நிஜம்மாவே அப்படி கூவி அழணும் போல இருக்கு. இது ஏதோ என் ஒருத்தியின் உணர்ச்சியல்ல. ஹைதை,ரங்காரெட்டி மாவட்ட மக்கள் இப்ப இந்த நிலையிலத்தான் இருக்கோம்!!!
என்ன மேட்டர்னு கேக்கறீகளா??? சொல்றேன்.
மத்திய அரசு ஆந்திரமக்களுக்கு மானியங்களை பணமா கொடுக்கபோறதா சொன்னாங்க. (தமிழகத்துல அதை எதிர்க்கறாங்க) நமக்கு இதனால என்ன பிரச்சனை வந்திரப்போகுதுன்னு இருந்தோம். ஆனா வந்தது பிரச்சனை.
பேப்பர்களில் விளம்பரங்கள் வர ஆரம்பிச்சது. அதாவது உங்களுடைய “ஆதார் அட்டையை” உங்க சிலிண்டரோட இணைக்கவும்னு!!!
இது என்னன்னு புரியலையேன்னு பார்த்தா, ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து நமக்கு கேஸ் கொடுக்கும் ஏஜன்ஸில கொண்டுபோய் கொடுக்கணும். அதுல யார் பேர் இருக்கோ அவங்க பேர், கன்ஸ்யூமர் நம்பர், இண்டேனா, ஹெச்பியா எல்லாம் விவரமா எழுதி கையெழுத்துப்போட்டு விவரமா கொடுக்கணுமாம். அம்புட்டுதானேன்னு கேக்கறீங்களா?? இல்லை சாமி இல்லை.
அதுக்கு முன்னாடி நம்ம ஆதார் அட்டை ஜெராக்ஸை நாம அக்கவுண்ட் வைத்திருக்கும் பேங்குல போய் கொடுத்து நம்ம ஆதார் அட்டையை அந்த அக்கவுண்ட்டோட இணைக்க சொல்லணும். ஏற்கனவே அக்கவுண்ட் இருக்கறவங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனா புதுசா இதுக்காகன்னே அக்கவுண்ட் ஆரம்பிக்கும் கூட்டம் அலை மோதுது. ஆதார் அட்டை- பேங்க் அக்கவுண்ட்- கேஸ் ஏஜன்ஸி என்ன லிங்கி??!!!! சொல்றேன்.....
இனிமேற்கொண்டு ஹைதை, ரங்காரெட்டி மாவட்டங்களில் கேஸ் மார்க்கட் விலைக்குத்தான் கிடைக்கும் (1000ரூவா). ஆனா மானியத்தொகையான 550யை அரசு கேஸ் ஏஜன்ஸி மூலமா நம்ம அக்கவுண்ட்ல போடுமாம். அதுக்குத்தான் இத்தனை கூத்துக்களும். இது எவ்வள்வு தூரம் சாத்தியப்படும்னு புரியலை. நடைமுறை சிக்கல் நிறைய்ய இருக்கும். லேட்டஸ்டா பேங்கல வேலை செய்யறவங்க சொன்ன தகவல்படி அந்தப்பணம் நமக்கு வருமானம் கணக்குல வருது என்பதால அதுக்கு டேக்ஸ் வேற கட்டணுமாம். அதை பிடிச்சிட்டுத்தான் அக்கவுண்ட்ல போடுவாங்கன்னு சொல்றாங்க. :((((
இதுல பிப்ரவரி 15 தான் கடைசி தேதின்னு சொல்ல ஆதார் அட்டை வழங்குற இடத்துல, பேங்க் (முக்கியமா ஸ்டேட் பேங்க்), எல்லாம் செம கூட்டம். இன்னைக்கு பேப்பர்ல ஒருத்தர் புலம்பினதை அப்படியே அவர் மொழியா இங்கே தர்றேன். ,” 4 நாளா ஆபீஸுக்கு லீவு போட்டு அலையறேன். ஆனா வேலை முடியலை. ஆபிஸ்ல லீவு கேட்டா மேனேஜர் முறைக்கறாரு. எப்பதான் இந்த வேலை முடியும்னு புரியலை!!”
படிக்க ரொம்ப சிம்பிளா இருக்கு “ மானியம் பெற உங்கள் ஆதார் அட்டையை கேஸ் சிலிண்டரோடு இணைக்கவும்“ ,ஆனா இதை செஞ்சு முடிக்க ஏகப்பட்ட பிரச்சனை. ரொம்ப முக்கியமா பலருக்கு ஆதார் அட்டை வீட்டுக்கு அனுப்பப்படவே இல்லை. 2 வருஷமானாலும் எத்தனை முறை கேட்டாலும் ஆதார் டிப்பார்ட்மெண்டிலிருந்து எந்த பதிலும் வருவதில்லை. முனிசிபாலிட்டி, இ.சேவா, ஆதார் செண்டர்னு மக்கள் அலைஞ்சுகிட்டு இருந்தாங்க.
அடுத்த கட்டமா நாங்க அப்பளிகேஷன் என்னவோ பேங்குக்கு கொடுத்திட்டோம். ஆனா பேங்க்ல வேலை செய்யும் நம்ம ஊரு பொண்ணு அடுத்தவங்களுக்கு புரியாது என்பதால நம்ம தமிழ் மொழியில என் கிட்ட புலம்பினது,” 200க்கும் மேல அப்ளிகேஷன் கிடக்கு!!! எப்ப இதை லிங்க் செய்யப்போறேனோ!!! தினம் தினம் புது அக்கவுண்ட் ஓப்பனிங் வேற!!!””
நேற்று எங்க சிஎம், கடைசி தேதியை ஜூன் வரைக்கும் மாத்த சொல்லி உள்துறை அமைச்சருக்கு லெட்டர் எழுதியிருக்கேன், அவர் ஊர்ல இல்லை!!! ஆனா நடக்கும், மக்கள் பீதி அடைய வேண்டாம்னு” திருவாய் மலர்ந்தருளிருக்கார். ஆதார் அட்டை உடனடியா கிடைக்க 200 செண்டர்கள் ஆரம்பிச்சிருக்கறதாவும், உடனுக்குடன் ஆதார் அட்டை வழங்கும்படி செய்வதாகவும் சொல்லியிருக்காங்க.
அரசாங்க வேலை ஒழுங்கா என்னைக்கு நடந்திருக்கு......!!!!
இத்தனை நாள் வரைக்கும் மானியவிலையில்தான் எல்லோரும் சிலிண்டர் வாங்கிகிட்டு இருந்தோம். இப்ப மார்க்கெட் விலை, மானியவிலை, மானியத்தை திரும்ப தர்றோம்னு ஏகப்பட்ட குழபங்கள். இது மட்டும்தானா?
இன்னும் என்னென்ன இந்த லிஸ்ட்ல வந்து குழப்ப போறாங்களோ புரியலை.
ஆதார் அட்டை அவ்வளவு முக்கியமானதுன்னா அதை ஒழுங்க செயல்படுத்தி மக்கள் பலனடைஞ்சாங்களா, எல்லோருக்கும் ஆதார் அட்டை போய் சேர்ந்திருச்சான்னு தெரிஞ்சக்க வேண்டியது அரசோட கடமை இல்லையா???
தலைப்பை திரும்ப ஒருவாட்டி படிச்சுக்கோங்க.... :((((

20 comments:
மேம்போக்காக அரசின் இன்னும் ஒரு பைத்தியக்கார உத்தரவு என்று தோன்றினாலும், மிக மிக ஆபத்தான விஷயம் இது. டேக்ஸ் போக வரும் பணத்தை விலையில் இருந்து கழித்தால் வரும் நிகர விலை மான்ய விலையை விட அதிகமாக இருக்கும். முதலில் இந்த வித்யாசம் குறைவாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக விலை அதிகரிக்கும்போது பாங்கில் போடும் பணம் அதிகரிக்காது.
வாங்க பந்து,
அதான் வருத்தமா இருக்கு. அரசு பணம் சம்பாதிக்க பொதுமக்களை கஷ்டபடுத்தறாங்க. யார்கிட்ட போய் சொல்ல. ஏதாவது ஒரு தீர்வு வரணும்.
ஆதார் அட்டையே இன்னும் வரலை. அதுக்குள்ள இப்படி ஒரு உத்தரவு.
"அடியே"ன்னு கூப்பிட பெண்டாட்டி இல்லையாம்ன்னு ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது :-))
ஹய்யோ! இப்படிலாம் வேறயா... இப்பதான் இங்கயும் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்கறாங்க.. என்னையும் போட்டோ எடுக்க சொல்லி ஒரே தொல்லை பண்றாங்க வீட்ல!! அதுல வேற ஒரு குடும்பத்துக்கு 50,000 தரதா புரளி கிளப்பி விட்டு இருக்காங்க.. ஒரு சமயம் நீங்க சொன்ன காஸ்கான மானியதொகையதான் மக்கள் தப்ப புரிஞ்சிடாங்களோ???
இதுவேற படுத்தலா இருக்கே....:( பொதுமக்களுக்கு திண்டாட்டம் தான். ஆதார் அட்டை இன்னும் பலருக்கு கிடைக்கவில்லை. கிடைத்தவர்களுக்கும் அதனால் உபயோகம் இல்லை...:( என்னத்தை சொல்ல..
பொருத்தமான தலைப்புதான்:)
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்காவிடம் இருந்து ரசித்துச் சிரித்த ஒரு பதிவு
இப்படிக்கு,
அப்துல்லா.
ஏன்டா டேய்.. என் வயித்தெறிச்சல் உனக்கு சிரிப்பா இருக்கா? உன் மருமக்களை விட்டு ஒதைக்கச் சொல்றேன்.
இப்படிக்கு,
புதுகைதென்றல் அக்கா
:))))
யோசனை இல்லாமல் செயல்படுத்தி மக்களை அலையவைக்கிறார்கள்..
//தென்றல் வீசியதில் மகிழ்ந்தவர்கள்.//
இதில மகிழ்றதுக்கு என்ன இருக்கு? பேஜாராத்தான் இருக்கு.
தென்றல் வீசியதில் மகிழ்ந்தவர்கள்/பேஜாரானவர்கள்
அப்படீன்னு போடுங்கம்மா.
படிச்சுட்டு பகீர்னு இருந்துது. திரும்ப ஒரு முறை வாசிக்கும்போது, தமிழ்நாட்டில் (இப்போதைக்கு) எதிர்ப்புன்னு பார்த்து கொஞ்சம் நிம்மதியா இருக்கு. பார்ப்போம்.
ஆனா, முதல்ல கையில் இருந்து கொடுத்துட்டு, அப்புறம் திருப்பி - அதுவும் வரி கழிச்சுட்டுங்கிறது - கொடுமை. தலையைச் சுத்தி மூக்கைத் தொடுறது இதானோ?
வாங்க அமைதிச்சாரல்
அதுல பாருங்க ஆளுங்காங்கிரஸ் கட்சிதான் ஆந்திராவிலயும் ஆட்சி. அதனால உடனுக்குடன் இங்கேஅமுலாக்கறாங்க. (மத்தவங்க எதிர்க்கறாங்களே)
வாங்க சமீரா,
50,000மாஆஆஆஆஆ
அவ்வ்வ்வ்
வாங்க கோவை2தில்லி,
செம படுத்தல். இனிமே அந்த ஒரு அட்டை மட்டுமே போதுமாம்!!
வாங்க ஸாதிகா,
:)
வாங்க தம்பி,
கேள்வியும் நானே பதிலும் நானேவா :)
வாங்க இராஜராஜேஸ்வரி,
அதேதான். இப்ப நாங்க சோதனைகள் எலிகள்
வாங்க ஐயா,
தென்றல் வீசியதில் மகிழ்ந்தவர்கள்/பேஜாரானவர்கள்
அப்படீன்னு போடுங்கம்மா.//
அதுவும் சரி தான் :(( எழுதின நானே பேஜாராகி டேமேஜாகி கிடக்கேன். :)
வாங்க ஹுசைனம்மா,
இந்த இடியாப்ப சிக்கலில் இன்னுமொரு சிக்கல் அரசு சொன்னது சிலிண்டர் வாங்கினாலும் வாங்காட்டாலும் பணம் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இன்றைய செய்தி:
ஆயில் கம்பெனிகள் சொல்வது, சிலிண்டர் டெலிவரி ஆன 48 மணிநேரத்துல கணக்குல வரவு வைக்கப்படும்.
அவனவனுக்கு ரொட்டேஷனுக்கு பணம் தேவைப்படுது. :(
ஆதார் மட்டும் போதாதுன்னு இப்ப இன்னுமொரு கார்டு வந்துடுச்சு... அதாங்க NPR - National Population Register - ஆதார் இருந்தாலும் இந்த கார்டு வாங்கியே ஆகணுமாம். மொத்தமா கழுத்துல ஒரு தடி சங்கிலி மாட்டி எல்லா கார்டையும் மாட்டிட்டு தான் திரியணும் போல!
வாங்க சகோ,
இன்னொரு கார்டா.......
எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே ஒரு கார்ட் வெச்சா போதாதா. அவ்வ்வ்வ்வ்
Post a Comment