Thursday, April 04, 2013

சின்ன சின்னதாய்............

மதிய உணவுக்கு 2.30 மணிக்கு அழைத்துச் செல்ல வண்டி வரும்னு சொல்லியிருந்தாங்க. எதற்கு இருக்கட்டும்னு 2 மணிக்கே லாபியில போய் உட்கார்ந்து கொண்டேன். சிண்டி எங்களை அங்கே பார்த்துவிட்டு வண்டிக்காரருக்கு போன் செய்ய ட்ரைவர் வந்து லன்சுக்கு அழைத்துச் சென்றார்.

ஸ்பைஸ் ரெஸ்டாரண்ட் இதுதான் எங்களுக்கு மதியம் இரவு ரெண்டு வேளையும் பட்டாயாவில் உணவு வழங்கப்போகும் இடம். உள்ளே போனால் கஜகஜன்னு ஒரே கூட்டம். எங்க ஹோட்டலில் இருந்த அனைத்து இந்தியர்களும் அங்கே சாப்பிட வந்திருந்தாங்க. அதைத்தவிர 3 பெரிய்ய பஸ் நிறைய்ய குரூப்கள். சாப்பாட்டு ஹாலின் ரெண்டு பக்கமும் ஹிந்தி, தெலுங்கு பட போஸ்டர்கள் கொஞ்ச நேரம் நாம இருப்பது தாய்லாந்தில் என்பதையை மறந்து போக வெச்சிடிச்சு.புஃபே டைப்பில் வட இந்திய உணவுகள் இருந்திச்சு. நல்ல கெட்டித்தயிர். வெஜ் உணவுகள் அதைத் தவிற தனியா ஒரு இடத்துல் நான் வெஜ் கறியும் வெச்சிருந்தாங்க.  சாப்பாடு நல்லா இருந்தது. ரசம், சாம்பார்லாம் பார்த்து ஆச்சரியமா இருந்தது.  கெட்டித் தயிர் வேற கேட்கணுமா!! சுடச்சுட ”நான்” ரெடியாகி வந்தது.   ஓனர் கிட்ட மெல்ல பேச்சுக்கொடுத்தோம். அப்பதான் தெரிஞ்சது அவரு “மனவாடு” என்று. :)) அவரின் பெயர் மிஸ்டர். பத்ரி ஃப்ரம் ஹைதராபாத். ஆனா 20 வருஷமா பட்டாயா வாசி. அதனால தான் ஹிந்தி போஸ்டர்களோட தெலுங்கு போஸ்டர்களும் அங்க கண்ணுக்கு விருந்தா இருந்தது.


நாங்க எங்க டூர் ஆப்பரேட்டர்கிட்ட ஆரம்பத்துலேயே ஒரு விஷயம் சொல்லியிருந்தோம்.  பட்டாயாவில் இந்த ஹோட்டலும், பேங்காக்கில் ஒரு ஹோட்டலிலும் தான் எங்களும் மதிய இரவு சாப்பாடுகளும் ஏற்பாடு செஞ்சிருக்காங்க. ஒரே ஹோட்டலுக்கு போக போரடிக்கும் அதனால வேற ஒரு ஹோட்டலும் கொடுங்கன்னு சொன்னோம். ஏற்பாடு செய்யறேன்னு சொன்னாங்க. ( பட்டாயாவில் மட்டும் சாப்பாட்டுக்கு வண்டியில அழைச்சுக்கிட்டு போற மாதிரியும், பேங்காக்கில் நடந்து போற தூரத்தில் இருக்கற ஹோட்டல் மட்டும்தான்னு சொன்னாங்க)

சாப்பாடு முடிச்சு திரும்ப ஹோட்டல்ல விட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துகிட்டு ஃப்ரெஷ் அப் ஆகி 3.45க்கு கீழே வந்தோம். கரெக்டா 4 மணிக்கு நம்ம ரூம் நம்பர் சொல்லி ஒருவர் அழைச்சார். (இவர்களுடைய நேரம் கடைபிடிக்கும் தன்மைக்கு என் வணக்கங்கள். எங்க ட்ரிப் மொத்தத்துலயும் சொன்ன நேரத்துக்கு சொன்னபடி கரெக்டா பிக் அப் ட்ராப் இருந்தது ஆச்சரியம்.  அப்பவும் என் மனசுல ஒரு விஷயம் ஓடிக்கிட்டு இருந்தது. எங்க வீட்டுல ஒரு விஷயம் என்னன்னா ஒரு இடத்துக்கு போகணும்னா கொஞ்சம் முன்னாடியே கிளம்பி ரெடியாகிடுவோம். சரியான நேரத்துல புறப்படுவது என்பது எங்க வீட்டுல எழுதப்படாத விதி. அதனால எங்களை “ இந்திய ஸ்டாண்டர் டைம்”  ஆளுங்க விசித்ரமா பாப்பாங்க :)

இந்த பழக்கத்தால தாய்லாந்தில் நாங்க வண்டியை மிஸ் செய்யாம இருந்தோம்.  எங்களோட இன்னொரு இந்திய குடும்பத்தை வேறொரு ஹோட்டலில் இரவு உணவுக்கு அழைக்க போனார் டிரைவர். லாபியில் ஆள் இல்ல. ரிஷப்ஷனில் சொல்லி ரூமில் கூப்பிட்டு பாத்தார். பதிலே இல்லை. 5 நிமிஷம் வெயிட் செஞ்சு பாத்தார். அப்புறம் கிளம்பி போய்விட்டார்.!!! இப்படி தவற விட்டா குறிப்பிட்ட இடத்துக்கு போக நாமளே ஏற்பாடு செஞ்சுக்க வேண்டியது தான்..

சரி எங்க போனோம் அதை பத்தி பாப்போம்!!

சில பாடல் காட்சிகளில் குட்டியாய் வரும் இடங்களைப் பார்த்து இந்த மாதிரி செட் போடுவாங்களோன்னு நினைச்சிருக்கேன். ஆனா தாய்லாந்து பயணத்தில் சுத்தி பாக்க வேண்டிய இடங்களை  கூகுளாண்டவர் கிட்ட கேட்டப்ப இந்த இடம் பத்தி தெரிஞ்சது. கண்டிப்பாய் போயிட வேண்டியது என டிக் செஞ்சு வெச்சுகிட்டு, அங்க போய் ஒரே கிளிக்... கிளிக் தான். :))

1986ல் இந்த இடத்தை கட்டி முடிச்சிருக்காங்க. இடத்தின் பெயர் மினி ச்யாம்.
மினியேச்சர் பார்க். பைசா நகரத்து சாய்வு கோபுரம், பிரமிட், ஈஃபில் டவர் எல்லாம் குட்டி குட்டியாய் ....


சுதந்திர தேவி சிலை,  சிட்னி ஒபேரா ஹவுஸ், சிங்கப்பூர் மெர்லயன்,  இத்துடன் தாய்லாந்து கலாசாராத்தை சொல்லும் கட்டிடங்கள், சிறப்பு கோவில்கள்,  அழக அழகாய் செஞ்சு வெச்சிருக்காங்க.  இந்த குட்டி குட்டி கட்டிடங்கள் பாக்க பரவசமா இருக்கு.

தாய்லாந்து ட்ரையின் பாலத்தில் போவதைப்போல எப்படி வடிவமைச்சிருக்காங்க பாருங்க!! அதே போல விமான நிலையம், புகழ்பெற்ற ராமா ப்ரிட்ஜ் எல்லாம்.. சூப்பரா இருக்கும்.
தாய்லாந்து பாராம்பரிய உடையில் போட்டோ எடுத்துக்கணும்னு ப்ளானோட தான் ஃப்ளைட் ஏறினேன்!!!  மினி சியாமை சுத்தி வந்தப்போ அங்க ஒரு இடத்துல கீரிடங்கள் வெச்சு போட்டோ எடுத்து கொடுத்துகிட்டு இருந்தாங்க.

நெட்ல படிச்சப்போ அந்த பாரம்பரிய உடை , தகுந்த மேக் அப், நகை எல்லாம் ரெடி செஞ்சு போட்டோ ஸ்டூடியோ காரங்களே ஏற்பாடு செஞ்சு தருவாங்க. 3 மணிநேரம் உடை, மேக் அப்புக்கே ஆகும்னு தெரிஞ்சது. ஆனா இங்க மினிச்யாமில் நாம போட்டிருக்கும் உடை மேலே அட்டாச் செஞ்சது பிடிச்சிருந்தது. பேங்காக்கில் போட்டோ வேணாம்னு  சொல்லிட்டு இவங்க கிட்ட கேட்டேன்.

பட்டாயாவின் முடி சூடிக்கொண்ட ராஜா ராணிகளாக நானும் அயித்தானும் ஒரு போட்டோ :) எங்கள் இளவரசியையும் ஒரு போட்டோ எடுத்து கொடுப்பதாக சொன்னாப்ல. இளவரசர் மட்டும் என்ன பாவம் செய்தார்? அவரையும் போட்டோ எடுத்து கொடுக்கணும்னு சொன்னேன். ராஜா, ராணி + இளவரசி போட்டோவுக்கு ஒரு போட்டோ இலவசமா இளவரசியை  வேற போஸில் எடுத்து தர்றேன்னு சொல்ல, அது வேணாம் அதுக்கு பர்த்தி இளவரசரை எடுத்து கொடுக்க சொல்லி 400 தாய்பட் பணம்னு சொல்ல ஓகே சொல்லிட்டோம் ராஜா, ராணி போட்டோ எடுத்துக்கிட்டதும், இளவரசியை ரெடி செஞ்சாங்க.

அடுத்து இளவரசர்


மினி ச்யாம் பசங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. உலக அதிசயங்களை ஒரே இடத்தில் பார்த்த ஆச்சரியம், இந்த மினியேச்சர்  கட்டிடங்களுக்கு பக்கத்தில் உட்கார்ந்து போட்டோ எடுத்த ஸ்வாரஸ்யம்னு மனதுக்கு இதமா இருந்தது.
4 மணிக்கு பார்க்குக்குள்ள நுழைஞ்சோம். வெளியே வரும்போது மணி 6. மாலை விளக்கொளியில் இந்த பார்க் இன்னும் அழகா ஜொலிச்சது.

வெளியே வரும்போது  இதன் அழகை, பார்த்து இவங்களுக்கு இங்க என்ன வேலைன்னு யோசிச்சுக்கிட்டே வெளிய வந்தோம்.

யூ ட்யூபில் கிடைச்ச இந்த வீடியோ மூலமா நீங்களும் ஒரு வாட்டி மினி ச்யாமை சுத்தி பாத்துக்கிட்டு இருங்க.


 அடுத்து போன இடத்தைப் பத்தி நாளைய பதிவில்

22 comments:

பழனி. கந்தசாமி said...

நல்லா இருக்குங்க.

பழனி. கந்தசாமி said...

உங்கள் தாய்லாந்து டூர் ஏற்பாடு செய்த ஏஜென்சியின் பெயர், விலாசம் கொடுக்க முடியுமா?

அப்பாவி தங்கமணி said...

Wow... nice trip it seems. Your travel posts make us travel with you as well. Thanks for sharing prince and princess pics. Superb

புதுகை.அப்துல்லா said...

பட்டாயா போனீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அட்டகாசம்...

தொடர்கிறேன்...

அமைதிச்சாரல் said...

சில பாடல் காட்சிகள்ல இந்த இடத்தைப் பார்த்ததுண்டு. எல்லாமே மினின்னாலும் மெகா அழகு :-)

புதுகைத் தென்றல் said...

வாங்க ஐயா,

பயண அனுபவத்தின் முதல் பதிவின் தலைப்பே கம்பெனியின் பெயர் :)

HI! TOURS!
மாலை அயித்தான் வந்ததும் விலாசம் கேட்டு தருகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க புவனா,

ரொம்ப மகிழ்ச்சி.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்துல்லா,

:))


வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

பல படங்கள் எடுத்தது அயித்தான் தான்.

இந்த முறை டிஎஸ்லார் கேமரா எனக்காகன்னு வாங்கியதை உபயோகிக்க முடியாம போச்சேன்னு வருத்தம். எடை அதிகமா இருந்ததால கைவலி வந்தது. ஆனா மனசு கேக்காம சில போட்டோக்கள் எடுத்தேன்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

ஆமாம் குட்டி குட்டியாய் பார்க்க பார்க்க கொலுவுல பார்க் அமைப்போமே அதுமாதிரின்னு நினைக்க தோணினிச்சு.

வருகைக்கு மிக்க நன்றி

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் பாடல் காட்சிகளில் பார்த்ததுண்டு..ஒரு ஆளுக்கு எவ்ளோ செலவு ஆகும்னு தோராயமா சொல்லுங்க..

புதுகைத் தென்றல் said...

Mabel

_____________________________
Hi Tours Mamallapuram Private Limited.
1st floor,Sri Kalyan Square,

# 83, Pantheon Road, Egmore,

Chennai - 600 008Tel : +91 (44) 42148011

Fax : +91 (44) 42148014

Follow us: you-tube-icon.jpg twitter-icon.jpgfacebook-icon.jpg

Website : www.hi-tours.com / www.hitours.in /www.hi-mice.in

Offices in India at: New Delhi | Chennai | Mamallapuram | Cochin | Udaipur | Varanasi

Overseas offices: Canada | UK & Ireland | Germany | France | Italy | Spain | Argentina

புதுகைத் தென்றல் said...

கந்தசாமி ஐயா,

வணக்கம் முந்தைய பின்னூட்டத்தில் டூர் ஏஜன்ஸி விவரம். தாங்கள் அவர்களிடம் தொடர்பு கொள்ளும் பொழுது அங்கே ஜீஎம்மாக இருக்கும் ஜவஹர் அவர்களின் நண்பர் ஸ்ரீராம் ஹைதராபாத் இந்த விவரங்கள் கொடுத்தார் என்று சொல்லுங்க.

தேவையான உதவிகள் செய்வாங்க.

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

தோரயாமா 50,000 ஒரு ஆளுக்கு எல்லாம் சேர்த்து ஆகிறது. இதில் ஃப்ளைட், விசா, தங்குவது, சுற்றி பார்ப்பது, 3 வேளை உணவு எல்லாம் அடங்கும்.

கோவை2தில்லி said...

அங்கே சாம்பார் ரசமா!

இளவரசனும் இளவரசியும் கலக்கறாங்க...:)

Anonymous said...

கிரீடம் அருமை

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

ஓனர் ஆந்திராக்காரர் ஆச்சே!!! அதான் சாம்பார், ரசம் கூட இருந்தது.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி கடைசி பெஞ்ச் :)

துளசி கோபால் said...

அடடா......தாய்லாந்துக்கு நிறையதடவை போயிருந்தாலும் இந்தப் பட்டயா மாத்திரம் மிஸ் ஆகிக்கிட்டே போகுது:(

இளவரசரும் இளவரசியும் அழகு!

ராஜாவும் ராணியும் இருப்பதைத் தனிமடலில் அனுப்பி வையுங்கள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசி டீச்சர்,

நிறைய்ய பேர் அப்படித்தான் சொல்றாங்க. அதுவும் சிலர் நாங்க பட்டாயா ஏன் போறீங்கன்னும் கேட்டாங்க. நான் தான் விடாப்பிடியா கூட்டிக்கிட்டு போனேன். :))

உங்களுக்கு மெயில் அனுப்பிட்டேன்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசி டீச்சர்,

நிறைய்ய பேர் அப்படித்தான் சொல்றாங்க. அதுவும் சிலர் நாங்க பட்டாயா ஏன் போறீங்கன்னும் கேட்டாங்க. நான் தான் விடாப்பிடியா கூட்டிக்கிட்டு போனேன். :))

உங்களுக்கு மெயில் அனுப்பிட்டேன்.

வருகைக்கு மிக்க நன்றி