ஒரு வழியா எக்ஸாம் ஜுரம் ஓய்ந்தது. மகனுக்கு பரிட்சை முடிஞ்சது.
இல்லாம இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சிருந்தேன் ஆனா
தவிர்க்க முடியாம விருந்தினர் வருகையும் நடுவில் இருந்தது.
மார்ச் 2 ஆரம்பித்த பரிட்சை 28ஆம் தேதிதான் முடிந்தது.
நடுவில் அம்ருதம்மாவிற்கும் பரிட்சை முடிந்து லீவு விட்டு
அடுத்த வகுப்பு ஆரம்பமும் ஆகிடிச்சு. மேடம் இப்ப 8ஆம் கிளாஸ்.
போன வருஷம் கிளாஸ் டாப்பர். :) இனி தொடர்ச்சியா பதிவுகள்
வரும் என நானும் நினைக்கிறேன்.
*****************************************************************
பிரணாப் தாதா போட்ட பட்ஜட் தாதாகிரி பட்ஜட் மாதிரி தான் இருக்கு.
கர்சீப், டவல் எல்லாம் பட்ஜட்டில் விழுந்தது போக இப்ப பெட்ஷீட்
விழும் நிலை!! பத்தாக்குறைக்கு ரயில்வே பட்ஜட். (பாவம் அவர்
போட்ட ரயில்வே பட்ஜட்டில் அவர்மேலேயே ரயிலேறியது மாதிரி
வேலை பறிபோயிடிச்சு)
பட்ஜட் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்ல!!
ஆஹா இப்படி கன்னாபின்னான்னு விலை ஏத்திருக்காங்களேன்னு
நொந்து வெர்மிசலியாகிகிட்டு இருக்கையில இன்னைக்கு பேப்பரில்
செய்தி இந்தியாவிலேயே விலைவாசி குறைவான மெட்ரோக்களில்
ஹைதைக்கு இரண்டாவது இடமாம்!!! சென்னைக்கு 4ஆவது இடம்.
பெங்களூரு தான் காஸ்ட்லி. டெல்லிக்கு விலைவாசி குறைவான
ஊரில் முதல் இடமாம்!!!
*************************************************************
எங்க ஊரில் பால் விலை 34 ரூவா, வெண்டக்காய் கிலோ 38,
பீன்ஸ் 60, தக்காளி கிலோ 16, பெட்ரோல் 77. 14 சதவிகிதம்
சர்வீஸ் டாக்ஸ் இப்படி எல்லாம் இருக்கு. எதை வெச்சு ஹைதையில்
விலைவாசி நல்லா இருக்குன்னு சொன்னாங்கன்னு புரியலை;
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சிதம்பரம் வாசியான என் தோழி ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினாங்க.
அதுக்கு முன்னாடி ஒரே புலம்பல்ஸ். கரண்ட் கட்டைப்பத்திதான்.
(ரொம்ப தெகிரியமா ஹுசைனம்மா தமிழக விசிட்டுக்கு கிளம்பியிருக்காங்க,
வந்து பதிவு போடும்போது தெரியும்)
எஸ் எம் எஸ் இதுதான்.
இடம்.திருநெல்வேலி:
முதலாமவர்: ஏங்க நான் ஊருக்கு புதுசு! இருட்டுக்கடையில் அல்வா
வாங்கணும். அந்தக்கடை எங்கங்க இருக்கு.
இரண்டாமவர்: இப்ப இங்க எல்லாக்கடையும் இருட்டுக்கடைதான்!!!!
15 மணி நேரம் கரண்ட் கட்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
(விலைவாசியில் எப்படியோ இந்த விஷயத்தில் நாங்கள் புண்ணியம்
செய்தவர்கள். இரண்டு மணிநேரம்தான் பவர் கட். :))))
***************************************************************
உயிர்ப்பலிகள் செஞ்சு திரும்ப தெலங்கானா பிரச்சனையை கிளறி
விட்டிருக்காங்க. செத்தவங்க 23 அல்லது 24 வயசுக்குள்ளதான்.
எம் பீ ஏ பட்டதாரி, இஞ்சினியரிங் மாணவர்கள்னு படிக்கும் பொழுது
பாவமா இருக்கு.
******************************************************************
இவரு முன்னாள் பிரதமர்
இவர் இப்போதைய பிரதமர்.
எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேருக்கும் ரொம்ப வித்தியாசமில்லை.
தற்போதைய முதலவர் அப்பப்பவாவது சிரிக்கிறார். அது மட்டும்தான்!!!!
***************************************************************************
No sharing
அப்படின்னு ஒரு பதிவு ஞாபகம் இருக்கா. 2009ல் பேரண்ட்ஸ் கிளப்பில்
போட்டிருந்தேன். சமீபத்திய குமுதம் சிநேகிதியின் குழந்தை வளர்ப்பு ஷ்பெஷல் இதழில்
அப்பா, அம்மா, நடுவில் குழந்தை கூடாதுன்னு கட்டுரை வந்திருந்தது.
ஒரு ஞாபகப்படுத்தலுக்காக இங்கே பதிவு செய்கிறேன்.
****************************************************************
ஹேப்பி வீக் எண்ட்
14 comments:
அம்ருதாவுக்கு வாழ்த்துகள்.
விலைவாசி குறைவில் டெல்லி முதலிடமா!!!!!!!!
எதை வைத்து சொல்றாங்க.....எல்லாமே இங்கு ஜாஸ்தி தான்......
நல்ல பிரியாணி....
பானகம் நீர்மோர்.... ம்ம்ம்... பார்க்கவே நல்லா இருக்கு..... தாங்க்ஸ்.
எல்லாம் படிச்சதும் இரத்தம் கொதிக்க ஆரம்பிச்சுருச்சு.. ஜில்லுன்னு பானகமும் நீர்மோரும் குடிச்சு ஆத்திக்கிட்டேன்..
வாங்க கோவை2தில்லி,
அதான் எனக்கும் புரியலை!!!!
வருகைக்கு மிக்க நன்றி
வருகைக்கு மிக்க நன்றி சகோ :)
ஆஹா
வருகைக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்
திடீர்னு கஷ்டம் வந்தாத்தான் சிரமமா இருக்கும். வரும்னு எதிர்பார்த்து வரும்போது மனதளவில் தயாரா இருப்பதால ஓரளவு சமாளிச்சிக்க முடியும். அதே மாதிரி, கரண்ட் கட் கொடுமையாயிருக்கும்னு தெரிஞ்சுகிட்டு வந்ததால, அந்தளவுக்குக் கடுமையா இல்லை - மனசளவில். இன்வர்ட்டரும் இருப்பதால (வாடகைக்கு வாங்கிருக்கோம்!!) ஃபேன், லைட் ஓடுது. ஆனாலும் வியர்வைதான்... தாங்கமுடியலை.. வசதியில்லாதவர்களுக்குத்தான் ரொம்பக் கஷ்டம். என்னச் சொல்லி என்னா.. சங்கரங்கோயில் தேர்தல் முடிவுதான் அதிர்ச்சி...
இன்னிக்குத் திருநெல்வேலி வந்திருக்கேன். மழை பெய்ஞ்சுது.. :-)))))
விலைவாசி... ஒண்ணும் சொல்றதுக்கில்லை.
விலை பார்க்காமல் காய்கறி வாங்கறோம். 500 எடுத்துட்டுப் போனால் ஐந்து காய்கறி நிச்சயம். தண்டு, கீரை,முருங்கைக்காய் எல்லாம் சேர்த்துத்தான். நரசிம்மராவ் பேசுவாரில்ல:)
வாங்க ஹுசைனம்மா,
இங்கயும் 40 டிகிரின்னாலும் மேக மூட்டம் வந்து சில்லுன்னு காத்தடிக்குது. :))
இன்வர்ட்டர் கூட சார்ஜ் ஆகாம போகும் நிலை சில ஊர்களில் இருப்பதாக கேள்வி.
வருகைக்கு நன்றி
வாங்க வல்லிம்மா,
நேத்து கத்திரிக்காய கிலோ 30ன்னு வாங்கினேன். :((
வருகைக்கு நன்றிம்மா
கிரண் சம்பளத்தை எத்திக்கிட்டாருனு கேள்விப் பட்டேன்
இரண்டு மௌனப் பிரதமர்களின் ஒப்பீடு...அதே..அதே....
விலைவாசி..அங்கே விடுமுறைக்கு வரும்போது தெரிந்து கொண்டேன்.. இங்கே ரியாத்தை விட அதிகம்தான் கடந்த சில ஆண்டுகளாக...அரிசியைத் தவிர....
வாங்க எல்கே,
அவரு ஏத்திக்கலாம்!!! :))
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க பாசமலர்,
ஹைதைக்கு நான் வந்தபொழுது இருந்த விலைவாசிக்கும், இப்பொழுது விலைவாசிக்கும் இருக்கும் மாற்றத்தை நினைத்தாலே தலை சுத்துது. எல்லா ஊரிலும் இந்த மாற்றங்கள் அனைவராலும் அனுபவிக்கப்படும் ஒன்றுதான். (அப்படின்னு சொல்லி மனசை தேத்திக்க வேண்டியதுதான்)
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment