்த கடை. அங்கேதான் புடவை எடுப்பேன். என் கல்யாணத்திற்கு
மாமா அங்கேயிருந்துதான் புடவை வாங்கிக்கொடுத்தார். அங்கேயே
ஃபால்ஸ் & பீக்கோ ஃப்ரீயாக செய்து கொடுத்துவிடுவார்கள். மற்றபடி
சுடிதார் மெட்டீரியல்ஸுக்கு க்ரஃபட் மார்க்கெட் சென்று ஹோல்சேல்
விலையில் வாங்கி வருவேன். ஃபேஷன் ஸ்டீரீட்டும் செல்வதுண்டு.
தாதர் ஷ்டேஷன் அருகில், போரிவலி ஷ்டேஷன் அருகில் உள்ள
மார்க்கெட்டுகளிலும் பர்ச்சேஸ் செய்ததுண்டு. இங்கெல்லாம் விலை
வசாய் கடைகளை விட குறைவாக இருக்கும்.

ஆனா இப்போ வசாயிலேயே ஹோல் சேல் கடைகள் வந்துவிட்டன.
முன்பெல்லாம் தாதரில் வாங்கும் விலைக்கு இப்பொழுது வசாயிலேயே
வாங்கலாம். அம்ருதாவுக்கு 120 ரூவாய்க்கு டீஷர்ட் வாங்கினே.
நானிருந்த வசாய்தானா என நானே குழம்பும் அளவுக்கு இருக்கிறது
இன்றைய வசாய். ஷ்டேஷனை விட்டு வெளியே வருபவர்கள் நடந்து
செல்ல விரும்பினால் ஸ்கை வாக்கர்ஸ் இருக்கிறது. ஆட்டோக்கள்
ஒன் வே.


ஸ்டேஷனிலிருந்து நடந்துதான் வீட்டுக்குச் செல்வேன். பழைய வீட்டை
விற்றுவிட்டு மாமா புது வீடு வாங்கியிருக்கிறார். அது இன்னமும்
அருகில் தான். பழைய வீட்டுக்குச் செல்லும் பாதையில் என்னை
இறக்கிவிட்டால் தொலைந்து போய்விடுவேன் என்றே நினைக்கிறேன்.
அதே வசாயில் 3 வருடங்கள் வாழ்ந்து பயணப்பட்ட எனக்கு அயித்தான்
வழிகாட்டும் நிலமை!! ஹலோ நீங்க முன்னால அங்கே இருந்தீங்க. நாங்க
அதுக்கப்புறம் வசாய்க்கு நிறைய்ய வாட்டி வந்திருக்கோம். ரீஜண்ட் விசிட்டர்
நாங்க. அப்படின்னு அயித்தான் டயலாக் அடிக்கிறார். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(மும்பைக்கு அலுவல் விஷயமாக போகும் பொழுது மாமாவை போய்
பார்ப்பது அயித்தான் வழக்கம்.)

வசாயே இம்புட்டு மாறியிருக்குன்னா மத்த இடங்களைச் சொல்லணுமா?
வசாயில் லோக்கல் ட்ரையினில் ஏற முன்பு 3 ஆவது ப்ளாட்பாரத்தில்
ட்ரையின் வரும். அந்த ட்ரையின் அல்லது பேசஞ்சர்ஸ், வல்சாட்
எக்ஸ்பரஸ் அந்த ப்ளாட் பாரத்தில் வரும். இப்பொழுது வசாய்ரோட்
ஷ்டேஷனே மாறிப்போச்சே!!! ப்ளாட்பார்ம் பெருசாக்கியிருக்காங்க.
முதல் ப்ளாட்பாரத்தை ஆனந்த்நகர் வரை எக்ஸ்டண்ட் செஞ்சு, அங்க
லோக்கல் வருது.2& 3 ப்ளாட்பாரத்தில் விரார்லேர்ந்து சர்ச்கேட் போகும்
ட்ரையினும் வருது. வசாய் ஷ்டேஷனே புதுசா இருக்காப்ல இருக்கு!!!

இது சர்ச்கேட் ஷ்டேஷன்:

வசாயே இப்படின்னா சர்ச்கேட் எப்படி இருக்கும்னு யோசிச்சுகிட்டே
இருந்தேன். சர்ச்கேட் ஷ்டேஷனை பாக்க ப்ரமிப்பா இருக்கு!! சும்மா
பளபளான்னு இருக்கு. முன்பெல்லாம் வடாபாவ், பேல் வாங்கணும்னா
சர்ச்கேட் சப்வேவுக்கு எதிரில் இருக்கும். ஆனா இப்ப ஷ்டேஷன்
உள்ளயே (டிக்கட் கவுண்டருக்கு எதிரில்) கேண்டின் வெச்சிருக்காங்க.
அம்ருதம்மா வடாபாவ் கேட்டப்ப அங்கேயிருந்துதான் வாங்கினோம்.
நான் ஷாப்பிங் செஞ்ச கடைகள் சப்வேயில இப்ப குறைவா இருக்கு!!
ஆனா அழகா இருக்கு. போலீஸ் பாதுகாப்பு, ஸ்கேனிங்னு சூப்பரா
இருக்கு. சர்ச்கேட்டோட கம்பேர் செஞ்சா வீடி ஷ்டேஷன் வேஸ்ட்.

என்னுடைய 4ஆவது ப்ளாட்பாரத்தின் போட்டோ. இங்கேயிருந்துதான்
நான் விரார் லோக்கல் ட்ரையின் பிடிப்பேன். டேஞ்சரா சிகப்பு கலர்ல
இருந்த லோக்கல் ட்ரையின் கலரைப்பாருங்க இப்ப!!! ம்ம்ம்ம்ம்

தாதர் ஷ்டேஷன் பக்கத்துல இருந்த கடைகள் அந்த இடங்கள் கூட
ரொம்ப மாற்றம் வந்திருக்கு. என்னவோ மொதோ வாட்டி
மும்பை போயிட்டு வந்தா மாதிரி ஒரு ஃபீலிங்ஸ் :((
ஆனா உண்மையைச் சொல்லணும்னா இந்த முறைதான்
திருமணத்திற்கு அப்புறமான என்னுடைய மும்பை விசிட்டில்
நிதானமா ஊர் சுற்றி இருக்கேன்னு சொல்லலாம். 6 வருஷத்துக்கு
முன்னால கூட பசங்களை அழைச்சுகிட்டு ஒரு ரவுண்ட் போய்
வந்தேன். அப்ப இவ்வளவு மாற்றம் இல்ல.

இன்னொரு முக்கியமான புலம்பல் இருக்கு. இத்துப்போன
லோக்கல் ட்ரையின்லதான் பயணம் செஞ்சிருக்கேன். இப்ப
லோக்கல் ட்ரையினே தில்லி மெட்ரோ மாதிரி இருக்கு. உள்ள
ஏசி இல்ல. மத்தபடி சும்ம பளபளான்னுல்ல மின்னுது!!!!
ஃபட்ஸ்ட்கிளாஸ்ல போனோம். செகண்ட் க்ளாசும் ஒண்ணும்
குறைவில்ல. முன்பே சர்ச்கேட்டிலிருந்து விரார்க்கு சில ட்ரையின்கள்
தான் 12 பெட்டிகள் கொண்டா பாரா டப்பா. ஆனா இப்ப எல்லாமே
பாரா டப்பாதான். சில 15 டப்பாக்கள் கொண்ட ட்ரையினும் போகுது.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். கூட்டமும் கூடியிருக்கு. ஞாயிறு அன்று
வசாயில் ட்ரையின் பிடித்தபொழுது உட்கார இடமில்லை ஃபர்ஸ்ட்கிளாஸில்.
2 ஸ்டேஷன் போனதும் எனக்கும் அம்ருதாவுக்கு சீட் கிடைத்தது.
போரிவலியில் அயித்தானுக்கு சீட் கிடைத்தது. தாதர் தாண்டியதும்
கொஞ்சம் மக்கள்தான் இருந்தார்கள். அம்ருதாவுக்கு ஆச்சரியம்.
சர்ச்கேட் சென்றடைந்த பொழுது நாங்கள் மூவர் மட்டும்தான் பொட்டியில்.
வான்கடே ஷ்டேஷன் பார்த்தது, சர்னி ரோடிலிருந்து ஷ்டேஷனுக்கு
பக்கத்திலேயே ரோட் வர ஆச்சரியமாக பார்த்தாள்.

எங்க கையில குத்திடுமோன்னு இருக்கும் லொடலொட தகர
வண்டியில பயணம் செஞ்ச எனக்கு சும்மா டாலடிக்கும் ட்ரையினைப்
பாத்து பொறாமையா இருக்கு!!

தில்லி மெட்ரோ ரயிலில் அறிவிப்பது போல வரப்போகும் ஷ்டேஷன் பற்றி
அறிவிப்பு வருது. இந்த மாதிரி டிஸ்ப்ளேவும் வருது.

வில்லே பார்லே ஷ்டேஷனுக்கு அந்தேரி ஷ்டேஷனுக்கும் நடுவில் இருக்கும்
பார்லே ஃபாக்டரியை மகளுக்கு காட்டினேன். காற்றில் கலந்து வந்த
பார்லே பிஸ்கட் வாசத்தை ரசித்தாள். அந்தேரி ஷ்டேஷன் வந்த பொழுது
இந்த இடத்தில் தாத்தா வசித்ததால் அவர் அந்தேரி தாத்தா என நாமகரணம்
பெற்றார் என பல கொசுவத்திகள் சுற்றிக்கொண்டே வந்தோம்.

சர்ச்கேட் ஷ்டேஷனை அடைந்த பொழுது எங்கள் கம்பார்ட்மெண்டில்
நாங்கள் மூவர் மட்டும்தான். செம குஷி.காலியாகத்தானேம்மா இருக்கு
என்றவளிடம்,”தாயே! நீங்க ஞாயிற்றுக்கிழமை இரவு 8மணிக்கு
சர்ச்கேட் ஷ்டேஷன் சேர்ந்திருக்கீங்க. இதுவே மற்ற நாளாக இருந்தால்
இறங்ககூட முடியாமல் தபதபவென ஓடிவந்து ஏறுவாங்கன்னு” சொன்னதும்
அந்த லோக்கல் ட்ரையின் முன்னே போட்டோ எடுத்துக்க ஆசைப்பட்டாங்க.

போட்டோ எடுத்துகிட்டு வடாபாவ் வாங்கிக்கிட்டு மனமில்லாமல் மும்பைக்கு
பை சொல்லி ஊருக்கு கிளம்பினோம்.

ரொம்பத்தான் மாறிப்போச்சு மும்பை!!!

20 comments:

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா!!.. தன்யளானேன் தென்றல் :-))

கொசுவத்தி ஃபாக்டரியே ஓடியிருக்கே.. நானும் முன்னாடியெல்லாம் வெஸ்டர்ன் லைனில் பயணம் செஞ்சது கிடையாது. இப்ப ரெண்டொரு தடவை கோரேகாவ், மாஹிம் போயிட்டு வந்தப்புறம் ஹார்பர் லைன் கூட சுமாராத்தான் தோணுது.

சிங்கிள் பிளாட்பார்மா இருந்து என்னங்க பண்றது.. ஃப்ளைட் மாதிரி ஜிகுஜிகுன்னு இருக்கற ரயிலும், வர்ற அறிவிப்புகளும் ஜூப்பரா இருக்குதே. சமயங்கள்ல ஹார்பர் லைன்ல ரெண்டொரு ரயில்கள் வரும். அப்பல்லாம் ஜோருதான் :-)))

pudugaithendral said...

வாங்க் அமைதிச்சாரல்,

ஹார்பர் லைனில் ஒரே ஒரு வாட்டி பயணம் செஞ்சிருக்கேன். அதுவும் தனியா. அங்கேயிருந்து தாதர் வரத்தெரியாமல் எப்படியோ கஷ்டப்பட்டு டிக்கட் இல்லாமல் செண்ட்ரலில் பயணம் செய்து தாதர் வந்து அந்தேரி லோக்கலை பிடிக்கும் வரை உயிரே இல்லை. குழப்பமில்லாம இருப்பது வெஸ்டர்ன் என்பது என்னுடைய கருத்து.

ஆமாங்க நிஜமாவே இப்ப ஜிகுஜிகுன்னுதான் ட்ரைன் இருக்கு.

வருகைக்கு நன்றி

துபாய் ராஜா said...

படங்களும், பதிவும் அருமை.

இராஜராஜேஸ்வரி said...

மாறிப்போச்சு மும்பை!!!
nice..

ADHI VENKAT said...

நல்ல கொசுவத்தி.
மும்பையில பர்சேஸ் டீ சர்ட் மட்டும் தானா??

நானானி said...

யம்மாம்..பெரிய கொசுவத்தி!!!!!
சென்ற வருடம் நியூ பாம்பேதான் சுத்திப் பாத்தேன். சவுத் பாம்பேயில் அதே கேட்வே..அதே மகாலட்சுமி கோயில்..அதே சித்திவிநாயக் கோயில். என்ன..க்ராஃப்ட் மார்கெட்தான் பத்து வருடங்களில் மாறியிருக்கிறது. முன்ன மாதிரி ப்ளாஸ்ஸ்டிக் வீட்டு உபயோகப் பொருட்கள் சல்லிசாக கிடைக்குமிடம்தான் காணோம்.

குறையொன்றுமில்லை. said...

இப்பதான் உங்கபக்கம் வரேன்னு நினைக்கிரேன். நானும் கடந்த20- வருஷமா மும்பைவாசிதான். ஆனா அவுட் ஆஃப் மும்பை. அம்பர்னாத். நீங்க இந்தப்பக்கம் வந்து பாத்தீங்கன்னா இது பாம்பேன்னு நம்பவே மாட்டீங்க. எந்த இம்ப்ரூவ் மெண்டும் இல்லாமதான் இருக்கு. அதே லொட, லொட லோக்கலில்பயணம்செய்துதான் தாணா, மலாட் எல்லாம் போய் வரேன் நேருல் வாஷி ஹார்பர் லைன்ல வருது இல்லியா. அங்க்போக குர்லா வந்து வேர வண்டி மாறி வருவேன். அங்கல்லாம் வரும்போதுதான் ஓ, நாம பாம்பேல இருக்கோம்னே நினைக்கத்தோனும்.

அமுதா கிருஷ்ணா said...

வடாபாவ் புராணம் இங்கேயுமா? சாப்பிட ஆவலை தூண்டுகிறது.

Appaji said...

தங்கள் குடும்பத்தோடே...பயணம் செய்தது போல் உள்ளது...(மும்பை சென்று ஆறு வருடங்கள் மேல் ஆகி விட்டது...அதனால் தாங்கள் கூறுவது
எல்லாமே...புதிதாய் உள்ளது.)...( தமிழ்ல டப்பா தட்டறதுல [உங்கள் ஸ்டைல்...] தமிழில் higher ஆ !!!!!!) ...வார்த்தைகள் ...சுனாமி போல் அடித்து ....தள்ளி விட்டீர்கள்..அருமை..!! போட்டோ யார் எடுத்தது..? <<<<<<<<<>>>>>>>>>>அப்படியே இருந்தால் ....நம் பிள்ளைகள் ...அந்த ஊர் பக்கமே வர மாட்டார்கள்:(....ட்ராம்..மட்டுமே இருந்து இருந்தால்......உங்கள் இளமை கால வாழ்க்கை...எப்படி இருந்திருக்கும்....அது போல் ...இதெல்லாம்...காலத்தின் மாற்றம்..
Enjoy....Enjoy)

pudugaithendral said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி துபாய் ராஜா

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

ரொம்பவே மாறிப்போச்சு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

அதெப்படி வெறும் டீஷர்ட் மட்டும்!!
மகனுக்கு பெர்மூடாஸ், எனக்கு ஹேண்ட்பேக் :), அயித்தானுக்கு பெர்மூடாஸ்னு பர்ச்சேஸ் செஞ்சேன். ஆனா இந்த வாட்டி கம்மிதான். மூடு இல்ல. ஆஷிஷ் தில்லி,மணாலி ட்ரிப் போயிருந்தாப்ல. ஐ வாஸ் மிஸ்ஸிங் ஹிம் வெரிமச்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க நானானி,

நல்லா இருக்கீங்களா? பெரிய்ய கொசுவத்தி தான்.

உங்க கருத்துக்கும் வருகைக்கும் நன்றிம்மா

pudugaithendral said...

வாங்க லட்சுமிம்மா,

நான் சில சமயம் உங்க பக்கம் வந்திருக்கேன். அம்பர்நாத் தெரியும். சென்னை மும்பை ட்ரைன் வரும்போது பார்த்திருக்கிறேன். வெஸ்டர்ன் சப் அர்ப் தவிர மற்ற இடமெல்லாம் எனக்கு குழப்பமா இருக்கும். தானேலேர்ந்து திவா-வசாய் ட்ரைன் ஒண்ணு வரும். அப்பவே அது சூப்பரா இருக்கும்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா
மும்பையும் வடாபாவும் மறக்கமுடியாத விஷயம்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

அதென்னவோ எனக்கு பொட்டி தட்டறது கஷ்டமாத் தெரியலை. என்ன டைப்பனும்னு முடிவு செஞ்சு வார்த்தைகளை கோர்த்துகிட்டேன்னா மானிட்டரிலேர்ந்து கண்ணைக்கூட எடுக்காக கடகடன்னு தட்டி முடிச்சாதான் ஒரு நிம்மதி. :))

போட்டோ அயித்தான் தான் எடுத்தாக. பேரு ஸ்ரீராம். அதனால் ஐயாவும் பீ.சீ.ஸ்ரீராம் மாதிரி.

மும்பையில் ஒரு 3 வருடம் தான். ஆனா அந்த வாழ்க்கை கற்றுக்கொடுத்தது ஏராளம்.

வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம்... நல்ல இருக்கு உங்க பகிர்வு.. பிடித்த இடத்துக்குப் போனாலே கொஞ்சம் ஃப்ரெஷ்-ஆன ஃபீங்க்தான்... :)

pudugaithendral said...

ஆமாம் சகோ,

புத்துணர்ச்சி கிடைச்சா மாதிரி இருக்கும்

வருகைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

//ஹார்பர் லைனில் ஒரே ஒரு வாட்டி பயணம் செஞ்சிருக்கேன். அதுவும் தனியா. அங்கேயிருந்து தாதர் வரத்தெரியாமல் எப்படியோ கஷ்டப்பட்டு டிக்கட் இல்லாமல் செண்ட்ரலில் பயணம் செய்து தாதர் வந்து அந்தேரி லோக்கலை பிடிக்கும் வரை உயிரே இல்லை//

உங்க பதிலை இப்பத்தான் பார்த்தேன்ப்பா. ஹார்பரிலிருந்து வெஸ்டர்ன் போகணும்னா வடாலா ரோடு ஸ்டேஷனில் இறங்கிக்கணும். அப்புறம் முதல் ப்ளாட்ஃபார்முக்கு வந்துட்டா சர்ச் கேட்லேருந்து அந்தேரி வரைக்கும் போற எல்லா ரயில்களும் கிடைக்கும். தாதர் வரைக்கும் போய்க் கஷ்டப்பட வேணாம்.

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

மொதோ வாட்டி ஹார்பர் லைனில் தனியா போனதுனால வழி தெரியலை. அப்புறம் கேட்டு தெரிஞ்சு வெச்சுக்கிட்டேன். ஆனா அந்தப்பக்கம் போகும் சான்ஸ் தான் அப்புறம் வரவே இல்லை. :))

மிக்க நன்றி