Thursday, November 03, 2011

இல்லத்தரசிகளுக்கான நாள்

எதெதற்கெல்லாமோ ஒரு நாளை டெடிகேட் செய்கிறார்கள்.
வேலண்டைன்ஸ்டே அன்று மட்டுமாவது காதல் பொங்குமா
என ஏங்கும் நெஞ்சங்கள் எத்தனையோ!!
இந்த அமெரிக்கர்களை பாராட்டியாக வேண்டும்.
இன்றைய நாள் நவம்பர் 3 அமெரிக்காவில் இல்லத்தரசிகளின் தினமாக கொண்டாடப்படுகிறது என படித்த பொழுது செம ஆச்சரியம்.

நம்ம நாட்டில் இப்படிச் சொன்னால் சிரிப்பார்கள். இல்லத்தரசிகள் என்றால்
கேவலம்!!. ஒன்றுக்கும் உதவாத ஜென்மங்கள், வேலைக்குச் செல்லும்
திறன் இல்லாத வகை என்றெல்லாம் ஒரு இழிவான எண்ணம் பலருக்கு
இன்றும் இருக்கிறது. ”நீங்க என்ன பெருசா வெட்டி முறிக்கறீங்க. நாங்க
ஆபீஸ் போனதக்கப்புறம் டீவி, இல்லாட்டித்தூக்கம்!! என்ற பேச்சை
கேட்டிருக்காத இல்லத்தரசி இல்லையென்றே சொல்லலாம்.

எத்தனையோ பேர் படித்திருந்தும் நல்ல வேலையில் அமரும் வாய்ப்பிருந்தும்
பிள்ளை வளர்ப்பிற்காகவும், குடும்பத்திற்காகவும் அதையெல்லாம்
ஓரங்கட்டி விட்டு குடும்பத்தை கவனிக்கும் வேலையை செய்கின்றனர்.
பிள்ளைகள் முன்னே அவனமானப்படுத்தப்படும் தாய் ஏதும் தெரியாதவளாகவே
அறியப்படுகிறாள். அவளுள் புதைந்து கிடக்கும் திறமைகளை அடக்கி
வாசித்து அவதிப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும். வீட்டை விட்டு
வெளியே செல்லாமலேயே அந்தக்கால ஹோம் மேக்கர்கள் பிள்ளை
வளர்த்து குடும்பத்தை வளர்த்தார்கள் என்றால், வேலைக்குச் செல்லும்
கணவனுக்கு தோள் கொடுத்து “உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்,
வீட்டை நான் கவனிக்கிறேன்” என்று சொல்லி தங்கள் பங்களிப்பைச்
செய்கிறார்கள்.

நடிகர் சிவக்குமார் தான் வேலையில் பிசியாக இருந்தகாரணத்தால்
குடும்பத்திற்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றும் தன்
மனைவியின் பங்களிப்பு இருந்திராவிட்டால் தன்னால் ஏதும்
செய்திருக்க முடியாது என்றும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
இயக்குனர் பாலச்சந்தர், எழுத்தாளர் சுஜாதா என பலரின் அர்தாங்கிகளின்
பங்களிப்பு இல்லாவிட்டால் அவர்களால் பெரிதாக சாதித்திருக்க முடியாது.
நம் வீட்டை எடுத்துக்கொள்வோமே! அம்மா என்ற ஒரு ஜீவன் இல்லாவிட்டால்,
வீட்டின் நிலமை? ஆனால் வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு கொளரவம்
அவ்வளவாக இருப்பதில்லை. உன் மனைவி என்ன செய்யறாங்க?
வீட்டுல சும்மாதான் இருக்காங்க. என்பார்கள் பலர். அந்தச் சும்மாவாக
அவர்களால் இருக்க முடியுமா என ”சும்மா” உக்காந்திருக்கும் மனைவியின்
இடத்தில் அமர்ந்து அவளது வேலையைச் செய்தால் புரியும்.

ஹோம்மேக்கர்கள் பற்றிய என் முந்தைய பதிவு


அமெரிக்காவில் கொண்டாடப்படும் காதலர்தினம் இந்தியாவில்
கொண்டாடப்படும். ஆனால் ஹோம் மேக்கர் தினமெல்லாம் சான்சே
இல்லை. நமக்கு நாமே கொண்டாடிக்கொள்வோம். விருது அளித்துக்
கொள்வோம்.


நம்மை நாம் உணர்ந்துகொள்வது ரொம்ப அவசியம்.

நான் என்னை விரும்புகிறேன், என்னை
நானே மதிக்கிறேன் என்ற எண்ணம் இல்லத்தரசிகளுக்கு நிச்சயம்
வேண்டும். நம் திறமை நமக்குத் தெரியும். அதை அடுத்தவர்கள்
புரிந்துகொள்ளாவிட்டால் போகிறார்கள். இல்லத்தரசிகள் தங்களின்
உடலை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். நாளில் சில
நேரமாவது தனக்கென்று ஒதுக்கிக்கொண்டு, அதிலும் சில
கொஞ்ச நேரமாவது ஓய்வு எடுத்துக்கொள்வது தப்பே இல்லை.
அவசியமானதும் கூட.


தன்னலமற்ற பொது சேவையில் ஈடுபடுபவர்களைப்போல தன்னலம்
கருதாது தன்னையும் தன் திறமையையும் மறைத்துக்கொண்டு
குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு
என் வாழ்த்துக்களும் வந்தனங்களும்.

நானும் ஒரு ஹோம் மேக்கர் என்பதால் எனக்கு நானே வாழ்த்துச்
சொல்லிக்கொள்கிறேன்.

HAPPY HOUSE WIFE'S DAY

15 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. உங்களுக்கும் எனக்கும் ஏனைய இல்லத்தரசிகளுக்கும் எனது வாழ்த்துக்களும்!!!

பால கணேஷ் said...

உண்மைதான். இல்லத்தைப் பராமரிப்பது என்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. அதைச் செய்பவர்கள் கிள்ளுக்கீரைகளும் அல்ல. நாம் கொண்டாடுவோம். உங்களுக்கு என் ஹோம் மேக்கர்தின நல்வாழ்த்துக்கள்!

Appaji said...

<>>நிச்சயம் பாராட்ட பட வேண்டிய விஷயம்...வாழ்த்துக்கள்...இல்லத்தரசிகள் அனைவருக்கும்...(எங்க வூட்டுகாரம்மவுக்கும் சேர்த்து !!!)

சாந்தி மாரியப்பன் said...

அதானே.. நமக்கு நாமே வாழ்த்து சொல்லிக்காட்டி எப்டி :-)))

எல்லோருக்கும் வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

இல்லத்தரசி மட்டுமில்லீங்க இல்லத்தரசர்களும் உள்ளனர் ...

தாய்மை உள்ளம் கொண்ட எல்லா ஹோம் மேக்கர்களுக்கும்


வாழ்த்துகள் ...

Vidhya Chandrasekaran said...

என்னோட வாழ்த்துகளும்:)

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ராமலக்‌ஷ்மி

வருகைக்கு நன்றி கணேஷ்

வருகைக்கு நன்றி அப்பாஜி (உங்க வூட்டுக்காரம்மா பதிவுகள் படிப்பாங்களா?)

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

தாய்மை உள்ளத்தோடு தியாக உள்ளமும் இருப்பவர்கள் ஹோம்மேக்கர்கள் ஜமால். வருகைக்கு நன்றி

வருகைக்கு நன்றி வித்யா

புதுகை.அப்துல்லா said...

வாழ்த்துகள் :)

அன்புடன் அருணா said...

எல்லோருக்கும் வாழ்த்துகள். !

வல்லிசிம்ஹன் said...

அட. இன்னிக்குத்தான் செய்ததையே ஸ்ரெதுகொண்டு என்னப்பா என்று கொஞ்சம் அலுப்பு தட்டியது. உங்க பதிவு பட்டம் கொடுத்துவிட்டது.!!
உங்களுக்கும் மற்ற எல்லா இல்லத்தரசிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

Appaji said...

<<< (உங்க வூட்டுக்காரம்மா பதிவுகள் படிப்பாங்களா?)>>>பெருமாளை பற்றி என்றால்....படிப்பார்கள். ..உடனே...!!!!!!!!

ஸ்வர்ணரேக்கா said...

சும்மா இருக்கறோம்ன்னு பேரு.. ஆனா.. ஒரு நிமிஷம் கூட சும்மா உட்க்கார முடியாது...

//நமக்கு நாமே கொண்டாடிக்கொள்வோம்.//

கண்டிப்பாக... உங்களுக்கும், மற்ற இல்லத்தரசிகளுக்கு வாழ்த்துக்கள்...

//இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று//
- மிகச் சரியான வாசகம், மிகச் சரியான இடத்தில்..

pudugaithendral said...

ரொம்ப நாளைக்கப்புறம் வலைப்பக்கம் அப்துல்லா அதுக்கே தனிப்போஸ் போடனும் போல இருக்கே. :)) வருகைக்கு நன்றி அப்துல்லா

நன்றி அருணா

நன்றி வல்லிம்மா
நன்றி ஸ்வர்ணரேகா

புதுகை.அப்துல்லா said...

// ரொம்ப நாளைக்கப்புறம் வலைப்பக்கம் அப்துல்லா அதுக்கே தனிப்போஸ் போடனும் போல இருக்கே. :)) வருகைக்கு நன்றி அப்துல்லா

//


கூகிள் பஸ் என்னை ரொம்பவேஏஏஏஏஏ கெடுத்திருச்சுக்கா. அதுல போனதில் இருந்து பிளாகையே மறந்துட்டேன். இருப்பினும் ரெகுலரா வராட்டியும் எப்பயாவது வந்து அக்கா என்ன எழுதி இருக்குன்னு மொத்தமா படிச்சிட்டு ஓடிருவேன். ஓட்டகம் தண்ணி குடிக்கிற மாதிரி :)

pudugaithendral said...

ஓ அது மேட்டரா!!

நிறைய்ய பேரு என்னடா எழுதறதை நிப்பாட்டிடாங்களா? இல்லை வேலை பளுவான்னு யோசிச்சுகிட்டு இருக்க எல்லோரும் பஸ்ஸுல போனீங்களா? நல்லவேளை எந்த பஸ்ஸையும் நான் பிடிக்கலை. :))

வருகைக்கு நன்றி தம்பி