Wednesday, April 03, 2013

சுவர்ணபூமியிலிருந்து .

 பொட்டி கட்டும்போதே பெரிய்ய ஸ்டைலா,” இங்க பாருங்க!! எனக்கு கை வலி இருக்குது, நான் ஒரு பொட்டியையும் தூக்க மாட்டேன், இழுக்க மாட்டேன், காகிள்ஸ் வெச்சுக்க, கண்ணாடி பொட்டி வெச்சுக்கன்னு என் கிட்ட யாரும் கொடுக்க கூடாது. அவங்கவங்க ஒரு பேக் வெச்சுக்கோங்க. அப்படின்னு சொன்னேன். அண்ணன் தங்கை ரெண்டு பேரும் முறைச்சாங்க.

“அம்மா !!!சொல்றது பத்தாது. அங்க வந்து ஒரு பொட்டியையாவது இழுத்தீங்கன்னா பாத்துக்கோங்கன்னு”” மிரட்டல் வந்தது. சொந்த செலவில் சூனியம் வெச்சுகிட்டுத்தான் கிளம்பினேன். :(


போறது போறோம் அந்த நாட்டு விமான சேவையிலேயே போவோம்னு “தாய் ஏர்வேஸில்” டிக்கட் புக் செஞ்சோம். ஃப்ளைட்டில் ஏறியாச்சு. ஃப்ளைட் ஃபுல்!!!!! ஏர்ஹோஸ்டஸ் ஓகே ஓகே வா இருந்தாங்க. (சிரிப்பதை சொன்னேன்) ஹாட் டவல்( டிஷ்யு பேப்பர் தான்) கொடுத்தாங்க ரெஃப்ரெஷ் ஆக.


 பெரிய்ய ஃப்லைட், 3.30 மணிநேரம் பயணம் ஆனாலும் பொதுவா டீவி இருந்தது. ஒவ்வொரு சீட்டுக்கு முன்னாடியும் இருக்கும் டீவி இல்லை. அது ஒரு ஏமாத்தம் தான்.  1.20க்கு ஃப்ளைட் டேக் ஆஃப் ஆனது. ரொம்பவே ஸ்மூத்தா, “தாய் சில்க் ” போல :))

அர்த்த ராத்திரி ஃப்ளைட்டில் மீல்ஸ் கொடுத்தாங்க.  எனக்கு ஐ ஷேட் (ப்ளைண்ட் ஃபோல்ட்) கொடுங்கன்னு கேட்டேன். இதோன்னாங்க, ஆனா கடைசி வரைக்கும் வரலை. கழுத்துக்கு சுத்தியிருந்த ஷாலை எடுத்து கண்ணுல கட்டிக்கிட்டு தூங்க ஆரம்பிச்சேன்.  வெளிச்சம், ஸ்பூன் சத்தம்,
காபியா டீயான்னு ஏர்ஹோஸ்டஸ்கள் கேட்டுகிட்டே போனதுன்னு சரியா தூங்கலை. அப்புறம் ஒரு 1 மணிநேரம் தான் இருக்கும் லைட்டை ஆஃப் செஞ்சு வெச்சிருந்தாங்க. அப்ப தூங்கினதுதான். 10 நிமிஷத்துல தரையிரங்கப்போறோம்னு சொல்லிகிட்டு இருக்கும்போதே நகரத்து மேலே
பறந்துகிட்டு இருப்பதை பார்த்தேன்.

ஏரியல் வ்யூ ரொம்ப அழகா இருந்தது. அந்த ஊர் மணி 6.30க்கு விமான தரை இறங்கியது. ரொம்ப அழகான லேண்டிங். ரசிச்சேன். பேங்காக்கின் இந்த விமான நிலையத்துக்கு சுவர்ண பூமின்னு பேரு. 2006லேர்ந்துதான் இந்த புது ஏர்போர்ட் இயங்குது. 132.2 metres / 434 feet இது இந்த ஏர்போர்ட்டில் இருக்கும் கண்ட்ரோல் டவரின் ஹைட். உலகத்துலேயே இதுதான் பெருசாம்.

6,060,000 square feetல் ஒரே கட்டிடமா கட்டப்பட்டிருக்கு. இந்த வகையில் இது உலகத்துல நாலாவது ஏர்போர்ட். உலகின் 6ஆவது பிசியான ஏர்போர்ட்டும் சுவர்ணபூமிதான் எனும் கூடுதல் தகவலையும் கூகுளாண்டவர் நமக்கு அருளித் தருகிறார்.

பெரிய்ய ஏர்போர்ட் என்பதால ஃப்ளைட்லேர்ந்து இறங்கியதும் பஸ்ஸில்தான்
கூட்டி வர்றாங்க.  வெளியே வந்து நடக்கிறோம் நடக்கிறோம் நடந்து கொண்டே இருக்கிறோம். ஆன் அரைவல் விசா கவுண்ட்டரை நோக்கி மக்கள் போக நாங்க குடியுரிமை பக்கம் போனோம்.  நாம போன கவுண்ட்டரில் இருந்த அண்ணாத்தே ட்ரைனி. அவருக்கு ஆங்கிலம் சொற்ப சொற்ப கூட வரலை.
நாமாளோ “தாய் பாஷை புரியாத இந்தியன்”!!! :))

ஒவ்வொருத்தரா தனியா நின்னு அங்க வேற நம்மளை போட்டோ பிடிச்சுக்கறாங்க. அப்படி பிடிச்சுக்கிட்டு இருக்கும் போது பாத்தா ஒரு கருப்பு சின்ன ஃபைல் இருந்தது. யாரோடதுன்னு எடுத்து பாத்தா அதுக்கு முன்ன வந்துட்டு போன இலங்கை பிரஜை ஒருவருடையதுன்னு அதுல இருந்த ட்ரைவிங் லைசன்ஸ் சொல்லுது. அத்தோட வேற சில காகிதங்களும் இருக்க, அதை அந்த அதிகாரிகிட்ட சொன்னா அவருக்கு பிரியலை!!!

அப்புறம் வெளக்கி சொன்னதுக்கப்புறம் அறிவிப்பு கொடுத்தாங்க.  ஃபார்மாலிட்டீஸ் முடிச்சு வர நேரம் ஆகிடிச்சு.  அப்புறம் பார்த்தா இந்த மாதிரி நிறைய்ய கவுண்ட்டர்கள் இருக்கு. அதுலெல்லாம் செம கூட்டம். கன்வேயர் பெல்ட்டுகளே நிறைய்ய எங்க பொட்டிங்க 9ஆம் நம்பர் பெல்ட்டில் வரும்னு சொல்லியிருந்தாங்க. இந்த கோடியிலிருந்து அந்த கோடிக்கு நடந்தோம். பெட்டிகளை பெல்ட்டில் காணலை. பார்த்தா ரெண்டு ஆபீஸர்கள் (பெண்மணிகள்) நின்னுகிட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட பெட்டிகள் நிறைய்ய இருந்தது. யாருடையதுன்னு கரெக்டா செக் செஞ்சு  கொடுப்பதை பாராட்டிக்கிட்டே  ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தோம்.

அந்த ஊரு சிம் கார்ட் வாங்கிகிட்டு எங்க ட்ராவல் ஏஜண்ட்டை பார்க்க சொன்ன எடத்துக்கு போனோம். அவரு நம்ம பேரெல்லாம் எழுதி ரெடியா வெச்சுக்கினு இருந்தாங்க. நம்ம நம்பரை வாங்கிகிட்டாரு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இன்னொரு பார்ட்டியும் வருது அவங்களோட சேர்த்து அனுப்பறேன்னு சொன்னாப்ல.  பேக்கேஜ் புக் செய்யும் பொழுதே சீட் இன் கோச் பேசிஸ் தான்னு சொல்லியிருந்தாங்க.

கொஞ்ச நேரத்துல அவுகளும் வந்திட்டாங்க. கொல்கத்தாவிலிருந்து வந்திருந்தாங்க. (சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, டில்லி இங்கேயிருந்தெல்லாம் தினமும் தாய் ஏர்வேஸ் சேவை செய்யது. எங்க ஊரிலிருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான்)

கார்பார்க்கிங் நம்ம டெல்லி டெர்மினல் 3போல மல்ட்டி கார்பார்க்கிங். தளம் தளமா அழகா அமைச்சிருக்காங்க. சுவர்ண பூமி விமான நிலையத்திலிருந்து  ”பட்டயா” போக திட்டம். அவங்களுக்கும் அதே திட்டம் என்பதால் ஹயஸ் வேன் ஒன்றில் கிளம்பினோம். ஹைவே ரொம்ப அழகா இருந்தது. ரோட்கள் ஸ்மூத்தா இருந்தது. கொஞ்ச தூரத்தில் ப்ரெக்ஃபாஸ்ட்டுக்குன்னு நிப்பாட்டினார். வேணாம் சாமி நீ நேரா பட்டயா போன்னு சொன்னோம்.
விமான நிலையத்துல கார் பார்க்கிங்.


பட்டயாவில் அவங்க வேற ஹோட்டல். அவங்களை அங்கே இறக்கி விட்டுட்டு, நம்மளை வேற ஹோட்டலுக்கு கூட்டிப்போனார் டிரைவர். எங்க ஹோட்டல் பேரு ஆல் சீசன்ஸ்.  பட்டயா டூர் கைட் 1/2 மணிநேரத்துல
பார்க்க வர்றதா சொல்லியிருந்தாப்ல.

ஹோட்டலுக்கு போனோம். ஜே ஜேன்னு கூட்டம். நம்ம நாட்டவர்கள் தான் அதிகமா இருந்தாங்க. அதுவும் நம்ம தமிழகத்து ஆளூங்க பெரிய்ய பஸ்ல வந்திருந்தாங்க.  ஹோட்டல் செக் இன் நேரம் மதியம் ரெண்டு மணின்னு முன்னாடியே சொல்லியிருந்தாங்க.  இரவெல்லாம் பயணம் செஞ்சு கஷ்டமா இருக்கும்  என்பதால சீக்கிரமா செக் இன் ஆக ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தோம். அதற்கு எக்ஸ்ட்ரான்னாங்க சரின்னு சொல்லியாச்சு.

அந்த ஹோட்டலில் போய் விவரத்தை சொன்னா 2 மணிக்கு தான் செக்கின். இப்ப ரூம் காலி இல்லைன்னு சொன்னாங்க.  மூணாவது மாடியில ஸ்விம்மிங் பூல் இருக்கு. அங்க போய் குளிச்சு ரெடியாகிக்கங்கன்னு சொன்னாங்க!!!
நீங்க எங்க வேணாம் போயிட்டு வாங்க, வந்ததும் ரூம் தர்றேன், அதுவரைக்கும் உங்க பொட்டி லாபியிலே இருக்கட்டும்னு சொன்னாங்க.
மணி 10.30. 2 மணி வரை எங்களுக்கு வெளியில் செல்லும் வேலை இல்லை.

அதற்குள் லோக்கல் கைட் சிண்டி வந்தாங்க. மேடம் பக்கா ப்ளானோட வந்து எல்லாம் சொல்லிட்டு இத்தனை இத்தனை மணிக்கு பிக் அப் எல்லாம் சொல்லிட்டு பட்டாயா மேப் பிரிண்டவுட் ஒண்ணையும் கொடுத்தாங்க. கூடவே இங்கே அதிகம் பர்ச்சேஸ் செய்யாதீங்க.  பேங்காக் தான் பெஸ்ட்டுன்னு சொன்னாப்ல. அதைவிட முக்கிய தகவலா உங்க உடமைகள் பத்திரம். இங்கே பிக்பாக்கெட் ஜாஸ்தி என்பதுதான் அது. நாங்க போயிருந்த சமயம் சர்வதேச ம்யூசிக்கல் ஃபெஸ்டிவல் என்பதால் செம கூட்டம் பட்டயாவில்.

மதியம் லஞ்ச் முடிச்சுத்தான் ப்ரொக்ராமே இருக்கு. 2 மணி வரைக்கும் லாபியிலேயே எப்படி உக்காந்திருப்பது? முதல் நாள் இரவு 9 மணிக்கு ஆரம்பிச்ச பயணம் அடுத்த நாளும் தொடர்ந்து கிட்டு இருக்கு. இடுப்பு  கடுக்குது.  அயித்தானின் நண்பருக்கு போனைப்போட்டாரு. “ஒரு ரூமாவது ஏற்பாடு செஞ்சிருக்க கூடாதான்னு?” கேட்டார். (12 வயசுக்கு மேலன்னா பெரிய ஆள் கணக்குத்தான் ஹோட்டலில்.  ட்ரிபிள் ஷேரிங் ரூம் எடுத்தாலும் இன்னொருத்தருக்காக ஒரு ரூம் போட்டுத்தான் ஆகணும். அதனால எங்க 4 பேருக்கும் ரெண்டு ரூம்)

நான் ஏற்கனவே ஜீ எம் கிட்ட பேசினேனே!! அப்படின்னு சொல்லிட்டு அவர் திரும்ப பேசுவதா சொன்னாரு. அவர் போன் செஞ்சு பேசிருப்பாரு போல. அடுத்த 10ஆவது நிமிஷம் ஒரு ரூம் கொடுத்தாங்க.  நல்லாயிருங்க சாமிகளான்னு ரூமுக்கு போய் ஒரு குளியலைப்போட்டு கட்டையை சாய்ச்சது தான் தெரியும்.....

தொடரும்......


12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// “தாய் சில்க் ” போல
“தாய் பாஷை புரியாத இந்தியன்” ///

விவரித்த விதம் அருமை...

முடிவில் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்...?

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

விவரித்த விதம் அருமை...//

நன்றி

முடிவில் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்...?

:))

வருகைக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

தாய்லாந்து பயண அனுபவம் சுவாரஸ்யம்.பாங்காக் நகரின் ஷாப்பிங் அனுபவத்தினையும் சொல்லுங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா லேண்ட் ஆயாச்சு.... அடுத்தது என்ன என ஆர்வத்துடன்!

புதுகைத் தென்றல் said...

வாங்க ஸாதிகா,

எல்லா அனுபவங்களும் வருது :))

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

அடுத்த பதிவு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடும்

வருகைக்கு மிக்க நன்றி

அமைதிச்சாரல் said...

பயணம் ஆரம்பத்துலயே உற்சாகமா ஆரம்பிச்சுருக்குதுன்னு சொல்லுங்க. இந்த மாதிரி அனுபவங்கள்தானே பயணத்தை இன்னும் ருசிக்க வைக்குது.

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

ஆமாம் அதெல்லாம் இல்லாட்டி சுவாரஸ்யம் எங்கே!! :))

வருகைக்கு மிக்க நன்றி

கோவை2தில்லி said...

சுவாரசியமாப் போகுது. தொடர்கிறேன்.

kadaisibench said...

ஆஜர்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி கோவை2தில்லி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி கடைசி பெஞ்ச்