Friday, May 04, 2012

ஓகே.... ஓகே......

முழிப்பு வந்து எழுந்து பார்த்ததில் காந்திபுரம்னு போர்ட் தெரிஞ்சது.
இங்கதான இறங்கணும்னு அயித்தான் சொன்னாகன்னு அவுகளை
எழுப்பிக்கேட்டா ஆமாம் இறங்கற இடம் வந்தாச்சுன்னு சொல்ல
பொட்டிகளை தூக்கிகிட்டு இறங்கினோம்.

ரோடு காலியா இருந்துச்சு. கிட்டத்துலதானேன்னு பொட்டிகளை
உருட்டிகிட்டு கிராஸ்கட் ரோடில் இருக்கும் லட்சும் லாட்ஜில்
செக்கின் செஞ்சோம். (அயித்தானின் கோவை நண்பர் ஏற்கனவே
ரூம் புக்கிங் செஞ்சு வெச்சிருந்தாக) சூடா காபி ஆர்டர் செஞ்சு
குடிச்சோம். சரியா தூக்கம் இல்லாததால எல்லோரும் ஒரு
குட்டி தூக்கம் போட்டு எந்திரிச்சோம். குளிச்சு ரெடியாகி
காலை உணவுக்கு எங்கப்பான்னு?” பசங்க கேட்க கூட்டிகிட்டு
போறேன்வான்னு அயித்தான் கூட்டிப்போனது ஸ்ரீ அன்னபூர்ணா
கொளரிசங்கர்
ஹோட்டலுக்கு. திருவல்லிக்கேணி ரத்னாகபேயில்
எப்படி சாம்பார் இட்லி பேமஸோ இங்கயும் அப்படியே!!!



அதே சுவையும் இந்த ஹோட்டலில்!!! சுடச்சுட மல்லிப்பூ
இட்லி + சாம்பார். அடுத்து தோசை ஆர்டர் செஞ்சாங்க பசங்க.
வீட்டுல தோசை வார்த்தாலே மொறு மொறுன்னு இருக்கணும்
ஹோட்டல்ல கேக்கணுமா!!! சூப்பரா எஞ்சாய் செஞ்சாங்க.
காலையில் ஹோட்டல் ரூமுக்கு வரவழைச்ச காபி சூடு
கம்மியா இருக்க இப்பவும் காபி குடிக்கலாம்னு ஆர்டர் செஞ்சோம்.


டீ பிரியரா இருந்த ஆஷிஷ் காபி ரசிகரா மாறிட்டாப்ல. :))
அப்புறம் ரூமுக்கு வந்து திரும்ப தூக்கம் தான். மதிய உணவுக்கு
அயித்தானின் நண்பர் வீட்டுக்கு போனோம். பிசிபேளாபாத்தும்,
தயிர் சாதமும் செஞ்சு வெச்சிருந்தாங்க. சாப்பிட்டோம். பசங்க
ஏதாவது படத்துக்கு போகலாம்னு சொல்ல சரின்னு டிக்கெட்டுக்கு
அலைய ஆரம்பிச்சோம்!!!!

மால்களில் சினிமா பார்க்க இஷ்டமில்லை. என்ன சினிமான்னு
பேப்பரில் பார்த்தா ஒரு கல் ஒரு கண்ணாடியும், கர்ணனும் தான்
எங்களுக்கு ஓகே வா இருந்துச்சு. ஒரு கல் ஒரு கண்ணாடி
படத்துக்கு டஃப் பைட் கொடுத்து கர்ணனும் ஹவுஸ்ஃபுல்!!!!
டிக்கெட் கிடைக்கவே இல்லை. கர்ணன் படத்தை பசங்களுக்கு
காட்டிடனும்னு பார்த்தா முடியலை. கடைசியில் 6 மணி காட்சிக்கு
ஓகே ஓகேவுக்கு டிக்கெட் கிடைச்சது.

நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நேரம் இருக்க சும்மா ஒரு ரவுண்ட்
போகலாமேன்னு 100 அடி ரோட்டில் இருக்கும் PSR silks


போனோம். நிறைய்ய வெரைட்டி இருக்கு. நான் கோயம்பத்தூர் காட்டன்
சுடி மெட்டீரியல்ஸ் வாங்கினேன். அயித்தானுக்கும், ஆஷிஷுக்கும்
பெங்களூரிலேயே பர்ச்சேஸ் முடிச்சதனால இங்க வாங்கலை. திரும்ப
ஹோட்டலுக்கு போய் ரெஃப்ரெஷ் ஆகி, கீழே இறங்கி சூடா காபி குடிச்சு,
வாசலிலேயே அழகா, நெருக்கமா மல்லிகைப்பூ தொடுத்து வித்து
கிட்டு இருந்தாங்க. முழம் 10 ரூவா.. ஆசை வாங்கி சூடிகிட்டு
சினிமாவுக்கு கிளம்பியாச்சு.

தமிழ்நாட்டுலயே கோவைலதான் விலைவாசி அதிகம்னு நினைக்கிறேன்.
இரண்டு கிலோமீட்டர் தூரம் கூட இல்லாத தூரத்துக்கு ஆட்டோவுல
அநியாயமா 100ருவா கேக்கறாங்க. (ஹைதை தேவலைப்பா)
கடைசியில 80ரூவாக்கு ஓகே சொல்லி போனோம். அர்ச்சனா
தியேட்டர். இதுலேயே தர்சனா இருக்கு. அதுல கர்ணன்!!!

படத்தை பத்தி என்ன சொல்ல. ஜாலியா இருக்கு. ஆனா
விளம்பரங்களின் போதும், டீவி நிகழ்ச்சிகளின் போதும்
சந்தானத்தை ரொம்ப ஹைப் செஞ்சு பேசிக்கேட்டதால,
ரொம்ப எதிர்பார்ப்போட போனேன். அவுக சொல்ற
அளவுக்கெல்லாம் இல்ல. ஆனா அவரோட ரோல
செஞ்சிருக்காரு. பசங்களுக்கு பிடிச்சிருக்கு. லாஜிக்கே
இல்லாத கதை. என்னோட ஸ்ட்ராங் அட்வைஸ்
ஹன்சிகாவுக்கு. “அம்மணி எதையாவது செஞ்சு
உடம்பைக்குறைங்க, இல்லாட்டி சீக்கிரமே அம்மா,அக்கா
ரோல்தான்!!!”

(படம் உதவி: கூகூள் ஆண்டவர்)

உதயநிதி நடிப்பு பரவாயில்லை. (அதுக்குள்ளேயே
ரசிகர்மன்றங்கள் ஆரம்பிச்சிட்டாங்களே!!) அவ்வ்வ்


படத்தோட இயக்குனருக்கு ஒரே ஒரு கேள்வி,”
படிப்பு மேல உங்களுக்கு என்ன சாமி கோவம்!! உங்க
படத்துல யாராவது ஒருத்தர் அட்டம்ப்ட் அடிச்சிகிட்டே
இருக்காக!!!?”

படம் பார்த்துட்டு வெளியில வரும்பொழுது அயித்தானின் நண்பர்
குடும்பத்துடன் காத்திருந்தாக. அயித்தான் லீவர்ஸில் வேலை
செய்யும் பொழுது ஒவ்வொரு மாசமும் கோயம்புத்தூர் ட்ரிப்
இருக்கும். அப்ப அங்கே இருக்கும் கையேந்தி பவன்களூம்,
அன்னபூர்ணா ஹோட்டலுக்கும் தான் சாப்பிடப்போவாரு.

அதே மாதிரி இப்ப அங்கம்மா கடை, செட்டியார் கடைன்னு
சில கடைகள் இருக்கு. அதுல ஒரு இடத்துக்கு போனோம்.
அயித்தானின் நண்பருக்கும் அந்த இடங்கள் தெரியும்.
அடை, ரோஸ்ட், என கலக்கல் டின்னர் முடிச்சு அருன்
ஐஸ்கீர்ம் சுவைத்து எல்லோரும் கலந்து பேசிக்கிட்டு
11 மணி வாக்குல ரூமுக்கு வந்து படுத்தோம்.

அடுத்த நாள் காலைல 5.மணிக்கு அலாரம் அடிச்சிச்சு.
அயித்தான் எந்திரிச்சு பசங்களை எழுப்பிக்கிட்டு இருந்தாங்க.
“ஸ்டேஷன் போகணும்!! எந்திரிச்சி ரெடியாகுங்கன்னு!!!!”

தொடரும்....

17 comments:

ப.கந்தசாமி said...

ஆஹா, கோயமுத்தூருக்கு வந்துட்டுப்போய்ட்டீங்களா, ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாங்களும் பார்த்து ஒரு ஹலோ சொல்லியிருப்பம்ல.

Appaji said...

அங்கம்மா கடை, செட்டியார் கடை....எங்கே உள்ளது ? நானும் கோவை செல்பவன் தான் ....!!!

வல்லிசிம்ஹன் said...

கோயம்பத்தூரூக்குப் போய்விட்டுப் பானிப்பூரி ஆர்.எஸ்.புரம் கையேந்திபவன்ல சாப்பிடலியா:)
அன்னபூர்ணா காஃபி பார்க்கவே சூப்பர்!!
கோயம்பத்தூர் சீதோஷ்ணம் எப்படி இருந்தது.சொல்லவே இல்லையே.

ஸாதிகா said...

அன்ன பூர்ணா காஃபியைப்போலவே கோவை டிரிப்பை சுவை பட கூறி இருக்கின்றீர்கள் வாழ்த்துகக்ள்.

pudugaithendral said...

வாங்க ஐயா,

கோவைல சஞ்சய் தம்பி மட்டும்தான் தெரியும். அவரு இப்ப அங்க இருக்காரான்னு தெரியலை. மெயில் தட்டியிருக்கலாம். வழக்கம்போல ஊருக்கு கிளம்பும் முன் உடம்பு சரியில்லாம போச்சு. அதான். அடுத்த வாட்டி மீட்டிடலாம்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

அயித்தானைக்கேட்டு சொல்றேன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

பானிப்பூரி எல்லாம் இங்கேயே நல்லா கிடைப்பதால இங்கே கிடைக்காத ஐட்டமா சாப்பிடறதுன்னு திட்டம். அதுவும் இந்த ரோட்டோ கடைகளில் கிடைக்கும் குழிப்பணியாரத்துக்கு நான் அடிமை.

கோவை குளிர்ச்சியா இருக்கு. :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஸாதிகா,

வருகைக்கு மிக்க நன்றி

இராஜராஜேஸ்வரி said...

கோவை வருகைப்பதிவு குளிர்ச்சி !

Mahi said...

/கோவைல சஞ்சய் தம்பி மட்டும்தான் தெரியும்/ இந்த ஸ்டேட்மென்ட்டை இப்ப கொஞ்சம் மாத்திக்கலாம் நீங்க! :) நானும் கோவைதான்!

பி.எஸ்.ஆர்.ஸில்க்ஸில் சேலைகளும் நல்லா இருக்குமே,2-3 வாங்கிருக்கலாம்ல? ;)

அர்ச்சனா-தர்ச்சனா..அன்னபூர்ணா-கௌரிஷங்கர்..மல்லிகைப் பூ!! ஹ்ம்ம்ம்ம்ம்..பெருமூச்சு விட்டுக்கிறேன்,வேறவழி?! ;))))

அடுத்தமுறை போகையிலே ரோட்டோர கடைகளில் சில்லி மஷ்ரூம், சில்லி காலிஃப்ளவர் சாப்புட மறந்துராதீங்க! :P

//கோவை குளிர்ச்சியா இருக்கு. :))// நீங்க போனப்ப குளிர்ச்சியா இருந்துருக்கு, அதுக்கு முன்னும் பின்னும் வெயில்தான்! (இதில இருந்து என்ன தெரியுது...நல்லார் ஒருவர் உளரேல்....:) )

பால கணேஷ் said...

கோயம்புத்தூர் சென்ற அனுபவம் வழக்க்ம் போல உங்கள் சுவாரஸ்யமான எழுத்தில ரசிக்க முடிஞ்சுது, நான் அங்க ரெண்டு வருஷம் வாழ்ந்திருக்கேன். அந் நாள் ஞாபகங்களை கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்கோ...

valaiyakam said...

வணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...
vanakkam plz add your post in http://www.valaiyakam.com/

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க மஹி,

தகவல்களுக்கு மிக்க நன்றி. மைண்ட்ல ரெஜிஸ்டர் செஞ்சுகிட்டாச்சு.

சேலைகள் அதிகம் கட்டுறதில்லை. (பூஜை, கோவிலுக்குத்தான் புடவை)இருக்கற புடவைகளையே சுடிகளா மாத்திகிட்டு இருக்கேன். :)

ஊருக்கு போறதுக்கு முன்னால உடம்பு சாரி வயிறு சரியில்லாம போய் எண்டோஸ்கோபி எல்லாம் செஞ்சாங்க. அதனாலத்தான் அதிகமா சாப்பாடுக்கடை பக்கம் போகலை. அடுத்தவாட்டி உடம்பு நல்லா இருந்தா நீங்க சொல்லியிருக்கும் இடங்களூக்கும் விசிட் மறக்காம போட்டுடறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

//கோவை குளிர்ச்சியா இருக்கு. :))// நீங்க போனப்ப குளிர்ச்சியா இருந்துருக்கு, அதுக்கு முன்னும் பின்னும் வெயில்தான்! (இதில இருந்து என்ன தெரியுது...நல்லார் ஒருவர் உளரேல்....:) )//

ஆஹா.....

pudugaithendral said...

வாங்க கணேஷ்,

ஓ கோயம்புத்தூரில் இருந்திருக்கீங்களா. நல்ல ஊர்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

நன்றி வலைஞன்