Monday, January 09, 2012

அம்மை அப்பன் தரிசனம்

அடுத்த நாள் காலை எழுந்ததும் முதல் பிள்ளைகள் ஒரே
ரோதனை. சென்ற முறை பழனி சென்றபொழுது அவ்வளவாக
படுத்தவில்லை. ஆனால் இந்த முறை தாங்க முடியவில்லை.
எல்லாம் எங்களுக்கு திருமணம் நடந்த கல்யாண சத்திரத்தை
பார்க்க வேண்டும் என்று ரோதனை. எங்கள் திருமணம்
பழனி அடிவாரத்தில் இருக்கும் நெய்க்காரப்பட்டி சத்திரத்தில்
நடந்தது. பிள்ளைகளின் ரோதனை தாங்காமல் அயித்தான்,
அப்பா பிள்ளைகளுடன் சத்திரம் பார்க்கச் செல்வது என்றும்
நானும் அம்மாவும் விபூதி, படங்கள் வாங்குவது என்றும்
முடிவு செய்தோம்.

(நாங்கள் தங்கியிருந்த திருப்பூர் லாட்ஜில்
தான் அயித்தானின் அலுவலக நண்பர்களுக்காக ரூம்
புக் செய்திருந்ததாம். ரூம் புக் செய்ய என் சின்ன மாமா,
பெரிய மாமாவுடன் அப்பா போயிருந்த பொழுது அங்கே
ஒரே கூட்டம் கூடிவிட்டது. சின்ன மாமா அசப்பில்
நடிகர் நெப்போலியன் போல இருப்பார். :)) இந்த
மாமாதான் கராத்தே மாஸ்டர்)

நானும் அம்மாவும் வாங்கிக்கொண்டு அயித்தான்
நிற்க சொன்ன இடத்தில் வந்து நின்றோம். 10 நிமிடத்தில்
இவர்கள் காரில் வந்தார்கள். சத்திரமே மாறிப்போச்சாம்.
விசாலமான இடம். சத்திரத்திற்கு முன்பு கீத்து
கொட்டகை போட்டு சூப்பரா இருக்கும். அந்த கொட்டகை
எடுத்துவிட்டார்களாம். அங்கேயிருந்து மதுரைக்கு பயணமானோம்.

மதுரையில் என் சித்தி இருக்கிறார். எங்கள் வீடு ஒன்றும்
அங்கே இருக்கிறது. வாடகைக்கு விட்டிருக்கிறோம். பார்த்தே
3 வருடமாகிறது என்று போனோம். என் சித்தி, தங்கைகள்
ஆவலுடன் காத்திருந்தார்கள். மதுரை அக்ரிணி வளாகத்தில்
கேட்டட் கம்யூனிட்டியில் அப்பார்ட்மெண்ட். பெரிய தங்கை
காலேஜ் போயிருக்க, சின்னவளுக்கு அன்று லீவு என்று
வீட்டில் இருந்தால். (மேடம் ஏசிஎஸ் படிக்கறாங்க)

6 மணி வாக்கில் பெரியவளுடன் வந்துவிட்டாள். என்றும்
இல்லாத திருநாளாக மேடம் பசி என்று சொன்னாள்.
பனீர் புர்ஜி தோசை செய்து கொடுத்தேன். விரும்பி
சாப்பிட்டாள். 8 மணிவாக்கில் மீனாட்சியையும்,
சொக்க நாதரையும் தரிசிக்க போனோம். சரி கூட்டம்.
சிறப்பு தரிசனத்திற்கு 100 ரூபாய் டிக்கெட் வாங்கிக்
கொள்ளுங்கள் என்று காரியதரிசிகள் சொல்ல அதிர்ந்து
போனோம். நாங்கள் மொத்தம் 7 பேர். சித்தி 15 ரூபாய்
டிக்கெட் போதும் என்றார். அதிலும் கூட்டம்தான். ஆனால்
ஈசியாக நகர்ந்து கொண்டிருந்தது. வெள்ளை பட்டில்
அரக்கு பார்டர் புடவை உடுத்தி அன்னை காட்சியளித்தாள்.
அங்கேயிருந்து ஓடு ஓடென்று சொக்கன் சந்நிதிக்கு
போனோம். அர்த்தஜாம பூஜைக்கு நாழியாகிறது
என்று எங்களோடு நிறுத்திவிட்டார்கள். வரிசையில்
நின்று நாங்கள் 7 பேரும் உள்ளே நுழைந்ததும்
கதவையே மூடிவிட்டார்கள். சொக்கநாதர் புறப்பாடு
வேறு. தரிசித்து ஓடி வந்தால், பின்னாடியே சங்கு
ஊதிக்கொண்டு சொக்கரை பல்லக்கில் வைத்து பள்ளியறைக்கு
எடுத்து சென்று கொண்டிருந்தார்கள். வெளிநாட்டினர்
மிக உரிமையோடு போட்டோ எடுத்து, வீடியோ
எடுத்து செய்துகொண்டிருக்க, ஆஷிஷ் கண்ணில்
இங்கே வீடியோ,புகைப்படம் எடுக்க கூடாது எனும்
போர்ட் பட்டது. ஒரே வேளை இது இந்தியருக்கு
மட்டும் போடப்பட்ட சட்டம் போல இருக்கு!!!!

வெளியே தள்ளி கதவை சாத்தியது போல என்பார்களே
அப்படி ஒரு நிலை. கோவில் சாத்தும் நேரம். :))
தெற்கு கோபுரம் வழியாக உள்ளே வந்தவர்கள்
கிழக்கு கோபுரம் வழியாக வெளியே வந்தோம்.
அங்கேயிருந்து திரும்ப தெற்கு கோபுரம் பக்கம்
சென்று விட்டிருந்த செருப்பை எடுத்துக்கொண்டு
ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றோம். சித்தப்பா
வீட்டில் எனக்கு பிடித்த அல்வா வாங்கி வைத்திருந்தார்.

அடுத்த நாள் காலை எப்போதும் போல கோவிலுக்கு
போய்விட்டு வந்து சித்தப்பா எனக்கு மிக மிக
பிடித்த புளிப்பொங்கல் செய்து கொடுத்தார். :))
(ரெசிப்பி கத்துகிட்டாச்சு) சுடச்சுட சாப்பிட்டு
புதுகை கிளம்பியாச்சு. ஆஹா மேலூர் வந்ததே
தெரியாமல் சூப்பரா ஹைவே. புதுகை வந்து
ரெஸ்ட் எடுத்தோம்.

திரும்ப குழந்தைகள் தொந்திரவு ஆரம்பம்!!!
“எப்பம்மா?? சென்னை போவோம்??!!!””
அடுத்த நாள் காலை சென்னை கிளம்பியாச்சு.
திருச்சியை தாண்டியிருக்க மாட்டோம் அப்பா
போன் செய்தார். புயல் மழையாம் பார்த்தும்மா
என்றார். ஆகா என்று இருந்தது. பிள்ளைகளோ
“காரில் 5 மணிநேரம் ஆகிறதே. இதைவிட
சீக்கிரமா சென்னை போக முடியாதா??!! என
தொண தொணப்பு. :)))

சென்னையை நெருங்க நெருங்க இருட்டிக்கொண்டு
வந்தது. செங்கல்பட்டிற்கு முன்னாலேயே மழை
ஆரம்பித்துவிட்டது. தாம்பரத்தை அடைந்த பொழுது
செம மழை.

அடுத்து?!!!! எஸ் அடுத்த பதிவில்

12 comments:

பால கணேஷ் said...

அட... எங்க ஊருக்குப் போய் மீனாக்ஷி அம்மாவையும் சொக்கநாதரையும் பாத்துட்டு வந்தீங்களா... ரொம்ப சந்தோஷம். அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருப்பு.

மாதேவி said...

அம்மை அப்பன் தர்சனம் முடித்து சென்னை மழையிலா ....

இராஜராஜேஸ்வரி said...

சங்கு
ஊதிக்கொண்டு சொக்கரை பல்லக்கில் வைத்து பள்ளியறைக்கு
எடுத்து சென்று கொண்டிருந்தார்கள்.

அருமையாய் தரிசனம் செய்துவைத்தீர்கள்.. வாழ்த்துகள்..

பாச மலர் / Paasa Malar said...

மதுரை மீனாட்சி கோவில் போய்வந்தாலே எல்லோரும் புலம்புவது இதுதான்...நம்ம ஊருக்கு போயிட்டு வந்திருக்கீங்க....மதுரை எப்டிருக்கு?

புத்தாண்டு வாழ்த்துகள் கலா..

pudugaithendral said...

வாங்க கணேஷ்,

உங்க ஊர் மதுரையா? சூப்பர் எங்க அப்பா, பாட்டி ஊர் மதுரைதான். பொழப்புக்காக புதுகை வந்து இப்ப புதுகை காரங்க ஆகிட்டோம்.

மீனாக்‌ஷியும் சொக்கரும் நலம்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க மாதேவி,

அதுவும் தான் :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

அவ்வளவு தாமதமா எப்பவும் கோவிலுக்கு போனதில்லை. அன்றைக்கு அதெல்லாம் பார்க்க கொடுத்து வைத்திருக்கு. வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

வாழ்த்துக்கு நன்றி, உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

மதுரையில் ரொம்ப ஷார்ட் ட்ரிப்பா இருந்ததால அதிகம் கவனிக்க முடியலை. கோவிலை சுத்தி பார்க்கிங் இல்லாம நடைபாதை நல்லா இருக்கு. இல்லாட்டி வாகன நெரிசலா இருக்கும்.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

நான் கேட்டேங்கறதுக்காகவே ரெசிப்பி கத்துக்கிட்டு வந்த தென்றல் வாழ்க :-)

அம்மையப்பன் தரிசனம் நல்லா கிடைச்சது போலிருக்கு..

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

சீக்கிரம் ரெசிப்பி பதிவு போடுறேன். :))

அம்மையப்பர் தரிசனம் நல்லபடியா ஆச்சு.

வருகைக்கு நன்றி

ADHI VENKAT said...

சுவாமிமலையில் ஆரம்பித்து பிள்ளையார்பட்டி, பழனி வழியாக உங்களை மதுரையில் வந்து பிடித்து விட்டேன். நல்லதொரு பயணம்.

புளிப்பொங்கல் எனக்கும் பிடித்த ஐட்டம்...

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

ஒருவழியா என்னை பிடிச்சிட்டீங்க. :))

உங்களுக்கு புளிப்பொங்கல் பிடிக்குமா சூப்பர். வருகைக்கு நன்றி