Tuesday, August 13, 2013

சீதா கல்யாண வைபோகமே - 1

பத்ராசல ராமர் கல்யாண வைபோகத்தை டீவியில் பார்த்துக்கொண்டிருந்த பொழுது காலிங் பெல் அடிக்க எழுந்து போய் கதவை திறந்தார் தியாகு. “ரண்டி பின்னி!!” என முகமெல்லாம் சந்தோஷத்துடன் சித்தியை வரவேற்றார். ஃப்ளைட் கரெக்ட் டைமாப்பா? என மகன் ஷ்யாமை கேட்டுக்கொண்டே “ தண்ணி எடுத்துகிட்டுவாம்மா சீதா என மகளுக்கு சொன்னார்.

சீதா ஓடிப்போய் தண்ணி கொண்டு வந்து “அவ்வா!! இந்தாங்க தண்ணி” என்று கொடுத்துவிட்டு உனக்கும் வேணுமாண்ணா! என்று கேட்க அவன் வேண்டாம் என்று சொல்லவே பாட்டியை கட்டிக்கொண்டு உட்கார்ந்தாள்.

ஷ்யாம் பெட்டிகளை எடுத்துக்கொண்டு போய் சீதா  அறையில் வைத்தார். அம்மா முகம் பார்த்தான் பரவாயில்லை ரகத்தில் இருந்தது.“ரண்டி அத்தா!!” என அழைத்துவிட்டு காபி கலக்க சென்றுவிட்டாள் பத்மா.  (பின்னி - சித்தி, ரண்டி - வரவேணும்) 

”நாளைக்குத்தானே பெண்பார்க்க வர்றாங்க தியாகு”  என சீதாவின் முகத்தை வருடிய படியே கேட்டார் பானுபின்னி. “ஆமாம். சாயந்திரம் 4 மணிக்கு. அதான் உங்களை இன்றைக்கே அழைத்து வரச்சொன்னேன். இருந்து உங்க பேத்தி கல்யாணம் முடிச்சு கொடுத்திட்டுதான் போகணும்!!” என்று சொல்ல

அதுக்கென்ன! மஹா பாக்கியம்!” என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே
பத்மா காபியுடன் கொண்டு வந்து கொடுத்தாள். பானு பின்னியின் வரவு அவளுக்கு கொஞ்சம் இஷ்டமில்லை. மாமியாரே இல்லை. இந்த பானு பின்னி தியாகுவின் சித்தப்பா மனைவி. பத்மாவிற்கு சின்ன மாமியார். அவரை ஏன் அழைத்து வரச்சொன்னார், அதுவும் மும்பையிலிருந்து ஃப்ளைட்டில் என கோபம்.
                                                       மதியம் வாக்கில் பத்மாவின் அம்மாவும் வந்துவிட்டார்.  பத்மாவிற்குத்தான் வேற்றுமையே தவிர பானு பின்னிக்கும் பத்மாவின் தாயார் ராஜிக்கும் நல்ல நட்பு.

bhanu pinni


அடுத்த நாள் சீதாவை பெண் பார்க்க வருகிறார்கள். அதற்காகத்தான் இரு பெரியவர்களும் வந்திருக்காங்க. பையன் டில்லியில் ப்ரைவேட் கம்பெனியில் பெரிய வேலை. சீதாவும் பெரிய படிப்பு படித்திருக்கிறாள். வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். 25 வயதுதான்.தியாகுவின் மூத்தமகன் ஷ்யாமும் ஒரு கம்பெனியில் உயரதிகாரி. தியாகு ரிட்டயர் ஆக 4 வருடம் பாக்கி இருக்கு. நல்ல குடும்பம்.

தியாகுவின் பெற்றோர் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். அதனால் வீட்டில் விசேஷம் எனும் பொழுது பெரியவர்கள் இருக்க வேண்டும் என நினைத்து விவரம் தெரிந்த பானு சித்தியை வரவழைத்தார்.

”என்னென்ன வாங்கி வைக்கணும் விவரமா சொல்லுங்க பின்னி” அப்படின்னு கேட்க ஷ்யாம் பேப்பரும் பேனாம் கொண்டு வந்து எழுத ரெடியானான். சீதா பாட்டி பக்கத்தில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தாள். தாய் ராஜியும் மகள் பத்மாவும் உள்ளே அறையில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

 அங்கே மணமகன் ரகுராம் வீட்டினர் டில்லியிலிருந்து கிளம்பி சென்னையில் இருக்கும் அவர்கள் உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அடுத்த நாள் காலை முதலே வீடு அல்லோல படுகிறது. பானு பின்னி பேத்தியை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு,” டென்ஷன் ஆகாதேம்மா. எல்லா நல்ல படியா நடக்கும்” என்று பேசி அவள் பயம் போக்கினாளென்றால், அம்மம்மா ராஜியோ
பேத்திக்கு தலை குளிப்பாட்டி, காயவைத்து என அவளை பார்த்துக்கொண்டாள்.

தியாகும் ஷ்யாமும் போய் வேண்டியதை வாங்கி வந்தனர். இரு சம்ம்பந்திகளும் பத்மாவுக்கு துணையாக சமையல்கட்டில் வேலை பார்த்து சாயந்திரத்திற்கு தேவையான பலகாரங்களை செய்து வைத்தார்கள். மதிய சாப்பாடும் முடிந்து கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்த பத்மா ஃப்ரெஷ்ஷாக டிகாக்‌ஷன் போட்டு, பாலை காய்ச்சி எல்லோரும் காபி கலந்து கொடுத்தாள்.

எல்லோரும் ரெடியானார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரும் நேரமாயிற்று.....

தொடரும்.

9 comments:

Appaji said...

மாலையில் பெண் பார்க்கும் படலத்திற்கு....காலையிலிருந்தே தயார் செய்வீர்களா ! ...

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

மாலையில் பெண்பார்க்கும் படலம்னா வீட்டை நேர்படுத்துவது, டிபன் என்னவோ அதுக்கு ப்ளான் செய்வது, பால் வாங்கி வைப்பதுன்னு நிறைய்ய இருக்கே!!!

இதெல்லாம் காலையில் செய்தால் தானே முடியும்.

வருகைக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

சொஜ்ஜி பஜ்ஜியெல்லாம் உண்டு தானே.....:)

நாங்களும் இதோ கிளம்பி வந்துட்டே இருக்கோம்!

pudugaithendral said...

வாங்க சகோ,

அடுத்த பதிவுல சொஜ்ஜி, பஜ்ஜில்லாம் பரிமாறிக்கிட்டு இருக்காங்க. கூடவே சூப்பர் ஃபில்டர் காபியும். :)

வருகைக்கு மிக்க நன்றி

Geetha Sambasivam said...

அட? நான் என்னமோ அந்த சீதாவோட கல்யாணம்னு நினைச்சேனே. அதான் பத்ராசல ராமதாசர் சொல்றது! அதைக் குறித்துத் தான் எழுதப்போறீங்கனு நினைச்சேன். பரவாயில்லை. இந்தக் கல்யாணத்துக்கு பெண் பார்க்கிறச்சேயே வந்துட்டேன். :))))

Geetha Sambasivam said...

அப்பாஜி பெயரைப் பார்த்ததும் அப்பாதுரையோனு நினைச்சுட்டேன். :)

cheena (சீனா) said...

அன்பின் புதுகைத்தென்றல் - சீதா கல்யாண வைபோகமே - அருமை அருமை - அழகாக இயல்பாக அனைத்து நிகழ்வுகளூம் நடக்கின்றன.

டிவியில் பத்ராசல் ராமர் கல்யாண வைபோகம் நடந்து கொண்டிருக்கிறது. தலைப்பு சீதா கல்யாண வைபோகமே - சரி டிவி நிகழ்வினைப் பற்றி ஒரு பதிவு தானே - பொறுமையாகப் படிப்போம் என நினைத்து - நுனிப்புல் மேய்ந்தால் தியாகுவின் மகள் சீதாவினைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் நாளை மாலை வருகிறார்களாம்.

சீதா கல்யாணம் பத்ராசல ராமரோடு டிவியில் உணடோ இல்லையோ - இங்கு நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் தியாகு மகள் சீதாவினைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் நாளை மாலை வருகிறார்கள்.

தியாகு - மனைவி பத்மா - மகன் ஸ்யாம் - மகள் சீதா - சித்தி பானு - மாமியார் ராஜி மறு நாள் வைபவத்திற்குத் தயாராகிறர்கள்.

பத்மாவிற்குத் தான் பானுவினைப் பிடிகாதே தவிர் பானுவ்ம் ராஜியும் நல்ல தோழிகள்.

என்ன என்ன வாஙி வர வேண்டும் என பானு சொல்ல - ஷ்யாம் எழுதத் தயாரானான்.

அடுத்த நாளும் வந்து விட்டது - பானு சீதாவினை டென்ஷன் ஆகாதே என ஆறுதல் சொல்லித் தயார் செய்ய - ராஜியோ சீதாவினைத் தலை குளிப்பாட்டி காய வைத்துக் கொண்டிருந்தாள் .

தியாகும் ஷ்யாமும் போய் வாங்க வேண்டியதி வாங்கி வர, இரு சம்பந்திகளும் சமையல் கட்டில் பத்மாவிற்கு உதவியாக பலகாரங்கள்
செய்தன்ர்.

மாலையும் வந்தது - பத்மா சுடச்சுட எல்லோருக்கும் காஃபி போட்டுக் கொடுத்தாள் - மாப்பிள்ளை விட்டுக் காரரகள் வரும் நேரமாகி விட்டது.

இது சுருக்கமான கதை. ( ??? ) - மறுமொழியா கதைச் சுருக்கமா ?

நல்வாழ்த்துகள் புதுகைத் தென்றல் - நட்புடன் சீனா

pudugaithendral said...

வாங்க கீதா சாம்பசிவம்,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

:) கதை சுருக்க பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி