Friday, March 09, 2012

சத்தாத்தான் சாப்பிடறோமா???!!!!!!!!!!!

அந்தக்காலத்து ஆளுங்க சாப்பிடுவதே ஒரு கணக்காத்தான் இருக்கும்.
உடல் உழைப்பு அதிகம் என்பதால வஞ்சனை இல்லாம சாப்பிடுவாங்க.
சாகுவரைக்கும் கிழங்கு மாதிரி எந்த நோய் நொடியும் இல்லாம
வாழ்ந்திருக்காங்க. எங்க அம்மாவோட அம்மாவோட அப்பா சாகும்பொழுது
வயசு 98!!! இந்தக் காலத்துல ரொம்ப சின்ன வயசுல இருக்கறவங்க
கூட மாரடைப்பு, பீபின்னு அவதி படும் சூழல். காரணம் என்னவா
இருக்கும்னு எனக்கு ரொம்ப நாளா ரோசன.

சத்து குறைவா சாப்பிடறோம். இப்ப காய்கறிகள், பழங்கள்
ஆகியவற்றில் தான் நமக்குத் தேவையான விட்டமின் சத்துக்கள்
கிடைக்குது. ஆனா இன்றைக்கு ரசாயன உரங்கள், சீக்கிரம் பழுக்க
கெமிக்கல்கள், சீசன் இல்லாத காலத்தில் அல்லது முன்பே
சீசன் காய்கறி பழங்கள் கிடைக்குது. இதனால நமக்கு நல்லா
தெரிஞ்சிக்க கூடிய விஷயம் உடலில் தேவையான சத்துக்கள்
செல்வதே இல்லை. பாலில் கூட கலப்படம் நடக்கும் கலியுகத்துல
நாம நல்ல பால்தான் சாப்பிடறோமான்னு சந்தேகத்துடன் தான்
ஜீவிக்கிறோம்.சரி தீர்வுதான் என்ன?

ஒரு பெண்மருத்துவர் தன்னுடைய பேட்டியில் அழகுப்போட்டிக்கு
நடுவராக தன்னை அழைச்சிருந்ததாகவும் அங்க போயிருந்தப்ப
மதிப்பெண்கள் போடுவதற்கு பதில் அவர்களுக்கு மருந்து எழுதத்தான்
கை போனதா படிச்சிருக்கேன். ஒல்லியா இருக்க வேண்டும் என்பதற்காக
உணவைக்கு குறைப்பதுதான் இப்ப ட்ரண்ட். உணவின் அளவை
குறைச்சாலும் பேலன்ஸ்ட் டயட்டா சாப்பிடணும்னு சொல்லிக்
கொடுப்பதில்லை. குழந்தைகள், பதின்மவயது பிள்ளைகள்,
கருவுற்றிருக்கும் தாய்மார்கள், மெனோபாஸ் வயது பெண்கள்,
மிடில் வயது மாதவன்கள், வயதானவர்கள் என அவரவர் நிலையை
பொறுத்து எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வேறுபடும். மேலே
சொல்லியிருப்பது போல சத்துக்குள் குறைஞ்ச உணவை நாம
எடுத்துக்கும் பொழுது உடம்புக்கு தேவையான சத்து கிடைக்காம
ஒல்லிகுச்சி உடம்பாகவோ அல்லது அதீத பருமனாகவோ இருக்க
வாய்ப்புக்கள் இருக்கு.


நாம சாப்பிடும் காய்கறிகளில் தேவையான சத்து கிடைப்பது
இல்லை. சரி என்ன செய்வது? இருக்கும் வரைக்கும் நல்லா
இருக்கணும். ஆனா பொதுவா மருத்துவர்கள் இந்த மல்ட்டி
விட்டமின் மாத்திரைகளை எழுதுவதே இல்லை. எனக்கு
சின்ன வயதில் ரொம்ப ரேராக ஆண்டிபயாடிக் சாப்பிட நேர்ந்த
பொழுது அத்துடன் ஒரு மாதத்துக்கு மல்டி விட்டமின் மாத்திரை
எடுத்துக்கொள்ளச் சொல்லி மருத்துவர் சொன்னது ஞாபகம் இருக்கு.
ஜுரம், மஞ்சள்காமாலை இப்படி எந்த நோய் வந்தாலும் நோய்
தீர்ந்த பிறகு கொஞ்ச காலம் இந்த சத்து மாத்திரைகள் கொடுப்பது
பழக்கமா இருக்கு. ஆனா சில வருஷங்களா இந்தப் பழக்கம்
மருத்துவர்களுக்கு இல்லாம போயிடிச்சு.

சமீபகாலமா எனக்கு அடிக்கடி லோ பீபி,அசதின்னு படுத்திகிட்டு
இருந்தது. எப்ப டாக்டரைக்கேட்டாலும் சத்தா சாப்பிடுங்கன்னு
சொல்லிட்டு விட்டுடுவாங்க. சென்றமாதம் வைரல் ஜுரம் வந்தப்போ
பெட்ரெஸ்ட்ன்னு பிரிஸ்கிரிப்ஷனில் எழுதும் அளவுக்கு உடல்
ஆகிடிச்சு!!! அத்தோடு டாக்டர் மல்ட்டி விட்டமின் மாத்திரை
ஒண்ணை எழுதிக்கொடுத்திருந்தாரு. தொடர்ச்சியா வேலை செஞ்சா
ரொம்ப டயர்டா ஃபீல் செஞ்சுகிட்டு இருந்த நான் ஜுரம் வந்த
சமயம் அம்மா, அப்பாவும் இங்கே இருக்க (அவங்களுக்கு ஜுரம்)
அவங்களையும் கவனிச்சு மகனுக்கு ப்ரீபோர்டுக்கு உதவிகிட்டிருந்தேன்.

ஒரு வேளை செஞ்சே ஆக வேண்டிய கட்டாயத்தால மனோதைரியத்தை
செஞ்சுகிட்டு இருக்கேன்னுதான் நினைச்சேன். ஆனா ஏதேச்சையா
வெயிட் மிஷினில் ஏறிப்பார்த்தா என் வெயிட் குறைஞ்சிருந்தது.
என்னென்னவோ செஞ்சும் குறையாம இருந்த வெயிட் ஒரு வாரம்
மாத்திரை சாப்பிட்டதில் எப்படி குறையும்!!! அடுத்த வாரம்
செக்கப்புக்கு திரும்ப டாக்டரிடம் போனப்பா என்னுடைய சந்தேகத்தைக்
கேட்டேன். வேலை செஞ்சாதல உங்க எடை குறையல, ஜுரத்தாலையும்
இல்ல. உங்க உடம்புக்கு போதிய சத்து கிடைக்காம இருந்ததால் உடல்
ஊதி போயிருந்தது தேவையான சத்து கிடைக்கவும் அது இயல்பா
இயங்குதுன்னு சொல்லி அந்த மருந்தை 3 மாசம் தொடர சொன்னார்.

இப்ப எப்பவும் தூக்கம் தூக்கமா வர்றது இல்ல. சிடு சிடுப்பு குறைஞ்சிருக்கு.
என்னால ஓடியாடி பழையபடி வேலை செய்ய முடியுது. தொடர்ச்சியா
மருந்து எடுத்துகிட்டு இருக்கேன். அதே சமயம் உண்ணும் உணவும்
பேலன்ஸ்டா இருக்கும்படி பாத்துக்கறேன். இப்ப 3 கிலோ குறைஞ்சு
தெம்பா இருக்கேன். நியுரோபியான் இஞ்சக்‌ஷன் ஒரு நாள்விட்டு
ஒருநாள் எடுத்த பொழுதும் இதேமாதிரிதான் இருந்தது. ஆனா இப்ப
அதைவிடவும் இயல்பா வேலை செய்ய முடியுது. ஊசிகுத்திக்கும்
வேலை இல்லை. தினமும் ஒரு மாத்திரை. இந்த சமயத்துலதான்
எனக்கு யோசனை வந்து நெட்டை குடைஞ்சேன். ஆமாம் நாம
உண்ணும் உணவில் கிடைக்கும் சத்து போதாது ஆகவே மல்ட்டி
விட்டமின் கண்டிப்பா சப்ளிமெண்டா தேவைன்னு படிச்சேன்.

எனக்கு கடந்த 2 வருஷமா இருக்கும் கியாஸ்ட்ரபிள் கூட குறைஞ்சு
கொஞ்சம் நிம்மதி கிடைச்சிருக்கு.

இங்கே போய் படிச்சு பாருங்க


இங்கேயும் படிக்கலாம்

எனக்கு ஃபைரோமயோல்ஜியா அது இதுன்னு டாக்டர் பயமுறுத்தி
ஹெவி டோசேஜ் மருந்து கை மற்றும் நடுமுதுகு வலிக்கு
கொடுத்தும் வலி தீராம வேற ஒரு டாக்டர் வெறும் கால்சியம்
மாத்திரை மட்டும் கொடுத்து வலியே இல்லாம செஞ்சது ஞாபகத்துக்கு
வந்தது. நம்ம உடம்புக்குத் தேவையான சத்தை தனியா எடுத்துக்கிட்டே
ஆகவேண்டிய சூழல். பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி
மாணவர்கள் பலர் உணவை சரியா சாப்பிடுவது இல்லை. அவர்களுக்கும்
இந்த மல்ட்டி விட்டமின் கண்டிப்பா உதவும்

ரொம்ப சத்து குறைவா இருப்பவர்கள் 3 மாசம் எடுத்துகிட்டு நடுவில்
கொஞ்சம் ப்ரேக் விட்டு பிறகு தொடரலாம். இல்லாட்டி மருந்துக்கு
உடம்பு பழகிடும். அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுதானே!!

எல்லோரும் ஆரோக்கியமா வாழ ஒரு நல்ல வழி இதுன்னு நினைக்கிறேன்.

14 comments:

ப.கந்தசாமி said...

அருமையான தகவல்.

pudugaithendral said...

மிக்க நன்றி ஐயா

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்கள் சகோ...

இப்போது நாம் சாப்பிடும் உணவில் சத்துக்குப் பதிலாக இராசயனப் பொருட்கள் அதிகமாயிடுச்சு... எல்லாவற்றிலும் கலப்படம்... என்னத்தைச் சொல்ல....

ஹுஸைனம்மா said...

பொதுவா நான் உண்ணும் உணவிலேயே நமக்குத் தேவையான விட்டமின்கள் இருப்பதால், தனியே மாத்திரைகள் தேவையில்லை என்று படித்திருக்கிறேன். நீங்க சொல்றதும் யோசிக்க வைக்குது. முக்கியமா, மல்ட்டி விட்டமின் சாப்பிட்டா எடை குறையுதுங்கிற செய்தி - ஆஹா, இதுக்காகவே சாப்பிடலாம்!! :-))))

ராமலக்ஷ்மி said...

// இப்ப காய்கறிகள், பழங்கள்
ஆகியவற்றில் தான் நமக்குத் தேவையான விட்டமின் சத்துக்கள்
கிடைக்குது. ஆனா இன்றைக்கு ரசாயன உரங்கள், சீக்கிரம் பழுக்க
கெமிக்கல்கள், சீசன் இல்லாத காலத்தில் அல்லது முன்பே
சீசன் காய்கறி பழங்கள் கிடைக்குது. இதனால நமக்கு நல்லா
தெரிஞ்சிக்க கூடிய விஷயம் உடலில் தேவையான சத்துக்கள்
செல்வதே இல்லை. பாலில் கூட கலப்படம் நடக்கும் கலியுகத்துல
நாம நல்ல பால்தான் சாப்பிடறோமான்னு சந்தேகத்துடன் தான்
ஜீவிக்கிறோம்.//

உண்மைதான் தென்றல்.

விழிப்புணர்வைத் தரும் மிக நல்ல பதிவு. நன்றி.

pudugaithendral said...

வாங்க சகோ,

ஆமாம் அந்த கலப்படம் தான் நம் உடல்களில் சேர்ந்து நம்மை மெல்ல மெல்ல படுத்துகிறது.

ஆண்டாக்சிடண்ட்கள்கூட உடம்புக்கு தேவைன்னு படிச்சேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

உண்ணும் உணவில் இருக்கும் சத்து போதும்னா நாம எல்லோரும் பேலன்ஸ்ட் டயட் சாப்பிட்டா எந்த நோயும் இல்லாம நல்லா இருக்கணுமே. ஏதாவது ஒரு விட்டமின் குறைஞ்சாத்தான் சில நோயே வருது.

நம்தோழின்னு ஒரு இதழ் வருது. அதுலன்னு நினைக்கிறேன். இதைப்பத்தி ஒரு மருத்துவர் ஆராய்ச்சி செஞ்சிருக்கறதா கட்டுரை வந்திருக்கு. எந்த மாதம், என்ன இதழ் எல்லாம் கரெக்டா டீடெயில் தர்றேன்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

எல்லாம் நம்ம அனுபவப்பகிர்தல் தான். :))

வருகைக்கு மிக்க நன்றி

நட்புடன் ஜமால் said...

நல்ல விடயம் தான், இனி உடம்பு குறைக்க நினைப்பவர்கள் வைட்டமின் மாத்திரைகளை அனுகலாம். லெஃப்ட்,ரைட் எஃபக்ட்டு ஒன்னும் இருக்காதுன்னு நினைக்கிறேன் ...

pudugaithendral said...

வாங்க ஜமால்,

உடம்பு குறையணும்னா சத்து மாத்திரை எடுத்துக்கணும்னு இல்ல. எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது.

கொஞ்சம் விளக்கமா அடுத்த பதிவு வருது.

சாந்தி மாரியப்பன் said...

எங்கும் கலப்படம்.. எதிலும் கலப்படம்ன்னு ஆகிட்ட இந்த யுகத்துல காய்கனிகளில் சத்து எங்கே இருக்குது?. வெறும் சக்கைதான் இருக்கு.. இந்த நிலையில் உடம்பை மெலிய வைக்கணும்ன்னு பட்டினியும் கிடந்தா உண்மையான ஆரோக்கியம் கிடைப்பது அரிதுதான்.

மும்பையைப் பொறுத்தவரை சத்தான கீரைகள் கிடைக்கிறதும் அரிதுதான். இங்கே ரயில் இருப்புப் பாதைகளுக்கிடையே கூட கீரை வளர்ப்பாங்க, பக்கத்துல ஓடிக்கிட்டிருக்கும் ஓடைகள்லேருந்து தண்ணி சப்ளை ஆகுமுன்னு முன்னாள் மும்பைவாசியான உங்களுக்குத்தெரியாதா என்ன :-)))))

ADHI VENKAT said...

நல்லதொரு பகிர்வுங்க.

சமீபத்தில் எனக்கு ஹீமோக்ளோபின் 6.3 க்கு போயிடுச்சு. டாக்டரும் சுத்தமா உடம்புல தெம்பே இல்லன்னு தான் சொன்னாங்க. ஆனா முன்ன் விட நான் குண்டா தான் ஆயிருக்கேன். இப்பத் தான் காரணம் புரியுது. நான் தெம்பு இல்லன்னா இளைச்சிடுவாங்கன்னு நினைத்துக் கொண்டிருந்தேன்.

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

நல்லாவே தெரியும். மழைக்காலங்களில் இப்பவும் எங்கேயும் கீரையை தவிர்த்துவிடுவேன். மாமா சொல்லிக்கொடுத்தது.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

ஐயோ, இப்ப உடம்பு பரவாயில்லையா. ஹிமோக்ளோபினுக்கும் நல்ல சத்து மாத்திரை எடுத்துக்கோங்க. என்ன ஒரு கஷ்டம்னா இப்ப டாக்டருங்க மல்ட்டி விட்டமின் எழுதிக்கொடுக்க மாட்டேங்கறாங்க.

வருகைக்கு நன்றி