திரைப்படப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். மனதிற்கு
இதமான பாடல்களைக் கேட்கும் பொழுது தியானம் செய்யும் எஃபக்ட்
நிச்சயம் இருக்கும். பாடல் பித்து பிடித்த எனக்கு கண்ணகி டீச்சர்
தமிழாசிரியையாக வாய்த்தார். +1, +2 அவர்தான் தமிழாசிரியர்.
சந்தம், இதெல்லாம் அழகாக திரைப்படப்பாட்ல்களுடன் புரிய வைத்தார்.
சங்கப் பாடல்கள் படித்து எளியாருக்கும் சென்று சேரும் வகையில்
அந்த தாக்கத்தில் பாடல்களை வடித்தனர் கவிஞர்கள். பாடல் பிறந்த
கதை என ஒவ்வொரு கவிஞர்களும் புத்தகமே போடலாம். அந்தப்
பாடல்களை கேட்ட பொழுது அந்த கவிஞனின் வார்த்தையில் இருந்த
பாவம் நமக்குள் இறங்கும்.
நிலா, தாழம்பூ, முத்து, இப்படி எதையாவது ஒன்றைக் கொண்டு
பாடல்கள் அமைத்தார்கள். காதலை ஒரு தெய்வீக நிலைக்கு கொண்டு
சென்றது இப்படிப்பட்ட பாடல்கள் தான் என்பது என் எண்ணம்.
உறவை வளர்க்கும் வகையில் எத்தனையோ பாடல்கள்.
மாமனுக்கும் மருமகபிள்ளைகளுக்கும் இருக்கும் அந்த உறவை
பாடல்கள் உயிர்க்கொடுத்த போல் இருக்கும்.
சோகத்துக்கும் பாடல், கொண்டாட்டத்திற்கும் பாடல் என
இப்படிப்பட்ட பாடல்களை வகைவகுத்து அப்பொழுதைய ரேடியோவில்
கேட்பதே ஒரு இனிய அனுபவம்.
மெதுவா மெதுவா ஒரு காதல்பாட்டு... கேட்கும்பொழுதே
உள்ளம் துள்ளுமே!!
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு..
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் என்னோடு... என்ன வரிகள்!!!!
தன் வாழ்க்கையின் சம்பவத்தோடு இணைந்து போகும் என
சாதாரண மக்கள் நினைக்கும் அளவுக்கு பாடல்கள் இருக்கும். இந்தப்
பாடலுக்கு உருகாதவர் யாராவது இருந்தால் அவர் கல்நெஞ்சுக்காரராக்த்தான்
இருக்கும்.
ஆனால் இப்பொழுது பாடல்கள் எனும் பெயரில் வெளிவருவது என்ன??
ஒரு சில பாடல்களைத் தவிர எதுவும் மனதில் நிற்பதே இல்லை.
பாடல்களுக்காகவே சக்கைப்போடு போட்ட படங்கள் இப்போது இருக்கா?
என்ன வார்த்தைகள் இருக்கிறது, அதன் அர்த்தம் என்ன? பாவம் என்ன
என புரியாத ஒரு பாடல், அஷ்டகோண்ல் அங்க நடனம் என தரமிழந்து
இருக்கிறது. இதைத்தான் இன்றைய குழந்தைகள் கேட்கிறார்கள். அவர்கள்
மனதில் விஷவிதை விழத்தான் இப்போதைய பாடல்கள் உதவும்.
பாட்டிக்கும் பேத்திக்குமான உறவு... எப்படிபட்டது?
தாயா... மகளா?? மகளே தாயா? என் அம்மம்மாவுக்கும் எனக்குமான
உறவை கண்முன் நிறுத்தும் பாடல் இது.
இன்றைய இசையமைப்பாளர்கள்
இப்படிப்பட்ட பாடல்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று
மக்கள் மீது குற்றம் சாட்ட முடியாது. தப்பி வரும் நல்ல பாடல்களைத்தான்
ஹிட்டாக்குகிறார்கள். ரசிகர்கள் மாறவில்லை. மாற்றப்பார்க்கிறார்கள்.
வேண்டாமே இந்த விபரீதம்!! மனதை வருடும் மென்மையான பாடல்கள்
என்பது போய் இப்பொழுதைய பாடல்கள் மனதை நெருடும் பாடல்களானதுதான்
சோகம். இப்பொழுது வரும் பாடல்கள் இன்னும் 10 வருடங்கள் கழித்து
திரும்ப யாரும் கேட்க மாட்டார்கள். என்றும் ஒலிக்கப்போவது அன்றைய
மெலடிக்கள்தான். சத்தியமான உண்மை இது.
இன்றைய கிளாசிக் பாடல்கள் இந்தப் பாட்டுக்கு முன்னால் வெறும் தூசு
என்பது உங்களுக்கும் ஐயம் ஏதும் இருக்காது.
இனிதான மனம் மயக்கும் இதமான பாடல்கள் வரவேண்டு என
பிரார்த்தனை செய்யும் ஒரு இசை விரும்பி.
20 comments:
சோகத்துக்கும் பாடல், கொண்டாட்டத்திற்கும் பாடல் என
இப்படிப்பட்ட பாடல்களை வகைவகுத்து அப்பொழுதைய ரேடியோவில்
கேட்பதே ஒரு இனிய அனுபவம்
true ...
especially while my mathematical exams I stay tuned with songs ...
வாங்க ஜமால்,
நலமா??
எனக்கு எந்த பரிட்சைக்கும் பாடல்கள் தான். இதற்காக வாங்கிய திட்டுக்கள். :)))
வருகைக்கு நன்றி
இசையிலேயே ..பட்டாசு வச்சுடீங்க...போங்க..!!!
தன்னம்பிக்கை கொடுக்கும்! ஆறுதல் அளிக்கும்! வழி நடத்தும்! - இளையராஜாவின் பாடல்!
http://www.ilayarajahits.in/
’பிள்ளை நிலா’ பாட்டு கேட்டு ரொம்ப நாளாச்சு. நன்றிப்பா. இப்பவும் கண்களில் நீர் திரையிடுகிறது.
இப்போ காரில் போகும்போது, எஃப். எம்.மில் வரும் சில பாடல்களை, தெரியாததுபோல் சேனல் மாற்ற வேண்டி வருகிறது! :-((
வணக்கம் மேடம்..
உங்கள் பதிவும் அதுக்கு சேர்த்த பாடல்களும் அருமை.. உண்மைதான் ... நல்ல பாடல்களை கேட்டு , அதை ஹம் செய்தபடி திரிந்த ஹேப்பி டேஸ்.. அப்போதெல்லாம் புதுகையில் உள்ள பெரும்பாலான தேநீர்கடைகளில் (மோகன்ஸ், நானாஸ்..)பாடல்கள் ஒலித்தபடி இருக்கும்..நேயர் விருப்பமெல்லாம் உண்டு.. பாட்டு கேட்டபடி சைடில் டீ குடித்தபடி ஒரு இளைஞர் பட்டாளமே இருக்கும்.. இப்போது அத்தகு பாடல்கள் மிக அரிதாய் வருகிறது.. பெரும்பாலான பாடல்கள் இசைசத்தமாய்..அசிங்க வரிகளுமாய்..ரசிக்க முடியவில்லை..(ஒரு வேளை எனக்கு வயதாகிவிட்டதோ..?) நன்றி
வாங்க அப்பாஜி,
இடைக்கால பாடல்கள் கேட்கும்பொழுது எப்பொழுதும் மனசுக்குள் மத்தாப்புதான்.
வருகைக்கும் லிங்குக்கும் நன்றி
கானக்கந்தர்வன் வலைப்பூ தெரியுமா. கூட்டு முயற்சியில் யேசுதாஸுக்கு ஒரு சமர்ப்பணமாக எங்கள் முயற்சி
வருகைக்கு நன்றி
வாங்க ஹுசைனம்மா,
எனக்குள்ளும் ஏதோ உருளும் இந்தப்பாடல் கேட்கும்பொழுது.
சமீபத்திய பாடல்களை கேட்கும் மனமே இல்லை.
வருகைக்கு நன்றி
வாங்க ஏகேஎம்,
எங்க அப்பா ஆபீஸுக்கு எதிர்ல இருக்கும் செல்லையாஸ் டீக்கடைய விட்டுடீங்களே. சர்ச் மேட்டுக்கு பக்கத்தில் இருக்கும்(!!) 5 ஸ்டார் கடைகளிலும் ரேடியோதான். பக்திமாலை கேட்டுகிட்டே பால் பாக்கெட் வாங்கிய நினைவுகள் இருக்கு.
(ஒரு வேளை எனக்கு வயதாகிவிட்டதோ..?) //
இந்த லிஸ்டில் நானும் இருப்பேன்னு நினைக்கிறேன். ஏனெனில் எனக்கும் இப்பொழுதைய பாடல்கள் அவ்வளவாக பிடிப்பதில்லை. :))
வருகைக்கு நன்றி
வைரமுத்து என் அபிமான பாடகர் தான். இருந்தாலும் அவரது விமர்சகர்கள், அவர் ஒரே மாதிரி வார்த்தையை 4-5 பாடல்களுக்கு பயன்படுத்துவதாகக் கூறுவதுண்டு - “அழகின் அழகே”, “உயிரின் உயிரே” போல் .
அதற்கேற்றார் போல் நன்பர்களிடம் அவருக்கு ஆதரவாக நான் விவாதிக்கும் பொழுது, ”தாழம்பூ”” பாட்டில் “தாயின் தாயை கொஞ்சிப் பேசு என்பதை ’பாட்டியை கூட விடமாட்டாரா” என என்னிடம் வம்பு செய்த அந்த காலம் நினைவிற்கு வருகிறது.
பழைய நிகழ்ச்சிகளை அசைபோட வைத்தமைக்கு நன்றிகள்.
எல்லாமே அருமையான பாடல்கள். ரேடியோவில் பாடல் கேட்டுக்கிட்டே தான் நானும் படிப்பேன்.
சிந்திய வெண்மணி ரொம்ப நாள் கழிச்சு கேட்கிறேன்..நன்றி.
நல்ல தொகுப்பா அழகா இருக்குப்பா தென்றல்.. ம்.. இப்ப பாடல்கள் அப்படி இல்லைதான்.
வாங்க வேங்கட ஸ்ரீநிவாசன்,
தங்களின் முதல்வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.
வாங்க கோவை2தில்லி,
அப்பெல்லாம் நமக்கு ரிலாக்ஷேஷன் ரேடியோ மட்டும்தான் என்பதால் இசை விரும்பிகள் லிஸ்டும் நீளம்.
வருகைக்கு மிக்க நன்றிப்பா
வாங்க கயல்,
ஆனா இன்றைய தலைமுறையும் ரசிக்கும் விதமா அன்றைய பாடல்கள் இருக்கு. ஆஷிஷுக்கும் அம்ருதாவுக்கும்
மொளனராகம் பாடல்கள், இளையநிலா பாட்டு ரொம்ப பிடிக்கும். கண்ணே கலைமானே மிகவும் ரசிப்பார்கள்.
வருகைக்கு நன்றிப்பா
இந்த தலைமுறையை சேர்ந்த என் மகனும் ஒத்துக்கொண்ட உண்மை இது.பாடல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
அத்தனையும் அருமையான பாடல்கள் சகோ... அப்போது பாடல்கள் ஒலிக்கும்போது இசை பாடல் வரிகள் கேட்கும்படி இருந்தது. இப்போது இருக்கும் பாடல்கள் பாடல் வரிகளை விட பேரோசை தான் கேட்கிறது. இப்போதைய பெரும்பாலான பாடல்கள் வெளிவந்து சில நாட்களுக்குள் மறந்தும் விடுகிறது.
பல வருடங்களுக்கு முன்பு வந்தாலும் இன்னும் நினைவில் இருக்கும் பாடல்கள்தான் எத்தனை எத்தனை...
இப்ப சொன்ன லிஸ்ட் கூட எல்லாமே என் பொன்ணுக்கும் பிடிச்ச பாட்டு..:)
வாங்க கேஎஸ்கோ,
மிக்க சந்தோஷம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க சகோ,
மனதிலேயே ஒட்டாமல் இருக்கிறது இப்போதைய பாடல்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஆஹா சூப்பர் கயல்,
வருகைக்கு நன்றி
Post a Comment