பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு கலை. என் மகளின் பள்ளி ஆசிரியை
சொல்வது போல குழந்தை பிறந்த பிறகுதான் பிள்ளை வளர்ப்பு
பயிற்சி ஆரம்பமாகிறது. எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருளை
வாங்கினாலும் அத்துடன் ஒரு மேனுவல் புத்தகம் இருக்கும்.
எப்படி பழகுவது என்று தெரியும். ஆனால் குழந்தை வளர்ப்பு
அப்படி இல்லை. நாமே தவறு செய்து கற்று தேர்வதுதான்
நிஜம். முதல் குழந்தை பிறந்த பொழ்து பெற்றோர் பயிற்சி
ஆரம்பமாகி அடுத்த குழந்தை பிறக்கும் பொழுது எக்ஸ்பர்ட்
ஆகிவிடுவோம். வளர்ந்த குழந்தை வளர்ப்பு எப்படி இருக்கும்?
அதென்ன வளர்ந்த குழந்தை? அதை பற்றித்தான் இந்தப் பதிவு.
பிள்ளைகளை வளர்க்க தன் ஆயுளை செலவழித்து, பல
தியாகங்களை செய்த அம்மா, அப்பாவிற்கு இணையான
தெய்வம் உலகில் ஏதுமில்லை. அவர்களின் வழிகாட்டுதலினாலும்
அழகான வளர்ப்பு முறையினாலும்தான் ஒரு நல்ல
குடிமகனாக/மகளாக பிள்ளை வளர்கிறது. அதிலும்
அன்னையின் பங்கு சொல்லிவிட முடியாது. கணக்கு
போட்டு செட்டில் செய்து விட முடியாத ஒரு செயல்
பெற்றோர்களின் சேவை.
ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அப்பாதான் ஹீரோ!!
அம்மாதான் ஹீரோயின். திருமணமாகி குழந்தை
பெற்ற பிறகு கூட ஆணோ பெண்ணோ அவரவர்
அன்னை மடி தரும் சுகமே சுகம்.
சின்னக்குழந்நதையை வளர்ப்பது ஒரு சுகமான
சுமை என்றால் வயது முதிர்ந்த பெற்றோரை
பார்த்துக்கொள்வதும் அது போலத்தான். (இவர்கள்
தான் நான் சொன்ன வளர்ந்த குழந்தைகள்) ஓடி ஓடி
உழைத்தவர்கள் இன்று தள்ளாமையால் குழந்தைக்கு
சமமான உடல்நிலையில் இருந்தாலும் அதே குழந்தை
போல் பிடிவாதம், கோவம் என படுத்துவதும் உண்டு.
சின்னக்குழந்தைகளையாவது அடித்து, மிரட்டி என
ஒரு வழியாக காரியம் சாதிக்க முடியும். ஒரு காலத்தில்
நம் ரோல் மாடல்களாக மிடுக்குன வளைய வந்தவர்களை
ஒரு சொல் கூட சொல்ல முடிவதில்லை.
அதுவும் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல்
போய்விட்டால் அவ்ளவுதான்!!! மருந்து எடுத்துக்
கொள்ள கூட பிடிவாதம் பிடிப்பார்கள் சிலர். மருத்துவரிடம்
வரமாட்டேன் என அடம்பிடிக்கும் சிலர். விட்டுவிடவும்
முடியாமல், அவர்களை என்ன செய்ய என்று புரியாத
ஒரு சூழல்!! என் தாத்தா மும்பையில் இருக்கிறார்.
அவருக்கு கண்ணில் காண்ட்ராக்ட் ஏற்பட்டு அறுவை
சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள்
சொல்லிவிட தாத்தாவோ முடியாது என மறுத்துவிட்டார்.
இரண்டு மாமாக்களும், அம்மம்மாவும், அத்தைகளும்
எடுத்து சொல்லியும் சண்டை போட்டு முடியாது என்று
சொல்லிவிட்டார்.
நான், அம்மா, தம்பி, சித்தி என எல்லோரும் எவ்வளவோ
பேசிப்பேசி, மாமாக்களும், அம்மம்மாவும் தினமும் பேசி
பேசி சரியென ஒத்துக்கொண்டார். 2 மாத இடைவெளியில்
இரண்டு கண்ணுக்கும் ஆப்பரேஷன் முடிந்தது. ஒரு
ஆப்பரேஷன் கடந்த 18ஆம் தேதி நடந்தது. இன்னமும்
கூலிங்கிளாஸ் போட்டுத்தான் வளையவருகிறாராம்
தாத்தா. இதில் அரைமணிநேரம் தான் டீவி பார்க்கலாம்
என மருத்துவர்கள் சொல்ல தாத்தாவோ இரண்டு மணி
நேரத்திற்கும் மேலே கூட டீவி பார்க்கிறாராம். கூடாது
என்றால் கோவம் வருகிறது. இந்த வளர்ந்த குழந்தைகளை
வளர்ப்பது ரொம்ப கஷ்டம் என ஏன் சொன்னேன் என்று
இப்பொழுது புரிகிறதா?!!! இது எங்களுடைய அனுபவம்
மட்டுமல்ல பலரின் அனுபவமாகவும் இருக்கக்கூடும்.
எப்படி எடுத்துச் சொல்வது? புரிய வைப்பது எப்படி?
எல்லாம் ரொம்ப கஷ்டம். நேற்று பார்க்கில் வாக்கிங்
போகும் பொழுது 60 வயதான முதியவர் ஒருவர்
85 வயதான தன் அப்பாவை கை பிடித்து வாக்கிங்
அழைத்துச் சென்று கொண்டிருந்தார். இருவரில்
யாருக்கும் இளமை இல்லை. ஆனாலும்......
என் மாமியாருக்கு பார்க்கின்ஸம்ஸ் தாக்கி இருந்தது.
தினமும் மாடிப்படிகள் ஏறி, இறங்கவேண்டும்,
வீட்டுக்குளேயே நடைபயிற்சி செய்ய வேண்டும்
என்றெல்லாம் மருத்துவர் சொல்லியிருந்தார். அவரை
மாடிப்படி ஏறச்சொன்ன பொழுதெல்லாம்,” என்னை ஏன்
இப்படி கொடுமை செய்கிறாய்!!” என்று அழுவார்.
ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் நடக்கச் சொன்னால்
சத்தம் தான். கைக்குழந்தையுடன் நான் கடந்த அந்த
தருணங்கள் ஞாபகத்துக்கு வருகிறது.
மாமா போனில் தாத்தா பற்றி சொல்லிக்கொண்டிருந்த
பொழுது என் அனுபவத்தையும் யோசித்துக்கொண்டிருந்தேன்.
நேற்று சண்டே க்ரோனிக்கலில் அனும்பம் கேர் அவர்களின்
கட்டுரை இந்த டாபிக்கில் தான் இருந்தது. 3 நாளாக
அவரது தகப்பனார் ஆகாரமே இல்லாமல் இருந்தாராம்.
என்ன காரணம் என்று தெரியவில்லை!! மருத்துவமனைக்கு
அழைத்தாலும் வரவில்லையாம். அவரது உணர்ச்சிக்கு
மதிப்பு கொடுத்து சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை என்று
இருப்பதா? இல்லை சாப்பிட வைப்பதுதான் தன் கடமையா
என புரியாமல் குழம்பி, கடைசியில் அப்பாவை அணைத்து
காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் கட்டாயமாக
உணவை ட்யூப் மூலமாக உள் செலுத்த முடிவு செய்திருப்பதாக
சொல்லியிருந்தார்.
”ஒவ்வொருவருக்கும் வாழ்வில் இரண்டு முறை கடவுளாகும்
வாய்ப்பு. (கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடியாது
என்பதனால்தானே தாயை படைத்திருக்கிறான்) ஒன்று
தான் பிள்ளை பெறும்பொழுது, இன்னொன்று தன்னைப்
பெற்றவருக்கு தாயாய் சேவை செய்யும் பொழுது” என
தன் கட்டுரையில் அனுபம் கூறியிருந்தார். (மகன்
சேவை செய்யும் பொழுது கூட அவனுள் தாயுள்ளம்
ஏற்பட்டுவிடுகிறது)
உண்மைதான்!!! ஆனால் இந்த பிள்ளை
வளர்ப்பு என்பதும் கடினதமானதகவே இருக்கிறதே!!!!
24 comments:
உண்மை தான் கலா அக்கா...
ரொம்ப உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்... உடல் நலமாக இருக்கும் "பெரிய குழந்தைகள்" கூட குழந்தைகளாக நடந்துகொள்ளும் போது உண்மையிலேயே என்ன செய்வது என்று தெரியாத நிலை தான்.
வாங்க சுதர்ஷிணி நலமா.
உடல் நலமாக இருக்கும் "பெரிய குழந்தைகள்" கூட குழந்தைகளாக நடந்துகொள்ளும் போது உண்மையிலேயே என்ன செய்வது என்று தெரியாத நிலை தான்.//
ஆமாம்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வளர்ப்பு என்பது ஒரு கலை
நல்லதொரு பதிவு
ஹைய்யோ.. இந்த பெரிய குழந்தைகளை வளர்க்கறதுதான் உண்மையிலேயே கஷ்டம்ப்பா..
ரொம்ப கடினமான கலை தான் இது.
சில நேரங்களில் குழந்தையிடம் நம் கோபத்தை காட்டி பணிய வைப்பது போல் வயதுமுதிர்ந்த குழந்தையிடம் காட்ட முடியாது. மாறாக நாம் தான் காயப்பட்டு போவோம். ஆனாலும் கண்டிப்பாய் இந்த கடமையை நிறைவேற்றுபவரே சிறந்த மனிதர்.
அருமையான கட்டுரை
பகிர்வுக்கு நன்றி
ஆமாங்க. இந்த வளர்ந்த குழந்தைகளை கேட்க வைப்பது மிக மிக கடினம்.....
நல்ல பகிர்வு.
வாங்க ஷர்புதீன்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
எல்லாருக்கும் இது போல ஒரு அனுபவம் இருக்கு.
வருகைக்கு நன்றி
வாங்க ஆமினா,
//ஆனாலும் கண்டிப்பாய் இந்த கடமையை நிறைவேற்றுபவரே சிறந்த மனிதர்.
ரொம்பச் சரி
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க கோவை2தில்லி,
கஷ்டம்தான்...
வருகைக்கு மிக்க நன்றி
நல்ல பகிர்வு தென்றல்.
சின்னக்குழந்தைகள் நாளடைவில் வளர்ந்து சிரமம் குறையும்..
பெரிய குழ்ந்தைகள் எனில் நாளுக்கு நாள் தளர்ச்சியும், பிடிவாதமும் நமது நேரமினமையும் சேர்ந்து படுத்துமே!
இந்தக் கடினமான கலையை மேற்கொண்டுதானே நம்மளை (நம்ம படுத்தல்களையும் சகிச்சுக்கிட்டு) நம்மைப் பெத்தவங்க ஆளாக்கினாங்க. அதை நினைச்சா... இப்ப குழந்தை வளர்ப்ப எனக்கு ஈஸியாத்தான் தெரியுது. என்னோட கம்ப்பேர் பண்ணினா, குழந்தைங்கல்லாம் ரொம்பவே சாதுங்க. ஹி... ஹி...
வாங்க ராமலக்ஷ்மி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க இராஜராஜேஸ்வரி,
//பெரிய குழ்ந்தைகள் எனில் நாளுக்கு நாள் தளர்ச்சியும், பிடிவாதமும் நமது நேரமினமையும் சேர்ந்து படுத்துமே!//
ஆமாம். அத்தோடு பார்த்துக்கொள்பவர்களுக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அப்ப ரொம்ப கஷ்டமே
வாங்க கணேஷ்,
சின்ன பசங்க படுத்தல்கள் பரவாயில்லைங்க. ஆனா வயசான காலத்துல பெரியவங்க வளர்ப்பு கஷ்டம். அது அனுபவ பட்டவங்களுக்கு தெரியும். அதாவது அவங்க சொன்ன பேச்சு ஏத்துக்க மாட்டாங்க. இதுகுத்தமா சொல்லலை. ஆனா ஒரு சுகமான சுமை.
”ஒவ்வொருவருக்கும் வாழ்வில் இரண்டு முறை கடவுளாகும்
வாய்ப்பு. (கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடியாது
என்பதனால்தானே தாயை படைத்திருக்கிறான்) ஒன்று
தான் பிள்ளை பெறும்பொழுது, இன்னொன்று தன்னைப்
பெற்றவருக்கு தாயாய் சேவை செய்யும் பொழுது” என
தன் கட்டுரையில் அனுபம் கூறியிருந்தார். (மகன்
சேவை செய்யும் பொழுது கூட அவனுள் தாயுள்ளம்
ஏற்பட்டுவிடுகிறது)//
சரியாக சொல்லி இருக்கிறார் அனுபம்.
புதுகை நீங்கள் சொல்வது போல் வயது ஆக ஆக சிறு குழந்தைகளை கவனிப்பது போல் பெரிய வயதான குழந்தைகளை கவனிக்க வேண்டி உள்ளது. சிறு குழந்தைகள் பெரியவர்கள் நம்மை சீராட்ட வேண்டும், பாராட்டவேண்டும் என்று நினைப்பது போல் பெரியகுழந்தைகளும் நினைக்கிறார்கள். வளர்ப்பது ஒரு கலை தான்.
பொருமையை பெற்றவர்கள் பெற்றிட்டாள் - ஆல் இஸ் வெல் ...
வாங்க கோமதிம்மா,
சிறு குழந்தைகள் பெரியவர்கள் நம்மை சீராட்ட வேண்டும், பாராட்டவேண்டும் என்று நினைப்பது போல் பெரியகுழந்தைகளும் நினைக்கிறார்கள். //
ஆமாம் இதில் சில சமயம் வீராப்பும் சேர்ந்து கொள்ளும். :))
வருகைக்கு நன்றிம்மா
வாங்க ஜமால்,
பெற்றவர்களை ஹேண்டில் செய்ய அசாத்ய பொறுமை வேணும்.
வருகைக்கு நன்றி
முற்றிலும் உண்மையான விஷயம்
வாங்க ஜீஜி,
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
சில சமயம் வெறும் “Parenting"ங்கிறது ஒண்ணுமேயில்லைன்னு தோணும், இந்த “Parenting the Parents" முன்னாடி!! :-)))) :-((((
வாங்க ஹுசைனம்மா,
அதே அதே சபா பதே. :))
வருகைக்கு நன்றி
Post a Comment