Wednesday, January 18, 2012

ஹைதை ஆவக்காய பிரியாணி (18-1-12)

போன வருஷம் இந்நேரம் கிலோ 70,80,100ன்னு தங்கம்போல
ஆனை விலை குதிரை விலை விற்ற வெங்காயம் 1 1/2 கிலோ 10
ரூவாவுக்கு கிடைக்குது. இந்த சீசன்ல தக்காளி கிலோ 5 ரூவா.
இரண்டு வாரமா மார்க்கெட் நிலவரம் இப்படி இருக்கு!!!
மத்த ஊருல எல்லாம் எப்படியோ?? வெங்காயம் விளைச்சல்
அதிகமாகி அதனால நஷ்டத்துக்கு ஆளான விவாசாயிகள்
நடு ரோடில் வெங்காயத்தை கொட்டி தர்ணா செஞ்சிருக்காங்க
குண்டூர் பக்கம்!!! பாவம்.
**************************************************************
ஜனவரி 31 ஹைதைக்கு வந்த பொழுது கூட அம்புட்டு குளிர்
இல்லை. பொங்கலுக்கு 4 நாள் முன்னாடி வரைக்கும் பகல் நேர
வெப்பம் 33 டிகிரிக்கு கூட போச்சு. சடனா ஒரு சாயங்காலம்
10 நிமிஷ மழை. அப்புறம் மொத்தமும் மாறிப்போச்சு. குளிர்,
குளிர் குளிர் தான். போன வருஷம் பகல் நேர வெப்பம் 7 டிகிரி
ஆனப்போ கூட இந்தக் குளிர் இல்லை. ஆனா போகி, பொங்கல்
இரண்டு நாளும் இரவு நேரம் வெப்பம் 7 அல்லது 8 :) ம்ம்
பொங்கல் முடிஞ்சிருச்சு. இனி காலை நேரப்பனி மட்டும் தான்.
அப்படியே டெம்பரேச்சர் கூடி ஏபர்ல், மே மாசம் எங்க போய்
நிக்குத்துன்னு பாக்கணும்!!!
**********************************************************
ஊருக்கு போயிருந்தப்ப மனசுல பட்ட மேட்டரை சொல்ல
மறந்திட்டேனே. திருச்சியிலிருந்து புதுகை போகும் பொழுது
சாலையோரம் சோலையா இருந்த மரங்கள் எல்லாம் வெட்டி,
வேரோட சாய்க்கப்பட்டு இருக்கு. பைபாஸ் ரோட் போடப்போறாங்களாம்.
மதுரை-மேலூர் ரோடு பாத்தப்ப ஷாக்காகிட்டேன். புதுகை- மதுரை
செல்லும் பாதையில் புளியாமரம் தான் இரண்டு ரோட்டோரமும்
இருக்கும். இந்தப்பக்கத்துலேர்ந்து மரக்கிளை அந்தப்பக்கம்
போய் கதை சொல்றது போல இருக்கும். அதெல்லாம் இனி
இருக்காது. பைபாஸ் போடறேன்னு சாலையோரம் இருந்த
மரத்தை எல்லாம் வெட்டி ரோட் அகலமாக்கினாங்களா! இப்ப
அந்த அகலமான ரோட்டுக்கு பக்கத்துலேயே விளைச்சல் நிலங்கள்
வந்திருந்து!! மாற்றம் நல்லதுன்னு எடுத்துக்கறதா? இல்ல இதை
என்னன்னு சொல்வது?
*********************************************************************
இன்னொரு மேட்டர். எனக்கு இதை எப்படி சொல்வதுன்னும் புரியலை!!
என்னமா இதுக்கு ரியாக்ட் ஆவுறதுன்னும் தெரியலை. தம்பிக்கு
பொண்ணு பாத்துகிட்டு இருக்கோம். அம்மா ஏதோ புத்தகத்துல
விளம்பரம் கொடுத்திருந்தாங்க போல. அதைப்பாத்திட்டு ஒரு
பொண்ணோட அம்மா (சென்னைதான்) போன் செஞ்சாங்க.
உங்க மகன் வெளிநாட்டுலதான் இருப்பாரா?: பொண்ணோட அம்மா
“தெரியலீங்க. அவருக்கு எங்க வேலை எப்படி இருக்குதோ?
அதைப்பொறுத்துதான் இருக்கற இடம். நாளைய பத்தி
இன்னைக்கே எப்படி முடிவு செய்ய முடியும்?” : இது எங்கம்மா.

அடுத்ததுதான் முக்கியமான கேள்வி!!!!

”அது சரி. நாளைக்கு உங்க பையன் போகும் ஊருக்கெல்லாம்
நீங்களும் கூடவே போய் இருப்பீங்களா!!???!!”””

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்ன சொல்ல? பையனுக்கு கல்யாணம் முடிச்ச கையோட
பையனைப் பெத்தவங்க வானபிரஸ்தம் அல்லது அனாத
ஆஸ்ரமம், முதியோர் இல்லம் போறது இப்படி ஏதாவது
ஒண்ணு செய்ய ஒத்துக்கிட்டாதான் பொண்ணை
கொடுப்பது பத்தி பேசுவாங்க போல இருக்கே. கன்னியாதானம்
வாங்கின கையோட கல்லு கட்டி கடல்ல தள்ளினாத்தான்
சம்சாரம் செய்ய வருவேன்னு சொல்வாங்க போல இருக்கு!!!

ஏன்?? ஏன்?? ஏன் இப்படி?????????????????????
****************************************************************

கொலவெறி பாட்டு தான் இப்ப தேசிய கீதம். எல்லா மொழியிலயும்
மொழி பெயர்த்துட்டாங்க. பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில இந்தப்
பாட்டு ஹிட்டானதற்கான காரணம், ஜோசியம் எல்லா வெச்சு
சிறப்பு நிகழ்ச்சி வருதுன்னு சொன்னாங்க. நல்லவேளை நான்
பார்க்கலை. இந்தப் பாட்டைப் பாடியதற்காக சப்பான் நாட்டுல
தனுஷுக்கு விருது கொடுக்கறாகளாம்மாம்!!! பொங்கல் அன்னைக்கு
நடந்த பட்டிமண்டபத்துல பாரதி பாஸ்கர் சொன்னது போல
“இப்ப பாட்டுங்க ஏன் வெறி பிடிச்சா மாதிரியே வருது??””
அதுதான் பிடிக்கலை. ஒல்லி உடம்பை வெச்சுகிட்டு தனுஷ்
15 பேரை பந்தாடறதையே பார்க்க சகிக்கலை. இதையும்
ஹீரோயிசம்னு சொல்றாங்க. கடவுளே!!!!!!!!!!!!!
முதல்ல 28 வயசு பையனுக்கே உரிய உடல்வாகை அமைச்சுக்கச்
சொல்லி அவங்க சொந்தக்காரங்க யாருமேவா சொல்லித்தர
மாட்டாங்க????13 comments:

கோமதி அரசு said...

புதுகை- மதுரை
செல்லும் பாதையில் புளியாமரம் தான் இரண்டு ரோட்டோரமும்
இருக்கும். இந்தப்பக்கத்துலேர்ந்து மரக்கிளை அந்தப்பக்கம்
போய் கதை சொல்றது போல இருக்கும். அதெல்லாம் இனி
இருக்காது. பைபாஸ் போடறேன்னு சாலையோரம் இருந்த
மரத்தை எல்லாம் வெட்டி ரோட் அகலமாக்கினாங்களா! இப்ப
அந்த அகலமான ரோட்டுக்கு பக்கத்துலேயே விளைச்சல் நிலங்கள்
வந்திருந்து!! மாற்றம் நல்லதுன்னு எடுத்துக்கறதா? இல்ல இதை
என்னன்னு சொல்வது?//

கதை சொல்வதைப் பார்க்க முடியாது.
சாலையோரம் அசோகர் மரங்களை நட்டார் என்று பாடபுத்தகத்தில் படித்துக் கொள்ள வேண்டியது தான்.

பைபாஸ் ரோட்டில் இப்போது அரளி செடி பூக்களுடன் தலை ஆட்டி நம்மை வரவேற்கிறது.

கோவை2தில்லி said...

இங்கயும் குளிரோ.... குளிர்.......
இரண்டு நாள் மழை வேறு பெய்திருக்கிறது. என்ன ஆகுமோ....

ஜப்பான் நாட்டு பிரதமர் தில்லி வந்திருந்த போது தனுஷை கூப்பிட்டு விருந்து கொடுத்தார்களாம்....

அமைதிச்சாரல் said...

நாரோயில்லேருந்து திர்னேலி போற பாதையிலும் முப்பந்தல்ங்கற ஒரு இடத்தில் இப்படித்தான் பகல்லயே இருளோன்னு இருக்கும். பஸ்ஸுல ஹெட்லைட் போட்டுட்டு ஓட்டுவாங்க. அவ்ளோ ஆலமரமும் அரசமரமுமா இருக்கும். இப்ப ரோடு போடறதுக்காக வெட்டினதுல எல்லாம் போச்.

சென்சிடிவ்..விஷயம்தான். எல்லாமே தனக்கொரு நியாயம் மத்தவங்களுக்கொரு நியாயம்ன்னு ஆகிட்டதால இருக்குமோ. ஒன்னும் புரியலை போங்க.

எம்.எம்.அப்துல்லா said...

// பிப்ரவரி 31 ஹைதைக்கு //

??????????????

புதுகைத் தென்றல் said...

கதை சொல்வதைப் பார்க்க முடியாது.
சாலையோரம் அசோகர் மரங்களை நட்டார் என்று பாடபுத்தகத்தில் படித்துக் கொள்ள வேண்டியது தான்.

பைபாஸ் ரோட்டில் இப்போது அரளி செடி பூக்களுடன் தலை ஆட்டி நம்மை வரவேற்கிறது.//

வாங்க கோமதிம்மா,

ஆமாம். அதுவும் மீடியட்டருக்கு அந்த பக்கத்திலிருந்து ஹெட்லைட் ஓட்டுனர் கண்ணில் விழுவதை இது தவிர்க்குது என்பதில் கொஞ்சம் சந்தோஷமே.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

இங்கேயும் ஒரு மாலை திடும்னு மழைதான். ம்ம்ம்

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

அப்படி கேட்ட அம்மா நாளைக்கு தன் நிலை என்னன்னு கொஞ்சம் யோசிச்சு பேசிருந்திருக்கலாம். ம்ம்ம்

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்துல்லா,

ஏதோ ஞாபகத்துல டைப் அடிச்சிட்டேன். :))

சுட்டியதுக்கும் வருகைக்கும் நன்றி

துளசி கோபால் said...

பேசாம தாய்தகப்பன் இல்லாத பையருக்குத்தான் பொண்ணு கொடுப்போமுன்னு இருந்துருக்கலாம் அந்தம்மா:(

முந்தியெல்லாம் நிறைய சினிமாக்களில் நாயகன் நாயகிக்கு அப்பா அம்மாவே இருக்கமாட்டாங்க:-)

துளசி கோபால் said...

ஃபாலோ அப்

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசி டீச்சர்,

பேசாம தாய்தகப்பன் இல்லாத பையருக்குத்தான் பொண்ணு கொடுப்போமுன்னு இருந்துருக்கலாம் அந்தம்மா//

அதான் என் கோவமும்.

உங்க வருகைக்கு மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

//என்னமா இதுக்கு ரியாக்ட் ஆவுறதுன்னும் தெரியலை/

”ஓஹோ, அப்ப நீங்களும் உங்க மகன்கூட இருக்க மாட்டீங்கல்ல. நல்லதாப் போச்சு. எங்க சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்கு. உங்க பையன் ஜாதகம் கொடுங்களேன்”ன்னு இருக்கணும் ரியாக்‌ஷன்!! அத்தோட, ”நாளைக்கு உங்க பேரன்கூடயும் உங்க மக இருக்க முடியாதுல்ல. அதனால மறக்காம இப்பவே ஒரு நல்ல முதியோர் இல்லத்துல அவளுக்கு இடம் ரிஸர்வ் பண்ணி வச்சுடுங்க”ன்னு சொல்லணும்!!

ஒருவிதத்துல, நல்லவங்களாட்டம் நடிக்காம, இவங்க இப்படி ஓப்பனாக் கேக்குறதும் நல்லதுதான்!!

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா

அப்பா என் கிட்ட போனை கொடுத்திருந்தா கச்சேரி கொடுத்திருப்பேன். விட்டுட்டாரு.

வருகைக்கு நன்றி