அயித்தானின் அண்ணன் மகன் போகணும்னு ஆசைப்பட்ட
தொட்டபெட்டாவுக்கு பயணமானோம். மழை தூறிக்கிட்டே
இருந்துச்சு. போறவழி இப்படி இருந்துச்சு!!!
உயரத்துக்கு ஏறணும்... வளைஞ்சு நெளிஞ்சு போகையில
எங்கே வண்டி குடை சாஞ்சிடுமோன்னு பயமா இருந்துச்சு.
மழை பெஞ்சதாலையும், பெஞ்சுகிட்டு இருப்பதாலையும்
ரோடு செம ஸிலிப்பரியா இருந்துச்சு.
தொட்டபெட்டா பத்தி அங்கே இருக்கும் போர்டே சொல்லுது :))
காரை விட்டு இறங்கும் பொழுதே லேசா தூறிக்கிட்டு இருந்துச்சு.
போகணுமா வேணாமான்னு குழப்பம். வந்திட்டோம் பாத்திட்டே
போகலாம்னு கார் பார்க்கிங் ஏரியாவிலேர்ந்து 10 நிமிஷ நடை.
நுழைவுச்சீட்டெல்லாம் வாங்கிட்டு மேலே இருக்கும் போர்டை
போட்டோ எடுத்து முடிச்சேன், மழை அதிகமா தூற ஆரம்பிச்சிருச்சு.
டெலஸ்கோப்ல பாக்கலாமாம். ஆனா மச மசன்னு பனி மூட்டம்.
அந்த இடத்தையும் மூடி வெச்சிட்டாங்க. கொஞ்ச நேரத்துல
எதிர்ல என்ன இருக்குன்னே தெரியலை!!! ஆனா நல்லா இருந்தது.
அதாவது அந்த சூழல், ஊசிக்குளிர், மழை தூறல், பனி மூட்டம்னு
செம கலவையா இருந்தது. எப்படியோ போட்டோ எடுத்தோம்.
தூறல் ரொம்ப பெருசாவே இருக்க அங்கே இருந்த கடைகளில் ஒரு பக்கம்
ஒதுங்கி நின்னுக்கிட்டோம். தொட்டபெட்டாவிலேர்ந்து மைசூர்
சாமுண்டி மலையை பாக்கலாம்னு சொன்னாங்க. எங்க? இங்க நமக்கு
எதிர்ல யாரும் இருந்தாலே மசமசன்னு தெரியுது.. இதுல
சாமுண்டி மலையை எங்கேர்ந்து பாக்கறது!!!!!
கொஞ்சம் தூறல் குறைஞ்சதும் காருக்கு திரும்பினோம்.
வழியில சுடச்சுட அவிச்ச வேர்க்கடலை, மாங்காய் பத்தை
இதெல்லாம் வித்துக்கினு இருந்தாக. சாப்பிடாம வந்தா
சாமி குத்தமாகிடும்னு வாங்கி அந்த சூழலுக்கு சூடா கடலை
சாப்பிட்டு எஞ்சாய் செஞ்சோம். :))
ஊட்டி ரோஸ்கார்டன் போட்டோஸ்; (அப்ப அப்லோட் செய்ய
முடியலை)
அடுத்து..... தொடரும்...
10 comments:
//சாப்பிடாம வந்தா சாமி குத்தமாகிடும்//
அவிச்ச மக்காச்சோளம் சாப்பிட்டீங்களா?.. இல்லியா,... அப்ப கண்டிப்பா சாமி குத்தந்தான் :-)))
மழை பெஞ்சதாலையும், பெஞ்சுகிட்டு இருப்பதாலையும்
ரோடு செம ஸிலிப்பரியா இருந்துச்சு.
மழை பெய்தால் ஊட்டி பக்கம் எல்லாம் நரகம் தான்..
ரொம்ப வெறுக்கவைக்கும் !
அவிச்ச கடலை...
இங்கேயும் ஒரு பாக்கெட் பார்சல்.... :)))
தொட்டபெட்டா மலையில் மழைத்தூறல் - ஆஹா என்னவொரு காட்சி... அருமையாக இருந்திருக்கும்.
சூடா டீ கிடைச்சுதா தென்றல் பார்க்கவே ரொமாந்டிகா இருக்கே.:)
தொட்டபெட்டா வை ஏற ஜீப் தான் சரி.
அங்கதான் ஊட்டிவரை சீன் எல்லாம் எடுத்தாங்கன்னு சொல்வாங்க.இன்னும் நிறைய பழையப் அடங்கள்ள தொட்டபெட்டாவுக்கு அதிக இடம் உண்டு.
குளு குளுன்னு இருக்குங்க ..
இணையத் தமிழன் .
http://www.inaya-tamilan.blogspot.com/
வாங்க அமைதிச்சாரல்,
மொதோ நாளும் மக்காச்சோளம் எல்லாம் சாப்பிட்டதால அன்னைக்கு அவிச்ச கடலை :))
வருகைக்கு நன்றி
வாங்க இராஜராஜேஸ்வரி,
நாங்க ஊட்டியில் இருந்த 3 நாளும் இரவு நல்ல மழை. பல இடங்களில் மரங்கள் வேற முறிஞ்சு கிடந்துச்சு. பத்திரமா இறங்கிடனுமே சாமின்னு இருந்துச்சு.
வருகைக்கு நன்றி
வாங்க சகோ,
பார்சல் அனுப்பிடறேன். :))
நிஜம்மாவே ரொம்ப அழகா இருந்தது அந்த சூழல். சீசனின் போது ஆஃப்சீசன் கிளைமேட். :)
வருகைக்கு நன்றி
வாங்க வல்லிம்மா,
காலை நேரம் என்பதால டீ அதிகமா தேடலை. ஆமாம் நிறைய்ய சொன்னாங்க.
பனிமூட்டத்தோட சூப்பரா இருந்துச்சு.
வருகைக்கு நன்றி
வாங்க இணையத்தமிழன்
குளு குளுன்னு இருக்குங்க ..//
உங்க வருகைக்கு மிக்க நன்றிங்க
Post a Comment