Wednesday, February 08, 2012

ஹைதை ஆவக்காய பிரியாணி 8/2/12

ஆரம்பிச்சிட்டாங்கய்யா.... ஆரம்பிச்சிட்டாங்கன்னு திரும்ப
புலம்ப வெக்கறாங்க. தெலங்கானா கட்சித் தலைவர் கேசிஆர்
மார்ச் மாதம் முக்கியமான தேர்வுகள் முடிந்ததும் எங்கள்
போராட்டம் முழு வீச்சில் இருக்கும்னு சொல்லி போர்ட் எக்ஸாம்
எழுதப்போகும் எங்களைப்போன்ற பெற்றோரின் வயிற்றில்
ஜில்லின்னு ஐஸைக்ரீம் சேர்த்தார் (எத்தனை நாளைக்குத்தான்
பால் வார்த்தார்னு சொல்றது. பாலை விட ஐஸ்க்ரீம் ஜில் அதான்)
அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்க ஜேஇசி என்னவோ
போராட்டம்னு ஆரம்பிச்சிருக்காங்க.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல.
***************************************************************
கர்நாடக அமைச்சரவையில் அமைச்சர் செல்போனில் தவறான
வீடியோவை பார்த்துக்கிட்டு இருந்ததை படம் பிடிச்சு வீடியோ
போட்டுட்டாங்க சேனல் காரங்க.

அவங்க அமைச்சரவைக்குள் செல்போன் கொண்டு செல்ல
தடை இருக்காம். ஆனாலும் இன்னொரு அமைச்சர்கிட்ட
வீடியோ அனுப்புன்னு கேட்டதையும் வீடியோவுல காட்டினாங்க.

என்ன கொடுமை இது!!!!!!
***********************************************************
ஏடிஎம் திருட்டு சர்வ சாதாரணமாகிவிட்டது. டெக்னாலஜி
டெக்னாலஜி முன்னேற்றம்னு நாம சந்தோஷப்படும் விஷயமே
நமக்கு இப்ப வில்லனா ஆகுது.

ஏடிஎம்மில் நாம பாஸ்வேர்ட் போட்டு வந்ததும் நம்ம
கை சூடு எந்த நம்பர்களின் மீது இருக்கோ அதை வெச்சு
நம்ம பாஸ்வேர்டை கண்டு பிடிச்சு திருட்டு நடக்குதுன்னு
செய்தி பாத்தேன். (இதையும் ஒரு மிஷின் மாதிரி
வெச்சு பார்ப்பதை காட்டினாங்க.) இந்த மாதிரி விஷயங்களுக்காகவும்
கண்டு பிடிப்புக்கள் நடக்குது.

அதனால சமீப காலமா ஏடிஎமிலிருந்து வெளியே வருவதற்கு
முன் ஒரு வாட்டி எல்லா நம்பரையும் திரும்ப அமுக்கி
வெச்சிட்டு வந்திடறேன்னு நண்பர் ஒருவர் சொன்னார்!!!!
************************************************************
இப்ப ஆந்திராவில் அராஜகம் தான் நடக்குது. வரிசையா
ஐஏஎஸ் அதிகாரிகள் அரெஸ்ட் ஆவுறாங்க. எல்லாம் ஊழல்தான்

அமைச்சர்கள் அனுமதி இல்லாம நாங்க இப்படி செய்ய முடியுமான்னு?
பாதிக்கபப்ட்ட அதிகாரிகள் கேக்கறாங்க. இதுல நியாயமில்லைன்னும்
சொல்ல முடியாது. போன வாரம் அரெஸ்ட் ஆன ஆச்சார்யா எனும்
ஐஏஎஸ் எனக்கு நெஞ்சுவலின்னு சொல்லி ஒரு ஆஸ்பத்திரில
அட்மிட் ஆனார், நீங்க நல்லாத்தான் இருக்கீங்கன்னு, டிஸ்சார்ஜ்
செஞ்சு அனுப்ப, இன்னொரு ஹாஸ்பிடல் போனார் அங்கேயும்
யூ ஆர் ஃபிட்டுன்னு அனுப்பி வெச்சு இப்ப கஸ்டடிக்கே போயிட்டாரு.
இதுல ஸ்ரீ லக்‌ஷ்மிங்கற பெண் அதிகாரியும் இருக்காங்க. இன்னொரு
பெண் ஐஏஎஸ் ஜகன் அண்ணா சொத்து விவகாரத்துல விசாரணைக்கு
அழைக்கப்பட்டிருக்காங்க.

ஒண்ணும் சொல்வதற்கில்லை.

*********************************************************************
ஓட்ஸுக்கும், கார்ன்ஃபேளேக்ஸுக்கும் இப்ப ரொம்பவே விளம்பரம்.
உடல் பருமனை தவிர்க்க நினைக்கறவங்க இந்த விளம்பரங்களைப்
பார்த்து உபயோகிக்கறாங்க. ஆனா இதுல கவனிக்க வேண்டிய
முக்கியமான விஷயம் இருக்கு.

விளம்பரத்துல காட்டுற மாதிரி கார்ன்ஃபேளேக்சில் எந்த பழங்களையும்
யாரும் சேர்த்துக்கொள்வது இல்லை. பாலில் சர்க்கரை சேர்த்துதான்
சாப்பிடுவோம் என்பதால் அதிகப்படியான சர்க்கரை உடம்பில் சேருது.
தவிர சிலருக்கு காலை நேரத்தில் கொஞ்சம் உடம்பில் உப்பு, காரம்
பட வேண்டியது இருக்கும். இல்லாவிட்டால் கைகால்கள் வெலவெலத்து
போன மாதிரி இருக்கும். அப்படிப்பட்டவங்க கார்ன்ஃபேளேக்ஸ் மட்டும்
சாப்பிட்டால் உடல் சோர்வாகிடும்.

உடல் இளைக்கணும்னு நினைக்கறவங்க ஒரு மாதம் கார்ன்ஃபேள்க்சை
காலை உணவா எடுத்துகிட்டாலும் 11 மணிவாக்கில் சாலட் சாப்பிடுவது
முக்கியம்.

ஓட்ஸ் சாப்பிடறேன் உடம்பு இளைச்சிடும்னு நினைக்கறவங்களுக்கு
ஒரு தகவல். ஓட்ஸ் மீல்ஸ் மாதிரியான பலன் தான் தரும்.
அத்தோடு காய்கறிகள், இப்படி சேர்த்து சாப்பிடணும்னு டயட்டீஷியன்
சொல்றாங்க.
**********************************************************************
நம்ம உடம்புக்கு என்ன சாப்பிட்டால் நல்லதுன்னு ஒரு வாட்டி
நல்ல டயட்டீஷியன் கிட்ட காட்டி அதுக்கு தக்க சாப்பிட்டுக்கறது
புத்திசாலித்தனமா படுது. சாப்பிடுவதற்கு தகுந்த மாதிரி உடல்
உழைப்பு இருக்கணும். பலருக்கு மூளைக்கு வேலை அதிகமா
இருக்கும். அதனாலேயே சோர்வா இருப்பாங்க. டயர்டா இருக்குன்னு
எக்சர்ஸைஸ் கூட செய்ய மாட்டாங்க. மூளை வேலை செய்வது
தனிக்கதை. மெயின் ஸ்டோரியா உடலையும் வேலை செய்ய
வைப்பது ரொம்ப முக்கியம்.
******************************************************************

18 comments:

நட்புடன் ஜமால் said...

ஏடிஎம் பெரும் பிரச்சனையா இருக்கும் போலையே, இதுக்குதான் பணத்த பேங்ல போடக்கூடாது :P

தண்ணீர் நிறைய குடிக்குனும், அதுவும் முறைப்படி.

சும்மா உடம்ப குறைக்கிறேன்னு, உணவை குறைத்து சோர்வாகி அதை சரி செய்றேன்னு பிரிச்சி மேய வேண்டியது இதே வேலையா போச்சி

pudugaithendral said...

வாங்க ஜமால்

ரொம்ப நாளைக்கப்புறம் மீ த ஃபர்ஸ்டா வந்திருக்கீங்க. :))

சும்மா உடம்ப குறைக்கிறேன்னு, உணவை குறைத்து சோர்வாகி அதை சரி செய்றேன்னு பிரிச்சி மேய வேண்டியது இதே வேலையா போச்சி//

அதே அதே. எதுவும் அளவோட இருக்கணும். உடல் உழைப்பையும் சேர்த்துதான் சொல்றேன்.

வருகைக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

ஏடெம் பயமுறுத்துதே. உங்க நண்பர் செய்யறதையே நானும் செய்துடப் போறேன். ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் விஷயம் சரியா சொல்லி இருக்கீங்க. அதுக்கு நம்ம புழுங்கலரிசிக் கஞ்சியே எவ்வளவோ தேவலாம்.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

எல்லாம் பயம் மயம்னு தெனாலி கமல் மாதிரி நாம இருக்க மாதிரி ஆகிடிச்சு.

வருகைக்கு மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

ஓட்ஸ்ம், கார்ன்ஃப்ளேக்ஸும் - நீங்க சொல்றது கரெக்ட். காலைப்பசிக்கு இதுவெல்லாம் போதாது!!

அப்புறம் நேத்திக்குத்தான் ஓட்ஸ் பத்தி ஒரு பத்திரிகையில் படிச்சேன். அதாவது, ஓட்ஸில் இருக்கும் க்ளூட்டன், ஈஸ்ட்ரோஜனைத் தூண்டுமாம். அதுவும் பெண்குழந்தைகள் சீக்கிரம் வயசுக்குவர (எள் மாதிரி) ஒரு கரணமாம். (ஓட்ஸ் சாப்பிடறவங்க மகள், பேத்திக்குக் கொடுக்காதீங்கன்னு சொல்லிருந்துது)

எதெதுக்குத்தான் பயப்படுறதுன்னு இல்லாம ஆகிப்போச்சு. பேசாம கற்காலத்துக்கே போயிடலாமான்னு தோணுது, அப்பப்ப. :-))))))

வெங்கட் நாகராஜ் said...

ஹைதை பிரியாணி - சுவையான கலவை..... ஏ.டி.எம்... - எல்லாவற்றிற்கும் ஒரு மாற்று ஏற்பாடு இருக்கிறது இவர்களிடம்... :(

நல்ல பகிர்வு...

Vidhya Chandrasekaran said...

ஆவக்காய் பிரியாணி - சுர்ர்ர்ர்ர்ர்ர்

பால கணேஷ் said...

சரி.. சரி.. இனிமே ஏடிஎம்ல பணம் எடுக்கப்போன உங்க யோசனையை அமலா... ஸாரி அமல்படுத்திடறேன. நன்றி.

Vetirmagal said...

ஆமாம், தலவலி தான்! பப்ளிசிடி எப்போ கிடைக்கும்னு பாத்து, ஆதாயம் தேட பார்கிகிறாங்க. கோடையின் உக்கிரமும் இந்த போராட்டமும் சேர்ந்தால், கேட்கவே வேண்டாம். கடவுளே!

ஓட்ஸ் பற்றி குறிப்பு முக்கியமானது. எல்லோரும் வாங்க ஆம்பித்தாயிற்று.

நீங்க எழுதியது போல, சுகர் உள்ளவர்கள், ஓட்ஸ் குறைவாக பயன்படுத்துவது நல்லது. அதுவும் , சக்கரை போடாமல், மோர் கலந்து கொண்டால் உத்தமம்.

நன்றி.

kaialavuman said...

உங்களுக்கு விருது காத்திருக்கிறது. தயவு செய்து இங்கு வந்து http://kaialavuman.blogspot.in/2012/02/normal-0-false-false-false-en-us-x-none.html ஏற்றுக்கொள்ளவும்.

எல் கே said...

எப்படி இருக்கீங்க ?? கொஞ்ச நாள் முன் அசோகவனம் (இலங்கை) பற்றி நீங்க ஒரு பதிவு எழுதியதாக நினைவு... அதோட லிங்க் கிடைக்குமா ??

எல் கே said...

-

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

ஆமாம் அதுவும் கேள்விப்பட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

டெக்னாலஜியை பீட் செய்யும் அளவுக்கு மக்கள் கண்டுபிடிப்பும் இருக்கு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க வேங்கட ஸ்ரீநிவாசன்,

உங்க அன்புக்கு மிக்க நன்றி.

உங்க விருதினை ஏற்றேன் சீக்கிரமே பதிவு வரும்

pudugaithendral said...

வாங்க எல்கே,

இப்ப நலம்:)) லிங்க் உங்க ப்ளாக்கில் கொடுத்திட்டேன்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க வித்யா,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கணேஷ்,

ஆமாம் இதுவும் நம்ம பணம் பாதுகாப்பா இருக்க உதவும்னு தோணுது.

வருகைக்கு நன்றி