Wednesday, April 18, 2012

ஜீன்ஸ் அணிவதால் வரும் பிரச்சனை!!!!!

ஜீன்ஸ் பேண்ட்கள் இப்பொழுது ட்ரெண்ட். ஜீன்ஸ் அணிந்தால்தான்
ஒரு மாடர்ன் லுக் வருகிறது என அநேகம் பேரின் நினைப்பு.
ஃபேஷன் அறிவு உள்ளவர்களாக தங்களை நினைப்பவர்கள்
குறைந்த பட்சம் 6 ஜீன்ஸ் பாண்ட்களாவது வாங்கி வைத்திருப்பார்கள்.

இந்த உடை நம் நாட்டிற்கான உடையே இல்லை. நம் நாட்டில்
தட்ப வெட்ப வானிலைதான் எப்போதும். சூடு அதிகமாக இருக்கும்
இடத்தில் இப்படி உடை அணிவது பிரச்சனையைத் தரும்.

அந்தந்த நாட்டில் இருக்கும் சூழலுக்கு தகுந்த வாறு உடை வணிவது
நல்லது. ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று வருடங்கள்
பல ஆனாலும் அவர்களது உடை பாணியை கண்மூடித்தனமாக
இன்றளவும் பலரும் பின் பற்றுகிறார்கள்.

பள்ளிக்குழந்தைகள் அணியும் பினஃபோர் யூனிஃபார்மில் ஆரம்பித்து
ஷூ, சாக்ஸ், டை, பெல்ட் இவை ஏதும் தேவையே இல்லாத
தட்ப வெட்ப நிலையில் இவை அணிந்தால்தான் நல்லது என்று
வைத்திருக்கிறார்கள். இவற்றால் பிள்ளைகள் அடையும் வேதனை
சொல்லி மாளாது. சரி ஜீன்ஸ் மேட்டருக்கு வருவோம்.

இன்று பெண்களுக்கு நிகராக ஆண்களும் ஸ்கின்னி ஜீன்ஸ் தான்
அணிகிறார்கள்.

ஜீன்ஸ் அணிந்தால்தான் ட்ரண்டி என நினைக்கும் இளைஞர்கள்
தங்களூக்குத் தெரியாமலேயே குறைப்பாடை வரவழைத்துக்
கொள்கிறார்கள். அதிகம் வெப்பமாக்ககூடிய இறுக்கமான
ஆடைகளை அணிவதானால் சந்ததியினரை உருவாக்கும்
வாய்ப்பு குறைவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இவர்கள் கூறுவதை மருத்துவர்கள் ஆமோதிக்கிறார்கள்
என்பது வேதனைக்கு உரிய விஷயம். ஆனால் வேதனைக்குரிய
இன்னொரு விஷயம் என்னவென்றால் ஃபேஷன் டிசைனர்கள்
அதெல்லாம் இல்லை, என்று கூறி இளைஞர்களை மூளைச்சலவை
செய்வதுதான்!!!!!

"Tingling thigh syndrome" இது டைட் ஜீன்ஸ் அணிவதனால்
ஏற்பட சாத்தியம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தொடையில் இருக்கும் ஒரு நரம்பு இருக்கமான உடை
அணிவதனால் அதிகம் அழுத்தம் பெறுவதால் ஏற்படுகிறது.
அந்த இடம் மரத்துப்போகும் அளவுக்கு இருக்குமாம்.

இந்த ஜீன்ஸை துவைத்தால் சில இளைஞர்கள் ஏதோ
இமாலய குற்றம் செய்தது போல் குதிப்பார்கள். துவைக்காமல்
போடுவதுதான் ட்ரண்ட். அதிகமான வியர்வை, துவைக்காத
உடையை திரும்ப உடுத்துதல் ஆகியவை நோய்த்தொற்றுக்கு
வழி வகுக்கிறது. ஆண், பெண் இருபாலினருக்கும் இது
பொது.

பெண்ணிற்கு கர்ப்பப்பை தொற்று ஏற்பட வழிவகுக்கும் இந்த
இருக்கமான உடை ஆணுக்கு விந்தணுக்களின் உற்பத்தியை
குறைக்கிறது. இதனால் சந்ததி பாக்கியம் இல்லாமல் போக
வாய்ப்புக்கள் அதிகம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

டைட் ஜீன்ஸ், டைட் பேண்ட் என அணிவதால் காற்று புக
முடியாமல் போகிறது. அதிகம் வெப்பமும் உண்டாவதால்
பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனைகளும் வருமாம்.

ஜீன்ஸே அணியக்கூடாது என்று சொல்லவில்லை. ஃபேஷனுக்கு
அடிமையாகி நோயை வரவழைத்துக்கொள்ள வேண்டாமே.
ஆண் பெண் இருபாலினரும் இறுக்கமான உடை அணிவதை
தவிர்ப்பது நல்லது.

இதை இளைஞர்கள் ஏற்க மறுப்பார்கள். அவர்களுக்கு
புரிய வைப்பது கஷ்டம். ஆனால் இந்த நிலை மாற வேண்டும்.
இறுக்கமான ஆடை அணிவதை தவிர்த்து கொஞ்சம் காற்றும்
புகும் படி உடை அணிய வேண்டும் என்பதை எடுத்துச்
சொல்லிக்கொண்டே இருப்போம். குழந்தைகளை, இளைய
தலைமுறையினரின் மனதில் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்.

பழைய ஜீன்ஸ் பேண்டை எப்படி ஸ்கர்ட்டாக மாற்றலாம்
என ஒரு வீடியோ.


17 comments:

ஸாதிகா said...

இன்னொன்று தெரியுமா?சில மாணவர்கள் ஜீன்ஸ் அணிய மறுக்காதிருக்கும் கல்லூரிகளில் சேர்வதில் ஆர்வமாக இருக்கின்றனர்:(

pudugaithendral said...

வாங்க ஸாதிகா,

ஆமாம் அதுவும் நடக்குது.

வருகைக்கு மிக்க நன்றி

காற்றில் எந்தன் கீதம் said...

ரொம்ப டைட் ஜீன்ஸ் போடுவது ஆபத்து தான் சொன்ன யாரு கேக்கிறாங்க....

கோவை நேரம் said...

இளைஞர் இளைஞி களின் தேசிய உடை ஜீன்ஸ் தான்...

கோவை நேரம் said...

தன்னை இன்னும் இளமையா காட்டனும் அப்படிங கிறதுக்காக இதன் ஆபத்து தெரியாமல் அணிகிறார்கள்

ADHI VENKAT said...

ஜீன்ஸ் அணிவதால் சந்ததிகள் உருவாவதில் பிரச்சனை என்று முன்பு ஒரு புத்தகத்திலும் படித்திருக்கிறேன்.

தில்லியில் ஜீன்ஸ் அணியாதவர்களை பார்ப்பதே கடினம். அதுவும் டாப்ஸ் எங்கேயோ மேல இருக்கும், ஜீன்ஸ் எங்கேயோ இருக்கும். இதில் எங்கேயாவது உட்கார்ந்தால்..... கொடுமை. ஒன்றும் சொல்வதற்கில்லை.

புடவை அணிந்து கனாட் ப்ளேஸ் பக்கம் சென்றால் நம்ம மத்தவங்க கண்ணுக்கு பட்டிகாட்டு ஜனம் போலத் தோன்றும். அப்படி இருக்கிறது நாகரீக உடை கலாச்சாரம்.

தலைவிரி கோலமும், ஜீன்ஸ் கலாசாரமும் ரோஷ்ணிக்கு வந்து விடக் கூடாது என்று உஷாராக இருக்கேன். பார்க்கலாம்.....:)

pudugaithendral said...

வாங்க சுதர்ஷிணி,

யாரும் கேட்க மாட்டேங்கறாங்க என்பதுதான் வேதனையே. ஃபேஷன் படுத்தும் பாடு

pudugaithendral said...

வாங்க கோவைநேரம்,

தன்னை இன்னும் இளமையா காட்டனும் அப்படிங கிறதுக்காக இதன் ஆபத்து தெரியாமல் அணிகிறார்கள்//

ஆமாம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

ஷார்ட் டாப், லோஹிப் & டைடி ஜீன்ஸ் இதுதான் கலாச்சாரமான உடை. இப்பல்லாம் சுடிதார் போடறவங்க கூட வயதான லிஸ்டில் :)

நானும் ஆஷிஷ் அம்ருதாவிடம் உடை விஷயத்தில் கண்டிப்பாகத்தான் இருக்கேன். டைட் ஜீன்ஸுக்கு நோ சொல்லி சொல்லி சொல்லி.... சொல்லி மறுத்துகிட்டு இருக்கேன். :))

நம்ம பேச்சை கேக்கறாங்கன்னாலும் தான் கெட்டது பத்தாதுன்னு நட்புக்கள் உசுப்பேத்தறதேலேர்ந்து காப்பத்தறதுதான் பெரிய விஷயம்.

வருகைக்கு மிக்க நன்றி

கோமதி அரசு said...

காற்றும்
புகும் படி உடை அணிய வேண்டும் என்பதை எடுத்துச்
சொல்லிக்கொண்டே இருப்போம். குழந்தைகளை, இளைய
தலைமுறையினரின் மனதில் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம். //

நல்ல விழிப்புணர்வு கட்டுரை.

பழைய பேண்டை ஸ்கர்ட்டாக மாற்றி இருக்கிறோம் நாங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம். தேவையான ஆதங்கம்!

இப்பல்லாம் low - weist ஜீன்ஸ் தான் ட்ரெண்ட்-ஆம்! கொடுமை!

நான் கூட ஜீன்ஸ் போடுவேன் ஆனா டைட் ஃபிட் போடுவதில்லை!

Jaleela Kamal said...

ஜீன்ஸ் அவரகளுக்கு ரொம்ப கம்பர்டபுளா இருக்கு ஏன்னா துவைக்கவே இல்லையே அப்படியே போட்டுகொண்டு போனால் அழுக்கும் தெரியாதே

மிகச்சரியான பதிவு

pudugaithendral said...

வாங்க கோமதிம்மா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

ஜீன்ஸ் மட்டுமல்ல பேண்ட்களும் அப்படியே. லோ ஹிப், ஷார்ட் டாப் இது இப்போ ஆண்களும் உடையும் கூட :(

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

ஆமாம் ஜலீலா,

துவைச்சா அது இமாலய குத்தம் :)


வருகைக்கு மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

இதுவரை நான் பார்த்த ஊர்களில் அமெரிக்காவில் பசங்க லூஸ் டைப் பாண்ட் தான் போடுகிறார்கள். ஜீன்ஸும் டைட்டாகப் போடுவதில்லை.

ஃபாஷன் கான்ஷியஸ் பசங்க 30% தான் இருப்பாங்க.
நல்ல பதிவு தென்றல்.

ஷர்புதீன் said...

ஊட்டிக்கு போனால் போர்வை பொத்திகிட்டு படுக்கலாம், தப்பில்லை, சென்னையில் மே மாதத்தில் பொத்திகிட்டு படுக்க முடியுமா? ( ஒரு வேளை சிலர் வீடு முழுவதும் சென்ட்ரல் a.c போட்டிருப்பார்களோ?