Monday, November 05, 2012

ஆனந்தம்... அபிஷேகம்.... கனகாபிஷேகம்....

அடுத்தபதிவு இவ்வளவு தாமதா வருவதற்கு மாப்பு கேட்டுக்கறேன். விஜயதசமி வேலைகள், ஊருக்கு போனபோது கொஞ்சமா வெயிட் தூக்கியது, வேலைக்காரம்மா 4 நாளைக்கு ஜூட் வுட்டது எல்லாம் சேத்து கை வலி அதிகமாக்கிடிச்சு. அதான் மேட்டர். :) தாத்தாவுக்கு தற்போது 84 வயது. அவரால் உட்கார்ந்து பூஜை செய்ய முடியான்னு தெரியலை. ஆனா மாமாக்கள் ரெண்டு பேரும் விருந்தினர்களை கவனிக்க வேண்டும் என்பதால் தானே உட்கார்ந்து பூஜை செய்வதாய் சொல்லிவிட்டார் தாத்தா. பூஜை, ஹோமம் எல்லாம் நல்லா நடந்தது. அபிஷேகத்திற்கு உட்காருவதற்கு முன் பிறந்தவீட்டிலிருந்து சீர்புடவை வேஷ்டி கொடுக்க வேண்டும். அதைத்தான் அபிஷேகம் முடிந்து கட்டிக்கொள்ள வேண்டும். நானும் அயித்தானும் அம்மம்மா தாத்தாவிற்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து புடவை கொடுத்து நமஸ்கரித்தோம். அபிஷேகம் செய்ய அம்மம்மாவை பேத்திகளும், தாத்தாவை பேரனும் அழைத்து சென்றோம்.
அபிஷேகம் முடிந்ததும் அம்மம்மாவை அழைத்துச்சென்று புடவை மாற்றிக்கொள்ள உதவினோம். ஆப்பரேஷன் முடிந்து 10நாளே ஆனே நிலையில் நீர் உள்ளே போய்விடாமல் மேலே கவர் வைத்து கட்டியிருந்தார் டாக்டர். பெரிய மாமா மகள் சசி ஆயுர்வேதா டாக்டருக்கு படிக்கிறாள். அவளும் கூட வந்து உதவிசெய்தால். தனக்கு இத்தனை பேர் கவனிப்பது அம்மம்மாவுக்கு கஷ்டமாக இருந்தது. நாங்கள் சின்னக்குழந்தையாக இருந்த பொழுது கவனிக்காமல் விட்டிருக்க வேண்டியதுதானே அம்மா!! இப்பொழுது நாங்கள் செய்தால் மட்டும் கஷ்டமா இருக்கோ என சொன்னவுடன் புன்னகைத்துக்கொண்டே பேசாமல் இருந்தார் அம்மம்மா.

 ஆஷிஷ் அம்மம்மாவிற்கு பெல்ட் எடுத்துவர வீட்டிற்கு சென்றிருந்தான். ஆனால் அவன் வந்தால்தான் அடுத்த ஃபங்ஷன். :)). சாஸ்திரிகளிடம் தாத்தா ஆஷிஷ் வரும்வரை காத்திருப்போம் என சொல்ல ஆஷிஷ் ஆஷிஷ் என அங்கே பல குரல். ஆஷிஷ் வந்ததும் தனது கொள்ளு தாத்தா, பாட்டிக்கு கனகாபிஷேகம் செய்தான். பொதுவாக மகன் வயிற்று பேரனை வைத்துத்தான் கனகாபிஷேகம் செய்வார்கள். ஆனால் மூத்த பேத்தியான என் மகனை வைத்து கனகாபிஷேகம் செய்ய விரும்புகிறோம் என்றதும் அம்மம்மா தாத்தாவுக்கு ஒரே சந்தோஷம். “கொடுத்து வைத்திருக்க வேண்டும். நடக்கட்டும்!!” என ஆசிர்வதித்தனர் இருவரும்.


 அடுத்து ஒவ்வொருவராக ஆசிர்வாதம் பெறவந்தார்கள். முதலில் அம்மா,அப்பா, சித்தி,சித்தப்பா குடும்பமாக நின்று ஆசிர்வாதம் பெற்றனர். அப்பா வாங்கியிருந்த ஜரிகை அங்கவஸ்திரத்தில் தாத்தாவுக்கு தலைப்பகையாக கட்ட தாத்தா அழகாக இருந்தார். :)) விழாவுக்கு வந்திருந்தவர்கள அத்தனைப்பேரும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற அம்மம்மா கையில் குங்குமக்கிண்ணத்தை வைத்து பொட்டு வைத்தார். தாத்தாவோ ஹோமம் ரட்சையை அனைவருக்கும் வைத்து ஆசிர்வதித்தார். தாத்தாவின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்கவே இல்லை!!!!!!


 கேரளா ஸ்டைல் பால்பாயசத்துடன் அருமையான விருந்துக்கு மாமா ஏற்பாடு செய்திருந்தார். வந்திருந்த அனைவரும் சொன்ன ஒரே டயலாக். உணவு அருமை. சாப்பிடத்தான் வயிறு போதவில்லை!!! எக்ஸ்ட்ராவாக கிடைத்திருந்தால் நல்லா இருக்கும். :)) எல்லோரும் வீட்டுக்கு வந்தோம். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்ததும் மாமாவின் சின்னமகளிடம் பணம் கொடுத்து அனுப்பினேன்.

யாருக்கும் சொல்லாமல் நாங்கள் பேரன் பேத்திகள் எல்லோரும் சேர்ந்து அம்மம்மாவிற்காகா கேக் ஆர்டர் செய்திருந்தோம். அம்மம்மாவிற்கு மெழுகுவர்த்தி ஊதுவது பிடிக்காது. விளக்கை அணைத்து செய்வது பிடிக்காது. அதனால் இன்றளவு என் பிள்ளைகள் பிறந்தநாளுக்கு கேக்வெட்டும் முன் ஒன்று மெழுகுவத்தி ஏற்றுவது, இல்லாவிட்டால் சாமியிடத்தில் விளக்கு ஏற்றுவது என வைத்திருக்கிறேன். இதெல்லாம் எதுக்கும்மா என்றார்!” எல்லாம் பேரன் பேத்திகள் ஆசை என்றதும் ஒன்றும் சொல்ல்வில்லை.


மெல்ல வந்து உட்கார்ந்தார். தாத்தாவை மெல்ல எழுப்பி மேட்டர் சொன்னேன். உணர்ச்சி வசப்பட்டு இருந்த தாத்தாவிற்கு கையாலகவில்லை. தாத்தாவுக்கு புதுசட்டை போட்டு காலையில் தலைப்பாகை கட்டியிருந்த அங்கவஸ்திரத்தை தோலில் போட்டு புதுகையில் சுப்பராமய்யர் பள்ளியில் ஆசிரியராக கலக்கிய சுந்துசாரை மெல்ல அழைத்து வந்தேன். அப்புறம் போட்டோ செஷன்!!!


 மாமாக்கள் இருவரும் தனியாக, குடும்பத்துடன், அம்மா, சித்தி குடும்பத்துடன், நாங்கள், தவிர அம்ருதா, நான், அம்மா, அம்மம்மா மட்டும் (4 தலைமுறை), என் மாமாக்கள், தம்பி கார்த்தியுடன், ஆஷிஷ் என மாமன், மருமகன்கள், குருப்போட்டோ என போட்டோ எடுத்தோம். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக நாங்கள் பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், பேத்திக்கள் மட்டும் அம்மம்மா தாத்தாவுடன் போட்டோ எடுத்து நினைவுகளை பதிந்து கொண்டோம்.


அம்மம்மா கைபிடித்து நாங்கள் கேக் கட் செய்தோம். அம்மம்மாதாத்தாவிற்கு கேக் ஊட்டி மகிழ்ந்தோம். போட்டோ செஷனை எல்லோரும் மிகவும் சிலாகித்து சொன்னார்கள். ஜமாய்ச்சிட்டீங்க என பேரன் பேத்திகளுக்கு அம்மம்மா,தாத்தா வாழ்த்து சொல்ல ட்ரயினிக்கு கிளம்ப ரெடியானோம்.

 நான் உடனேயே கிளம்புவதில் அம்மம்மாவுக்கு வருத்தம்தான். என்னுடன் இருக்காமல் ஓடுகிறாயே என்று செல்லமாக திட்டினார். நவராத்திரி சமயத்தில் கொலுவைக்காம, பூஜை செய்யாமல், விளக்கு ஏற்றாமல் வீட்டை பூட்டிவைப்பது நல்லது என்றால் டிக்கட்டை கேன்சல் செய்துவிடுகிறேன்.... ஆனால் என்னை நீ அப்படி வளர்க்கவில்லையே அம்மா,என்றதும் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தது இப்போதும் ஈரமாக இருக்கிறது.....


ஊருக்கு வந்து பூஜை எல்லாம் முடிந்து, கைவலியும் கொஞ்சம் குறைந்ததும், அம்மா,சித்தி, மாமாக்கள் குடும்பத்தினரை போட்டோவை ஒரே போட்டாவாக இணைத்து ஆளுக்கொரு காப்பி பிரிண்ட் எடுத்து சர்ப்பரைஸாக கொரியர் செய்தேன். அம்மா இப்போது என்னுடன் தான் இருக்கிறார். கையோடு லேமினேட் செய்துவிட்டார். மாமாக்களும், சித்தியும் கூட ரொம்ப சந்தோஷப்பட்டு போட்டோவை லேமினேட் செய்யக்கொடுத்துவிட்டார்கள். :)) இனிமையான நினைவுகளின் ஞாபகங்கள்  எல்லோர் வீட்டிலும்............ :))))))

13 comments:

ராமலக்ஷ்மி said...

இனிய நினைவுகளை அழகாகக் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

அமுதா கிருஷ்ணா said...

படிக்கவே சூப்பரா இருக்கு.அபிஷேகத்திற்கு சுடு தண்ணீர் தானே??அம்மா சைடில் நாங்கள் பேரன் பேத்திகள் 21 பேர்.நான் தான் மூத்த பேத்தி.

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள். பல நாட்களுக்குப் பின் குடும்பத்தினர் அனைவரும் இது போல ஒன்று கூடி விழா கொண்டாடினால் “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!”

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

மறக்க முடியாத நினைவுகள் இந்த நிகழ்ச்சி.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

கடஸ்தாபனத்தில் சுடுதண்ணி கஷ்டமாச்சே!!! எனக்கும் அந்த பயம் இருந்தது, ஆனால் அம்மம்மா திடமாக மந்திர உச்சாடனங்கிளானல் கிடைக்கும் வைப்ரேஷன்களால் என் உடலுக்கு ஒன்றும் செய்யாது என்று சொல்லிவிட்டார். உங்க வீட்டிலும் நீங்கள்தான் மூத்தபேத்தியா!!! வாவ்.

வருகைக்கு மிக்க நன்றி

சாந்தி மாரியப்பன் said...

இனிய நினைவுகளை அருமையா பகிர்ந்துருக்கீங்க.

ஹுஸைனம்மா said...

உங்கள் மகிழ்ச்சியும், திருப்தியும் எழுத்தில் தெரிகிறது. இறைவன் நலம் பயக்கட்டும்.

//அம்மா சைடில் நாங்கள் பேரன் பேத்திகள் 21 பேர்.//
இதப் பாத்ததும், நானும் கணக்குப் போட்டேன் - பேப்பர், பேனா எடுத்து. அம்மா சைடு 41 டிக்கட், அப்பா சைட் - 15!! ரெண்டு பக்கமும் மீ த ஃபர்ஸ்ட்!! :-))))

pudugaithendral said...

வாங்க சகோ,

சரியா சொன்னீங்க.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

இதுக்கே ஒரு விழா கொண்டாடலாம்.

வருகைக்கு மிக்க நன்றி

ADHI VENKAT said...

இனிமையான நிகழ்வு...

எல்லோரும் சேர்ந்தாலே சந்தோஷம் தான்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பகிர்வு... நன்றிங்க...

selvi said...

சுவாரஸ்யமாக இருந்தது . நெகிழ்ச்சியான பதிவு