Monday, August 06, 2012

பாஸ்போர்ட் கேந்திரத்தின் எந்திரத்தில் சிக்கித் தவித்தது எப்படி??!!!!

இந்த கவர்ன்மெண்ட் எதுக்கு ஓகே சொல்லுது? எதுக்கு நோ சொல்லுது?
அது ஏன் சொல்லுது இது ஏதும் இன்னிக்கு வரைக்கும் புரியலை.
ஆதார் கார்ட் கம்பல்சரின்னாங்க. சரின்னு ஓடி காத்துகிடந்து
அந்த கார்ட் வாங்கினோம். பான்கார்ட் கண்டிப்பா இருக்கணூம்னாங்க.
ஆனா இந்த இரண்டும் பாஸ்போர்ட் ஆபீஸ்ல ஏத்துக்க மாட்டாங்களாம்!!!
ஏன்ன்னு கேட்டா எங்க ரூல்ஸ் அப்படிங்கறாங்க. அந்த இரண்டையும்
கொடுத்தது இந்திய அரசாங்கம்தானே, இஸ்தான்புல் அரசாங்கம்
இல்லையே!!!

இல்லாத்த கொண்டா இடும்பாசுரான்னு எங்க அவ்வா ஒரு
வசனம் சொல்வாங்க. டிரைவிங் லைசன்ஸ், ஓட்டர் ஐடி,
ரேஷன் கார்டு இவைகள் மட்டும்தான் ஏத்துக்குவாங்களாம்.
வண்டியே ஓட்ட தெரியாத பொழுது டிரைவிங் லைசன்ஸ்
எப்படி இருக்கும்!!! ஓட்டர் ஐடிக்கு அப்ளை செஞ்சு அது
எந்த கிடப்புல கிடக்கோ தெரியாது. இனி அதுக்கும் போரடணும்.
ரேஷன் கார்ட் சென்னையில் இருந்தப்ப இருந்தது. இலங்கை
போய் இங்க வந்ததற்கப்புறம் ரேஷன் கார்டுக்கு என்ன
ப்ரொசிஜர்னே தெரியலை. இதெல்லாம் சொன்னா அரசாங்கத்துக்கு
புரியவா போகுது. நம்ம கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு நம்ம கிட்ட
தேவையான ஆதாரங்களுக்கு வழியா செஞ்சு கொடுக்கப்போகுது!!!

திங்கள்கிழமை ஜூலை16 பேகம்பெட் சேவா கேந்திரத்துக்கு
போனேன். வெளியில வரிசையில் நிக்க வெச்சு அப்புறம்
உள்ள அனுப்பினாங்க. அங்க போய் அந்த கடைசி கவுண்டரில்
நின்னேன். எனக்கு முன்னாடி 5 பேர்தான் இருந்தாங்க.
ஆனா முதோ நிக்கும் ஆளை மட்டும் உள்ளே ஃபைலோடு
கூட்டிகிட்டு போனவுங்க வரவே இல்லை!! என்னய்யான்னு
கேட்ட 30 நிமிஷம் கழிச்சு வந்து,” ஃபைல் அப்லோடு
ஆக மாட்டேங்குது!!” அதான் டோக்கன் கொடுக்கலைன்னு
சொன்னானுங்க. கடவுளேன்னு ஆச்சு. காத்திருந்துதான்
ஆகணும் வேற வழி.

11 மணி வாக்கில் எங்க ஃபைலை கொடுத்து ஊள்ளே
போக சொன்னாங்க. டோக்கன் எங்கன்னு கேட்டா
சிஸ்டத்துல கோளாறு, டோக்கன் கொடுக்க முடியலை!!!
ஆனா நீங்க உள்ள போய் உக்காருங்க, சரியாகிடும்னாங்க!! :((
உள்ள போனா காலேர்ந்து வந்தவங்க யாருக்கும் டோக்கன்
கொடுக்கலை. செம கூட்டம்!!! கொஞ்ச நேரம் கழிச்சு.
சில ஃபைல்களை கொண்டாந்து அவங்க இருக்காங்களான்னு
செக் செஞ்சாங்க. அப்புறம் டோக்கன் போட்டாறோம் இருங்கன்னு
சொன்னாங்க!!! எங்க ஃபைலை தனியா ஒருத்தர் வாங்கிகிட்டு
போனார்.

இந்த குழப்பத்துல வரிசையில் நின்னவங்க முறை மாரி
அவங்க ஃபைலும் தாமதமா டோக்கன் கிடைச்ச கொடுமை
அன்னைக்கு. எனக்கு டோக்கன் 191. :((( எல்லோருக்கும்
செம காண்டு. 11.30 மணிக்கு 191ஆம் டோக்கனை கையில
கொடுத்தா எப்ப நான் போய் பேசி முடிப்பது. (எல்லாம் சரியா
இருந்திருந்தா ரொம்ப கஷ்டப்படாம சுளுவா டோக்கன் போட்டு
நான் போர் ஆர்பிஓவை பாத்திருக்கணும். நேரத்தை பாருங்க!!!)

ரொம்ப நேரமா என் டோக்கன் நம்பர் வரவே இல்லை. என்னங்கடான்னு
போய்க்கேட்டா உங்க சர்வீஸ் ஆர்பிஓ ரூம் கிட்ட, நீங்க இங்க
உக்காந்திருக்கீங்கன்னு சொல்றாங்க. பழையபடி இந்த டாக்குமெண்டை
சரிபார்த்து அதை ஸ்கேன் செஞ்சு அப்புறமாத்தானே ஆர்பிஓ!!!
சரின்னு ஆர்பிஓ கவுண்டர் கிட்ட போய் உக்காந்தேன். அழைப்பு
வந்து உள்ளே போனா அவரு, கரெக்டா ஒரு வருஷாமாத்தான்
உங்க பேரு இந்த் அக்கவுண்டில் இருக்கு!! ஏன் உங்களுக்குன்னு
தனி அக்கவுண்ட் கிடையாதான்னு கேட்டாரு. (இருந்த
அக்கவுண்டை க்ளோஸ் செஞ்சிட்டு ஒரே அக்கவுண்டா வெச்சிக்கலாமேன்னு
அப்பதான் மாத்தியிருந்தோம்) கடுப்பாகி என் பாஸ்போர்ட் பாருங்க.
2008 மார்ச்தான் இந்தியா வந்தோம். அதான் அக்கவுண்ட் இல்லைன்னு
சொன்னதும் அவரு சரி பழையபடி ஏ கவுண்டருக்கு போய் இதை
ஸ்கேன் செஞ்சு பி கவுண்டருக்கு போங்கன்னாரு.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் திரும்ப ஆரம்பிச்ச இடத்துக்கேவான்னு
ஆனாலும், பசி வயித்தைக்கிள்ள தேவுடு காத்தேன். செம
பசியா இருக்க ஒரு சாண்ட்விச் வாங்கி சாப்பிட்டுக்கிட்டு
இருக்கேன் என் நம்பர் கூப்பிடறாங்க. ஓடினேன். அங்க
நல்ல வேளை ஸ்கேனிங் மட்டும்தான். அதை முடிச்சு பி
கவுண்டருக்கு போங்கன்னு சொல்ல. அந்த ஏரியா வெயிட்டிங்
ஹாலில் உக்காந்து பாக்கறேன் பி கவுண்டரில் ஒரே ஒருத்தர்
கடமையாற்றிகிட்டு இருக்காரு. மத்தவங்க சாப்பிட போயிட்டாங்க.

அதனால ரொம்ப ஸ்லோவா இருந்தது. 2 மணி வாக்கில் என்
நம்பர் வந்தது. அவர் பாத்திட்டு சரிம்மா சி கவுண்டருக்கு போங்கன்னு
சொல்ல, அங்க என் நம்பர் வர எம்புட்டு நேரமாகுமோன்னு
நினைச்சேன். ஆனா அடுத்த நிமிஷம் அழைப்பு. ஓடினேன்.
அந்தம்மா செம கடுப்புல இருந்தாங்க. அவுங்க முன்னாடிஏக
கூட்டம்!! எல்லோரையும் போகச்சொல்லுன்னு கத்திக்கிட்டு
இருந்தாங்க. என் நம்பர் இருப்பதை காட்டி நான் நிக்கட்டுமா?
போகட்டுமா?ன்னு கேட்டேன். இருன்னு சைகை காட்டினாங்க.

இந்தம்மா பழையபடி பாஸ்போர்ட் எல்லாம் வாங்கி பாத்தாங்க.
அந்த நேரம் பாத்து என் மொபைல் அடிக்குது. ஆஷிஷிக்கு
தலைவலி அதிகமா இருக்குன்னு காலேஜிலேர்ந்து ஃபோன்!!!
அப்பாவுக்கு போன் போடு கண்ணா, நான் பாஸ்போர்ட் ஆபிஸில்
இருக்கேன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன் அந்தம்மா கையிலிருந்த
பேனாவை மேஜையில வீசியடிச்சு,” இப்படில்லாம் போன் பேசினா
என்னால ஒண்ணும் செய்ய முடியாது!!” அப்படின்னிச்சு.
நான் என்ன அங்க கொஞ்சி குலாவியா பேசிக்கிட்டு இருந்தேன்.
நான் போனை கட் செஞ்சு 10 நிமிஷம் ஆச்சு, நீங்க உங்க
வேலையை பாருங்கன்னு சொன்னேன்.

உர்ருன்னு மூஞ்சியை வெச்சிக்கிட்டு அந்தம்மா, ஒரு மாசத்துல
வரும் போங்கன்னு சொன்னிச்சு. திரும்ப போலீஸ் ஃவெரிஃபிகேஷன்
எதுக்கு? அதான் முடிச்சீங்கள்லன்னு கேட்டா, அதான் பாஸ்போர்ட்
தர்றேன்னு சொல்றேன்லங்கு அந்தம்மா!!! மத்திய அரசு வேலை
அப்படிங்கற தெனாவட்டை அங்க பாத்தேன். கெட்ட கெட்ட
வார்த்தைல வெய்யலாமான்னு வந்திச்சு. பாஸ்போர்ட் மேட்டர்.
அதனால வாய மூடிக்கிட்டு வந்தேன்.

எல்லா ஃபார்மாலிட்டிசிம் முடிச்சாச்சு. வெளியேருவதற்கு முன்னர்
நம்ம ஃபைலை வாங்கி டீடெயிலா ஒரு ப்ரிண்ட் அவுட் தருவாக.
அதை வாங்கி கிட்டு வெளிய வந்திரலாம்னு நினைச்சா, செக்யூரிட்டி
ஃபீட்பேக் ஃபார்ம் பூர்த்தி செஞ்சு கொடுங்க அப்பதான் அனுப்புவோம்னு
ரோதனை. வந்த கோவத்து மகா மட்டமான சேவைன்னு எழுதி
கொடுத்திட்டு, உங்களோட சேவைக்கு ஒரு ஃபார்ம் கொடுத்து
வேற கேட்கறீங்களேன்னு கத்திட்டு வந்தேன்.

வீட்டுக்கு செம தலைவலியோட வந்தேன். சரியா பசிக்கு
சாப்பிடாம ஏற்கனவே இருக்கும் வாயுத்தொல்லையினால
அன்னைக்கு சாப்பிடாம இருந்ததன் சைட் எஃபக்ட்டா
3 நாளைக்கு எதுவும் சாப்பிட முடியாம அவஸ்தை!!
ஆனா பாருங்க இம்புட்டு கஷ்டபட்டதுக்கும் சேர்த்து ஆகஸ்ட் 1
காலேல 9 மணிக்கு போலீஸ் ஃவெரிஃபிகேஷனுக்கு வந்து
டீடெயில்ஸ் வாங்கிகிட்டு போயிருக்காங்க. இன்னும் 15நாள்ல
வந்திரும்னு சொன்னாரு.

இந்தவாட்டியாவது ஒழுங்கா பாஸ்போர்ட் வந்திரணும்.
காஞ்சாலும் காயும், பெஞ்சாலும் பேயும்னு மழையைச்
சொல்வாங்க. ஆனா பாஸ்போர்ட் கிடைப்பது கூட இப்ப
இம்புட்டு கஷ்டமா இருக்கு. தினசரிகளில் பல மக்கள்
தங்கள் பாஸ்போர்ட் இன்னும் கிடைக்கலைன்னு எழுதும்
அளவுக்கு நிலமை மோசமா இருக்கு.

நாம பேசாம வேற நாட்டுல பிறந்திருக்கலாம்!!! :(((

முற்றும் போட்டுக்கறேன்.


19 comments:

ஹுஸைனம்மா said...

//கேந்திரத்தின் எந்திரத்தில்//

இதப் பாக்கும்போதே, எப்படிச் சிக்கிச் சின்னாபின்னமாகியிருப்பீங்கன்னு புரியுது!!

அப்புறம், ரேஷன் கார்ட்டை உங்களின் இப்போதைய முகவரிக்கு எப்படியாவது மாத்திடுங்க. ரொம்ப முக்கியமான ஆவணம் அது. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும்... எவ்வள்வோ பாத்துட்டீங்க, அதையும் பாத்திடுங்க!! :-)))))

புதுகை.அப்துல்லா said...

// கெட்ட கெட்ட
வார்த்தைல வெய்யலாமான்னு வந்திச்சு.

///


உங்க face க்கு டெரர் லுக்கெல்லாம் வேலைக்காவாதுக்கா :)

வெங்கட் நாகராஜ் said...

பல சமயங்களில் பாஸ்போர்ட் வாங்குவது என்பது கடினமான காரியம்தான்....

இப்படியெல்லாம் இருப்பதனால் தான் இங்கே பாஸ்போர்ட் வாங்குவதலிருந்து, இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை எல்லாவற்றிற்கும் இடைத்தரகரகள்....

கேவலமான நிலை தான்....

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

ரேஷன் கார்டு மாத்த என்ன வழின்னு தான் புரியலை. சென்னையில் என் ஓ சி வாங்கி அதை இங்க கொடுத்துன்னு என்னனவோ சொல்றாங்க. 8 வருஷம் வெளில இருந்தோம் அதை எப்படிச்சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. புதுசா அப்ளை செய்யலாம்னு முடிவு செஞ்சா அதையும் நிப்பாட்டிடாங்களாம் :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

ரொளத்ரம் பழகுன்னு பாரதியார் சொல்லியிருக்காரு. ஆனா இந்த 4 வருஷமா ரொள்த்ரமா இல்லாட்டி இந்தியாவில் வேலை நடக்காதுன்னு நல்லா புரிஞ்சு ஹை டெசிபல்ல கத்திக்கிட்டு இருக்கோம்.

:)) (நான் சரியான் கோவக்காரி தம்பி. ஆனா அந்த முகம் வெளிப்படும்போது மட்டும்தான் டெர்ரரா இருக்க்கும் ) :))))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

ஆனா பாஸ்போர்ட்டுக்கு இடைத்தரகர்கள் ஒண்ணுமே செய்ய முடியாது. (எப்பவுமே) அது புரியாம பலர் பணத்தை கொடுத்திட்டு உக்காந்திருப்பாங்க. அதுவும் இப்ப சேவா கேந்திரங்களில் பர்சனலா லீவு போட்டுட்டாவது போனாத்தான் உண்டு.

வருகைக்கு நன்றி

கோவை நேரம் said...

பாஸ்போர்ட் ஆபிஸ்ல வேலை செய்யற லேடி ஆபிசர்ஸ் கன்னா பின்னான்னு திட்டுவாங்க..ஏதாவது தவறுகள் இருப்பின்...ஒரு தடவை எனக்கு முன்னாடி இருந்த ஒரு ஆள் செம மாத்து வாங்கினாரு..எனக்கும் அது தான் நடக்க போகுதுன்னு நினைச்சேன்..நல்லவேளை ..அந்த சமயம்,பார்த்து அந்தம்மாவுக்கு ஒரு போன் வரவும் பேசிகிட்டே நம்மளுக்கு அப்ப்ரூவல் தந்து விட்டது...ஒரே ஓட்டம்..ஒரு மாதம் கழித்து பாஸ்போர்ட் வர செம நிம்மதி...

திண்டுக்கல் தனபாலன் said...

பல உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி...


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

காற்றில் எந்தன் கீதம் said...

//அந்த இரண்டையும்
கொடுத்தது இந்திய அரசாங்கம்தானே, இஸ்தான்புல் அரசாங்கம்
இல்லையே!!!//
இந்த கேள்வி எனக்கு இங்கயும் நிறைய தரம் வந்திருக்கு...

ஒரு பாஸ்போர்ட் விசயத்துக்கு ௩ பாகமா பதிவு போட்டு புலம்ப விடிருக்கங்கன்ன நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருபீங்கன்னு புரியுது... சீக்கிரமே நல்லது நடக்கட்டும்

ப.கந்தசாமி said...

//நாம பேசாம வேற நாட்டுல பிறந்திருக்கலாம்!!! :(((//

அதைச் செய்யுங்க மொதல்ல.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பாஸ்போர்ட் கிடைத்ததும் உடன் ஒரு பதிவு போடுங்கள்.

pudugaithendral said...

வாங்க கோவைநேரம்.

எல்லாருக்கும் இப்படி அனுபவங்கள் இருக்கு. :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்

pudugaithendral said...

வாங்க சுதர்ஷிணி,

:)) சீக்கிரமே நல்லது நடக்கட்டும்//

நன்றி, நன்றி

pudugaithendral said...

வாங்க ஐயா,

//நாம பேசாம வேற நாட்டுல பிறந்திருக்கலாம்!!! :(((//

அதைச் செய்யுங்க மொதல்ல.//

வெறுத்து வருது. கடைசில அதுதான் நடக்கும் போல இருக்கு. :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க நிஜாமுதின்,

கண்டிப்பா தாக்கல் சொல்லிடறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

நாகை சிவா said...

PSK ரொம்பவே படுத்தி எடுக்குறாங்க என்பது சரி தான். நான்,ஆயில்யன் எல்லாம் ரொம்பவே சிரமம் அடைந்தோம்.

கூடுதல் தகவல் - Address Proof ஆக PAN Card எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அது Photo Proof மட்டுமே. Adharsh Card இன்னும் அனைவருக்கும் சென்று அடையவில்லை. அதை அரசே முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் அதை பரவலாக கொண்டு செல்வதில் சுணக்கம் காட்டுகிறார்கள்.

Address Proof ஆக மொத்தம் 11 ஆவணங்களில் 3 தேவைப்படும், புதிதாக விண்ணப்பிக்க தட்கல் முறையில். அது போக 1 Photo Proof. கூடவே Date of Birth Proof.

Reissue Passport ஆக இருந்தாலும் உங்கள் Passport சில விபரங்கள் மாற்றுவதாக இருந்தாலும் அனைத்து ஆவணங்களும் கண்டிப்பாக தேவை. பழைய பாஸ்போர்ட் இருப்பதால் Photo Proof தேவைப்படாது. முகவரி மாற்றம் இல்லை என்றால் அதை Address Proof ஆகவும் பயன்படுத்தலாம்.

ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே எந்த பிரச்சனையும் இருக்காது. இல்லாட்டி ரொம்பவே சிக்கல் தான்.

உங்கள் பிரச்சனை வேறு என்பதும் சரி.

pudugaithendral said...

வாங்க சிவா,

நலமா. பாஸ்போர்ட் சேவா கேந்திரம் பேரை படுத்தி எடுத்தல் சேவா கேந்திரம்னு மாத்திக்கலாம். :))

வருகைக்கும் உங்க கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

நட்புக்கள் எல்லோருக்கும் குட் நியூஸ்.

இப்பத்தான் பாஸ்போர்ட் ஸ்பீட் போஸ்ட்ல வந்திருச்சு. :)))) இனி 10 வருஷத்துக்கு கவலை இல்லை.