Thursday, January 19, 2012

மண்ணில் வந்த நிலவே!!! என் மடியில் பூத்தமலரே!!!!!!எங்க அம்ருதம்மாவுக்கு இன்று பிறந்த நாள்.வழக்கம் போல டிசம்பர் முதலே கவுண்ட் டவுன்
ஆரம்பமாயிருச்சு. இந்த வாட்டி இன்னமும் கூட.
காரணம் மேடத்துக்கு இது 12ஆவது பிறந்தநாளாம்.
ப்ரீடீனாம்!!! (எனக்கு இப்பத்தான் ப்ரீகேஜியில சேர்த்தது
மாதிரி இருக்கு)

சென்னை போயிருந்த பொழுது ஆர் எம் கேவியில்
பர்ச்சேஸ் செய்து அந்த பில்லை அண்ணன் தலையில்
கட்ட நினைச்சிருந்தாங்க மேடம். தானே வந்து
ஆஷிஷ் அண்ணாவை காப்பாத்திருச்சு!!!

இந்த வாட்டி எனக்கு ட்ரடிஷனல் ட்ரெஸ் வேணாம்
என பெப்ஜீன்ஸும் ஒரு டாப்பும் எடுத்துகிட்டாங்க.
கேக் ஆர்டர் செஞ்சாச்சான்னு ஒரே டார்ச்சர் தான்.

மெனு இட்லி வித் வேர்க்கடலை சட்னி, மதியம்
சீஸ் பாஸ்தா... ரவா கேசரி. டின்னர் அவங்க
கேட்ட இடத்தை விட்டு மத்த எல்லா இடமும்
சொல்லிக்கிட்டு இருக்கோம். :)) தாதூஸ் ஜரோக்கா
(ஏற்கனவே பதிவு போட்டிருக்கேன்) போகணுமாம்.

இந்த வாட்டி அம்மாவுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ப்ரஸண்ட்.
அவங்க ஆசைப்பட்ட கீ போர்ட் கம் பியானோ. ஒரு வாரம்
முன்னாடியே ஆர்டர் செஞ்சு நேத்து சாயந்திரமே கூட்டிகிட்டு
போய் வாங்கி வந்தோம். செம குஷி. டிரினிட்டி காலேஜ்
லண்டன் கோர்ஸ் படிக்கறாங்க. 8 கோர்ஸும் முடிக்கதிட்டம்
போட்டிருக்காங்க.

போனமாசம் மேத்ஸ் ஒலிம்பியாட் பரிட்சை எழுதறேன்னு
சொல்லி பணம் வாங்கிப்போய் கட்டினாங்க எங்க
அம்ருதம்மா. ஸ்கூல் லெவலில் 6ஆவது ரேங்க். ஸ்டேட்
லெவலில் 1186த் ரேங்னு நேத்துதான் ரிசல்ட் நெட்டுல
பாத்தோம்.


அதற்காகவும் பிறந்த நாளுக்காகவும் எங்கள் மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

நல்ல ஆரோக்கியத்தோடு, எல்லா வளமும் பெற்று
வாழ ஆசிகள்.

அன்புடன்
அம்மா, அப்பா, ஆஷிஷ் அண்ணா

டிஸ்கி:
இந்தப் பாட்டில் P.G.MARTIN கடையை பார்க்கும் போதெல்லாம்
”ஐயோ அப்படியே வலது பக்கம் திரும்பினால் திம்பரிகஸ்யாய,
நம்ம வீட்டுக்கு போயிடலாம்னு இருக்கு”!!!! என்பாயே
அம்ருதம்மா அதற்காக இந்தப் பாட்டு.


19 comments:

Mahi said...

Happy B'day to Amrutha! :)

கோமதி அரசு said...

அம்ருதம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எல்லா வளங்களும், நலங்களும் பெற்று வாழ ஆசிகள்.
பாடல்கள், அருமை.

கோமதி அரசு said...

இந்த வாட்டி அம்மாவுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ப்ரஸண்ட்.
அவங்க ஆசைப்பட்ட கீ போர்ட் கம் பியானோ. ஒரு வாரம்
முன்னாடியே ஆர்டர் செஞ்சு நேத்து சாயந்திரமே கூட்டிகிட்டு
போய் வாங்கி வந்தோம். செம குஷி. டிரினிட்டி காலேஜ்
லண்டன் கோர்ஸ் படிக்கறாங்க. 8 கோர்ஸும் முடிக்கதிட்டம்
போட்டிருக்காங்க.//
திட்டம் பலிக்கட்டும்.
வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

ஆஹா..... பனிரெண்டு ரொம்ப ஸ்பெஷல் நம்பர், கேட்டோ!!!!

அமிர்தமாய் இனிக்கும் அம்ருதாவுக்கு எங்கள் மனமார்ந்த ஆசிகளும் பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)களும்.

ம்யூஸிக் படிக்கும் குழந்தைகளுக்கு மற்ற விஷயங்களிலும் மனதை ஒருமுகப்படுத்தும் நல்ல கவனம் கிடைக்குமாம்.

மகள் பியானோவும், ஃப்ளூட்டும் கிரேடு 8 வரை செஞ்சுருக்காள். அம்ருத் விஷயத்தை சாயந்திரம் அவள் வரும்போது சொல்றேன். சந்தோஷப்படுவாள், 'அக்கா':-)

கணேஷ் said...

அம்ருதம்மாவிற்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

AKM said...

WISHING YOU A VERY HAPPY BIRTH DAY TO AMRUTHA.. I WISH MANY MORE HAPPY RETURNS OF THE SAME.. -ANBUDAN AKM

வித்யா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்ருதா.

Appaji said...

தங்களது மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!! (தானே க்கு பிறகு இப்பொழுதுதான் ப்ளாக் பக்கம் வந்து உள்ளேன்..)

புதுகைத் தென்றல் said...

நன்றி மஹி

நன்றி கோமதிம்மா. ஆசிர்வாதத்துக்கு மிக்க சந்தோஷம்.

வாங்க துளசி டீச்சர். இனிஷியல் க்ரேட் டிஸ்டிங்ஷனில் பாஸ் செஞ்சிருக்காங்க மேடம். இப்ப முதல் மற்றும் இரண்டாவது க்ரேடு ஒரே சமயத்துல செய்யறாங்க. :) மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி கணேஷ்,

நன்றி ஏகேஎம் (ஊருக்கு வந்திருந்தேன்)

நன்றி வித்யா

நன்றி அப்பாஜி (நீங்க சென்னைப்பக்கம் ஏதும் போயிருந்தீங்களா?)

கோவை2தில்லி said...

அம்ருதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இறைவன் அருளால் அவளுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும்.

ஆதி, வெங்கட் மற்றும் ரோஷ்ணி.

அமுதா கிருஷ்ணா said...

அம்ருதாவிற்கு அமுதாவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சிநேகிதி said...

அம்ருதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Appaji said...

(நீங்க சென்னைப்பக்கம் ஏதும் போயிருந்தீங்களா?)>>>>>>>>இருப்பதே கடலூரில் தானே.!

அமைதிச்சாரல் said...

அம்ருதாம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

புதுகைத் தென்றல் said...

நன்றி கோவை2தில்லி,
நன்றி அமுதா
நன்றி சிநேகிதி

ஓ அப்படியா அப்பாஜி. கடலூர் பற்றி பத்திரிகையில் படித்தேன். :(

நன்றி அமைதிச்சாரல்

காற்றில் எந்தன் கீதம் said...

அம்ருதாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கொஞ்சம் லேட் மன்னிச்சு...

ராமலக்ஷ்மி said...

அம்ருதாவுக்கு (தாமதமான) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

புதுகைத் தென்றல் said...

நன்றி சுதர்ஷிணி,

நன்றி ராமலக்‌ஷ்மி