Tuesday, January 08, 2013

ஹலோ ஹலோ சுகமா???

நட்புக்கள் எல்லோருக்கும் மிகமிக தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள். மனசுல வாழ்த்து சொல்லிக்கிட்டு இருந்தேன். பதிவா போட முடியவில்லை.

2012 முடிஞ்சா போதும்னு நினைக்கற அளவுக்கு 75% மோசமான ஒரு ஆண்டா இருந்தது. உடல் நிலை சரியில்லை, மன உளைச்சல்கள்னு ஒரு மார்கமா இருந்துச்சு. சாப்பிட கூட முடியாம இருந்து மெல்ல சாப்பிடும் நிலைக்கு வந்திருக்கேனேனு சந்தோஷத்துல தண்ணி ஊத்த திரும்ப வலி.

 இந்த வாட்டி கால் வலி. நிக்க கூட முடியாம உளைச்சலா வலி. மெல்ல மெல்ல கைக்கும் வலி பரவ ஆரம்பிக்க டாக்டர் கிட்ட போனா, அதே பழைய பல்லவி. (பாவம் ஆஷிஷ் அம்ருதாதான் வழக்கம் போல உதவினாங்க. ராத்திரி படுக்கும் முன் ஆஷிஷ் வெந்நீர் டப்புல கொண்டாந்து கொடுத்து, உப்பு போட்டு காலை வெச்சுக்க சொல்லிட்டு போய் பேக்கிங் (அடுத்தநாளைக்கு) செஞ்சுகிட்டு வந்து தண்ணிய எடுத்து கொட்டுவாப்ல. அம்ருதம்மா பக்கத்துல ரெடியா தைலத்தை வெச்சுகிட்டு உக்காந்து தேச்சு விடுவாங்க. அப்பதான் காலேல எந்திரிச்சு அவங்களை ஸ்கூலுக்கு அனுப்ப முடியும். அயித்தான் ஊர்ல இருந்தா அவங்க கூட மாட உதவி செய்வாங்க. இந்த 3 சப்போர்டிங் சிஸ்டம் வீட்டுல இருக்கும்போது பிரச்சனை இல்லை. :))


 விட்டமின் டி குறைவு. திரும்ப கால்சியம் மருந்து சாப்பிட ஆரம்பிச்சு இப்ப கொஞ்சமா பரவாயில்லை. வெளிய வாசல்னு நடமாடுறேன். :)) கைக்கு அதிகமா வேலை கொடுக்காம இருக்கத்தான் முடியலை. வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தமனியமாவும், போன மனியமாவும் இருக்காக. வர்றவங்களை வேணாம்னு சொல்லவா முடியும். இப்ப ஆஷிஷ் அம்ருதாவுக்கு பரிட்சை நேரம். இனி நான் 100% அவங்களுக்குத்தான் நேரம் ஒதுக்க முடியும். ஆனா அதுக்கு முன்னால எனக்கு ஓய்வு தேவைன்னு அயித்தான் முடிவு செஞ்சு எங்கயாவது ட்ரிப் போயிட்டு வரலாம்னு சொல்ல மக்கள்ஸ் ஒத்து ஊத (ட்ரிப் போய் அம்மாவுக்கு ரெஸ்ட் கொடுக்காட்டி போனா ட்ரிப்ஸ் ஏத்தற நிலமை வந்திடும்னு டயலாக் வேற.

இந்த கலேபரத்துல என்னுடைய சேம்சங்க் கேலக்ஸி மொபைல் தொலைஞ்சு போச்சு. அதுல இருந்த 300 போன் நம்பர்களும் அவுட். எப்படின்னு கேக்கறீங்களா. வூட்டலேயேதான் இருந்துச்சு. ஒரு நாள் வீட்டுக்கு உறவு, அவங்களோட உறவுகள்னு ஒரு 40 பேர் வந்திருந்தாங்க. அப்ப யாரோ அபேஸ் செஞ்சிட்டாங்க போல. :(( (இதுனால நட்புக்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்க மொபைல் நம்பர்லாம் என் கிட்ட இல்லை. அதனால ஒரு மெயில் அடிச்சு உங்க நம்பரை அனுப்பி வைக்கணும்னு கேட்டுக்கறேன்)எங்க போகலாம்னு ரொம்பல்லாம் டென்ஷன் ஆகலை. இந்த வாட்டி தமிழ்நாட்டு பக்கம் ட்ரிப் இல்லைன்னு முடிவு முன்னாடியே செஞ்சிருந்ததால, வடக்கே தென்றலை வீசுவோம்னு முடிவு செஞ்சோம். ரொம்ப தூர பயணமாவும் இருக்கக்கூடாது என்பதால லோனாவாலா போகலாம்னு முடிவு செஞ்சோம். அயித்தானின் நண்பர் ஹோட்டல் ஃபரியாஸில் வேலை பார்க்கிறார். அவங்க கிட்ட  சொல்லி ரூம் புக்கிங் செஞ்சாரு. கிறிஸ்துமஸுக்கு முன்னாடி வர்ற  ஞாயிறு வந்து சேர்றமாதிரி டிக்கெட் புக் செஞ்சுக்க சொன்னாங்க. அதுக்கப்புறம் ஏதோ திருமணத்திற்காக மொத்த ஹோட்டலும்
புக் செஞ்சிருக்காங்களாம். டிக்கெட் வெயிட் லிஸ்டட் தான் கிடைச்சது. ஆனாலும் பரவாயில்லை அயித்தானுக்கு தெரிஞ்சவங்க மூலமா ஏற்பாடு
செய்யலாம்னு  முடிவு செஞ்சோம்.

காலைல, மதியம் சாயந்திரம், ராத்திரின்னு டிக்கெட் ஸ்டேட்ஸ் பார்த்துக்கிட்டு இருந்தோம். மெல்ல மெல்ல குறைஞ்சுகிட்டே வந்துச்சு. ஹை ஜாலின்னு செம சந்தோஷம். சனிக்கிழமை நைட் கிளம்பணும். பொட்டிகட்டி ரெடியானோம். ஆஹா  3 நாளைக்கு கிச்சனுக்கு மூடு விழான்னு நானும் செம ஜாலியா இருந்தேன்.

இரவு சாப்பாட்டுக்கு உப்புமா கொழுக்கட்டை + தேங்காய் சட்னி,  அடுத்தநாள்
காலை உணவுக்கு மெத்து மெத்துன்னு இட்லி அதை அப்படியே மிளகாய்ப்பொடியில் புரட்டி எடுத்து டப்பால போட்டு வெச்சேன்.  வேலைக்காரமமவை வரச்சொல்லி பாத்திரங்களை கழுவி எடுத்து வெச்சு 3நாளைக்கு லீவு வரவேணாம்னு சொல்லி அனுப்பினேன். பால், பேப்பர்காரங்களுக்கும் ஞாபகமா சொல்லிட்டு இருந்த 1/2 லிட்டர் பாலை எதிர் வீட்டுல இருக்கற நம்ம உறவுக்கு கொடுத்திட்டு  ரெடியாகி உக்காந்திருந்தோம்.

அயித்தானோட நண்பர்  டிக்கெட் கன்ஃபர்ம் செய்ய உதவி செய்பவர் ஃபோன்
வந்துச்சு. நான் ட்ரை செஞ்சுக்கிட்டு இருக்கேன்னு சொன்னார். காச்சி குடா
ஷ்டேஷன் போகணும். இங்கேயிருந்து எப்படியும்  முக்கால் மணி நேரம் ஆகும். டேக்ஸி வந்திருச்சு. 7 மணிக்கு கிளம்பணும்.............

தொடரும்!!!
 
 

7 comments:

அமுதா கிருஷ்ணா said...

டிக்கெட் கிடைச்சுதா இல்லையா??

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

அடுத்த பதிவுல சொல்றேன். :))


வருகைக்கு மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

இவ்ளோ விலாவாரியா சொல்றதைப் பாத்தா, போனீங்களா இல்லையான்னு டவுட்டு வருதே... :-)))

அமைதிச்சாரல் said...

அப்ப இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் லோனாவ்லாவுலேயா.. அசத்தல்தான் போங்க :-))

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

பதில் அடுத்த பதிவுல

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,


பதில் அடுத்த பதிவுல வருது


வருகைக்கு மிக்க நன்றி

fundoo said...

உங்கள