Wednesday, September 18, 2013

ஆஷிஷை பார்த்து சிவா கேட்ட கேள்வி!!!!!!!!

2 மாசம் முன்னாடியே தம்பி மங்களூர் சிவா கிட்டேயிருந்து போன். அக்கா ஹைதை வர்றேன். உங்களை கண்டிப்பா சந்திக்க வருவேன்னு. ஆகா வாங்க தம்பி காத்திருக்கேன்னு சொன்னேன். இதுல கூத்து என்னென்னா அயித்தான் வேலை விஷயமா மங்களூர் போயிருந்தப்ப  சிவா போன் நம்பர் வாங்கி பேசி சந்திப்பு நடந்துச்சு.

மங்களூர் சிவா தம்பி   - ஹஸ்பண்டாலஜி பதிவுகளின் போது காரசாரமாக
விவாதம் நடக்கும். வீக் எண்ட் ஜொள்ளு படங்கள் புகழ் பதிவர். நான் பதிவு எழுந்த ஆரம்பித்திலிருந்து தொடர்பில் இருக்கும் அன்பான தம்பி.

ஆஷிஷ், அம்ருதா எல்லாரையும் பாக்கணும் எத்தனை மணிக்கு வந்தா சரியா இருக்கும்னு விவரம் கேட்டார். தம்பி வருவதை பசங்களுக்கு சொல்லலை. சர்ப்ரைஸ். அயித்தானுக்கு தெரியும். அன்றைக்கு எதேச்சையாக அயித்தானும் லேட்டாக ஆபிஸ் போக இருந்ததால் சிவாவுக்கு ஆச்சரியம். சாரை பார்க்க முடியோமோன்னு நினைச்சேன்னு சொன்னாப்ல. ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தாப்ல. பேசிக்கிட்டே சாப்பிட்டோம். அயித்தான் சாப்பிட்டு ஆபிஸ் கிளம்பிட்டார். சாயந்திரம் தான் வந்து சிவாவை ஷ்டேஷன் அழைத்து சொல்வதாக சொல்லிட்டு போனார்.

அப்புறம் நானும் சிவாவும் பல கதைகள் பேசிக்கிட்டு இருந்தோம். 2.45க்கு அம்ருதா வந்தாப்ல.  யார் வந்திருக்காங்கன்னு யோசிச்சுகிட்டே உள்ளே நுழைய ஊர் பேர் சொல்றேன் கண்டுபிடின்னு சொன்னேன். மங்களூர்னு ஆரம்பிச்சதுதான்.... சிவா அங்கிள்னு சொன்னாப்ல. போன்ல முன்னாடி பேசியிருக்காங்க. ஆனா முதல் சந்திப்பு இது. எனக்கும் தான். அம்ருதா கூட பேசிக்கிட்டு இருந்தாப்ல. அன்னைக்கு ஆஷிஷ் சீக்கிரமே 4.45க்கு வந்திட்டாப்ல. ஃபேஸ்புக்ல சிவாவை பாத்திருப்பதால ஆஷிஷ் அடையாளம் கண்டுகிட்டாப்ல.

அப்பதான் ஆஷிஷைப் பார்த்து அந்த கேள்வியை சிவா கேட்டார்.  இப்ப டீன் ஏஜ் வயசுல வீட்டு சாப்பாடு பிடிக்காது. அம்மா சமைப்பதை சாப்பிடாம வெளியில சாப்பிட பிடிக்கும்.!! எப்படி உங்களுக்குள்ள சண்டை வருதான்னு கேட்டார்.

ஆமாம் சிவா சண்டைதான் வருது!! அப்படின்னு சொல்ல அவர் வேற மாதிரி நினைக்கறதுக்குள்ள “வயிறு காஞ்சு வர்றியே இது நியாயமான்னு!?? சண்டைனு சொல்ல புரியலைக்கான்னார் சிவா தம்பி.

ஆஷிஷ், “ என் டப்பாவை நான் சாப்பிடுவதே இல்லை அங்கிள். லன்ச் ப்ரேக் விட்ட அஞ்சாவது நிமிஷம் என் டப்பா காலியாகிடும். வேற கிளாஸ்ல இருக்கற என் ஃப்ரெண்ட் கூட ஓடிவந்திடுவான். அம்மா கட்டி கொடுப்பதை நான் சாப்பிடாம அவங்க கொண்டு வர்றதை சாப்பிட்டு ஒப்பத்தறேன்”ன்னு சொன்னாப்ல.

இதுதான் பிரச்சனை எனக்கு இப்ப. ஆசை ஆசையாய் ஆஷிஷ் சாப்பிட அனுப்பினால் மத்த பசங்க சாப்பிட்டு கொண்டாட்டமா இருக்காப்ல.
சில சமயம் அவங்க கொண்டு வந்தது வயத்துக்கு பத்தாம சாயந்திரம் வரை காய்ஞ்சு வருவாப்ல. ஸ்கூல்ல ஒரு பையன்  ஆஷிஷிற்கு தெரியாம ஷார்ட் ப்ரேக்கிலேயே பாஸ்தா மொத்தத்தையும் காலி செஞ்சு வெச்சிருந்தாப்ல. லஞ்ச் ப்ரேக்ல பார்த்தா அட்சய பாத்திரத்துல இருந்த கீரை மாதிரி பாஸ்தா கண்ணுல பட்டிருக்கு!

 சில பசங்க ஆஷிஷ் நீ உங்க அம்மா கிட்ட சொல்லிடு. வர்ற ஞாயிற்றுக்கிழமை சாப்பிட வர்றோம். அப்படின்னு தானே இன்வைட் செஞ்சுக்கிடுவாங்க. இப்படி ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்காங்களேன்னு சரி வர சொல்லுன்னு ஒரு நாள் லீவா இருக்கும்போது வரசொன்னேன்.

அதே சாப்பாடு தான். ஆனா ரெண்டு பசங்களும் சரியா சாப்பிடலை. நிஜமாவே இந்த பசங்க தான் ஆஷிஷ் கொண்டு போற சாப்பாட்டை சாப்பிடறாங்களா இல்லை வேற ஏதுமான்னு டவுட் வந்திருச்சு. அடுத்த நாள் ஆஷிஷ் காலேஜுக்கு போய் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட நீங்க சரியாவே சாப்பிடலைன்னு சொல்லி வருத்தப்பட்டாங்க அப்படின்னு சொல்ல,” சாரி ஆஷிஷ். உங்க அம்மா சாப்பாடு பக்குவமா கலந்து கொடுக்கறாங்க.  நேத்து எங்களுக்கு கலந்து சாப்பிட தெரியலை!!! அதான் சரியா சாப்பிடலைன்னு!! சொல்லியிருக்காப்ல.
எப்படி இருக்கு பாருங்க??? “ஏன்யா அவங்க வீட்டுல சாப்பாட்டை கலந்துதானே சாப்பிடணும்னு கேட்டா சிரிக்கறாப்லயாம்.

சாம்பார், வத்தக்குழம்பு, காரக்குழம்பு சோறு கலக்கும்போதே கொஞ்சம் நல்லெண்ணையும் சேர்த்து கலக்குவேன். உடம்புக்கும் நல்லது. நல்ல மணமாவும் இருக்கும்னு எங்க அம்மம்மா சொல்லிக்கொடுத்தது இந்த மெத்தட். அதோட கொஞ்சம் நெய் விட்டா இன்னும் வாசம் தான்.

இப்ப இந்த கூட்டத்துல இன்னொரு புள்ளையும் சேர்ந்திருக்கு. தினமும் ஆஷிஷ் டப்பாவை எடுத்து வெச்சுக்கிட்டு தாரளாமா தன் டப்பாவை ஆஷிஷுக்கு கொடுத்திடறாப்லயாம். ”ஆண்ட்டிக்கோ போல். ஆஜ்கா கானா பகுத் அச்சா ஹைன்னு!!” மெசெஜ் வேற வருது. பதின்ம வயசுல வீட்டு சாப்பாடு பிடிக்காம போகும் சூழல் இருக்கு. ஆனா ஆண்டவனருள்ல ஆஷிஷ்க்கு சாப்பாடு பிடிக்காம போகலை.....  சந்தோஷமா இருக்கு. கிடைக்காம போகுதேன்னு வருத்தமா இருக்கு. ஆனா நான் அனுப்பற மிளகு ரசம், காய்கள்னு கொஞ்சமாவது ஆரோக்யமான சாப்பாடு, நல்லெண்ணெய் நெய் எல்லாம் சேர்த்து மத்த பதின்ம வயது பசங்களுக்கும் உடம்புல சேருதேன்னு சந்தோஷமாவும் இருக்கு.

போற போக்கை பார்த்தா ஒரு படத்துல பிந்து கோஷ் ஒரு பெரிய கேரியர் கொண்டு வருவாங்க. அது மாதிரி கட்டி அனுப்பினாத்தான் ஆஷிஷுக்கு கொஞ்சமாவது சாப்பாடு கிடக்கும்!!!!!


     இன்னைக்கு விசர்ஜன்னு ஸ்கூல் லீவு. ரெண்டு பேருக்கும் பரிட்சை இருப்பதால கூட இருந்து ஹெல்ப்  செஞ்சுகிட்டு இருப்பதால வேற எதுவும் செய்யாம சிம்பிளா ராஜ்மா சாவல் செஞ்சேன். (ராஜ்மா கறியும், சோறும்) இதுவும் ஆஷிஷ் கிளாஸ் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். என்னய்யா செய்யறன்னு வந்த மெசஜுக்கு சும்மா இருக்க முடியாம ஆஷிஷ்,”இட்ஸ் ரெயினிங் அவுட்ஸைட்!!! எஞ்சாயிங் ரஜ்மா சாவல்!!!னு மெசெஜ் தட்ட
“தேரே கர் கா அட்ரஸ் செண்ட் கர்” (வூட்டு அட்ரஸ் அனுப்புன்னு) மெசெஜ் வருது.

:)))

 

17 comments:

மங்களூர் சிவா said...

lunch Aalu parathaa is too tasty.

Convey my wishes to kids akka.

மங்களூர் சிவா said...

பூங்கொடிக்கும் உங்க எல்லாரையும் பார்க்க ஆவல் இந்தமுறை இயலாமல் போய்விட்டது.

வல்லிசிம்ஹன் said...

நல்ல அம்மா நல்ல பிள்ளை.
இது வழிவழியா நடந்துட்டு வரதுதான்.
மகளுக்கு அனுப்பும் புலாவோ, சப்பாத்தி சப்ஜியோ அவள் சாப்பிடுவதற்கு முன்னால் தீர்ந்து போயிடும்.
எப்போனு கேக்கறீங்களா. அவள் அலுவலகத்தில் சேர்ந்த பிறகு:)
எனக்கு அடுத்த நாள் மெனு கூட கொடுத்து அனுப்புவாங்க:)
ஊரார் பிள்ளை வளருது. ஆஷிஷ் அண்ணாவும் வளர்ந்துவிடுவார்.

சுசி said...

நானும் வத்தக்குழம்பு, சாம்பார், ரசம் சாததுக்கெல்லாம் நெய்யும், நல்லெண்ணையும் தான் விட்டு கலந்து கொடுப்பேன். பெரும்பாலும் பருப்பு சாதம் கலந்து அதில் சாம்பாரோ,ரசமோ எது செய்யரோமோ அதை விட்டு கலந்து விடுவேன். பருப்பு சேரட்டுமேன்னு. பாவம் சின்னது அழறது "எல்லோரும் புடுங்கிண்டுடறாம்மா எனக்கு இருக்கவே மாட்டேன்கிறது"ன்னு.நீ அவாள்த ஷேர் பண்ணிக்க வேண்டியது தானே ன்னா. அவாள்து நம்மாத்து அத்தனைக்கு நன்னா இல்லைங்கிறது. ஒரு பக்கம் பெருமையா இருந்தாலும், ஒரு பக்கம் பாவமா இருக்கு. சாம்பார் சாதமெல்லாம் நன்னா குழைசலா பிசைந்து நிறைய சாம்பார் விட்டு தளர கலந்தா நன்னா இருக்கும். கொஞ்சம் மெனக்கிடணும். அதை செய்ய நிறைய பேர் தவறி விடுகிறார்கள். அப்புறம் குழந்தை சாப்பிடலைன்னு அதை போட்டு அடிக்க வேண்டியது.குழந்தைகளுக்கு சாப்பாடு நன்னா இல்லைன்னு சொல்லதெரியரதில்ல. சாப்பிடாம விளையாடி பசியை மறக்கறதுகள். அவனுக்கு விளையாட்டு மோகத்துல சாப்பாடே செல்றதில ன்னு வேற சொல்லிக்க வேண்டியது.



இதைப்பற்றி தனி பதிவே போடலாம்.

நீங்க உங்க குழந்தைகளின் நண்பர்களையும் உங்க நண்பர்களாவும், உங்க ப்ளாக் நண்பரை உங்கள் குடும்பத்தினர் தங்கள் நண்பராகவும் கருதுவது ரொம்ப பெருமைக்குரிய விஷயம். இயல்பா எல்லோரையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தோமேயானால் நம் நட்பு வட்டமும் பெரிதாக இருக்கும். வாழ்க்கையும் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

அந்தப் பசங்க வயிறும் நிரம்பறப்ப நம்ம மனசும் நிறைஞ்சு போகுதுங்க..

pudugaithendral said...

வாங்க சிவா,

இன்னும் நிறைய்ய அயிட்டங்கள் சமைக்க முடியாம கைவலி ஆட்டம் காட்டிகிட்டு இருந்தது. இல்லாட்டி கலக்கியிருக்கலாம். :))

ஆமாம் பூங்கொடியோட இன்னொரு வாட்டி கண்டிப்பா வாங்க

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

ஆபிஸுக்கு போயுமா சரிதான். :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தானைத்தலைவி,

தெரிஞ்ச ஒரு பொண்ணு தன் பசங்களுக்கு சாதம் தனியாவும், குழம்பு தனியாவும் வெச்சு கட்டி கொடுப்பாங்களாம். 2 கிளாஸ் படிக்கற குழந்தை கலந்து சாப்பிட்டுகிட்டா இருக்கும். விளையாட்டு புத்தியால்ல இருக்கும்.

நீங்க எப்படி கட்டி கொடுப்பீங்கன்னு கேட்க கலந்துதான் கொடுப்பேன்னு சொன்னேன். அதுக்கு அவங்க கலந்தா கட்டியால்லா போயிடும்னாங்க.

நல்லா தளர கலக்கணும்னு சொன்னா அதுக்கு அவங்க சொன்னது தான் ஹைலைட்டே.... அய்யோ அப்ப நிறைய்யல்ல சமைக்கணும்!!!

பசங்க ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுவது எவ்வளவு முக்கியம்.. ம்ம் இது தான் பிரச்சனை. அப்புறம் நீங்க் சொல்ற மாதிரி பசங்க சாப்பிடலைன்னு அடிக்க வேண்டியது.

pudugaithendral said...

நீங்க உங்க குழந்தைகளின் நண்பர்களையும் உங்க நண்பர்களாவும், உங்க ப்ளாக் நண்பரை உங்கள் குடும்பத்தினர் தங்கள் நண்பராகவும் கருதுவது ரொம்ப பெருமைக்குரிய விஷயம்.//

நட்பு வட்டம் கண்டிப்பா வேணுங்க. இங்க பதிவுலகத்துக்கு வந்தற்கப்புறம் நட்புன்னு சொல்வதை விட உறவு வட்டமாவே ஆகிட்டோம். :)

//இயல்பா எல்லோரையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தோமேயானால் நம் நட்பு வட்டமும் பெரிதாக இருக்கும். வாழ்க்கையும் நன்றாக இருக்கும். //

அதே தாங்க. வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

ஆமாம்பா. தினமும் வந்து ஆஷிஷ் எக்ஸ்ப்ரஷன்சோட சொல்றதை கேட்கும் போது பாராட்டு பத்திரம் கிடைக்கற குஷி. கலைஞனுக்கு பாராட்டுதானே ஊக்கம். :)) சமையல் கலைக்கு அது ரொம்ப ஈசியா கிடைச்சிடாதே.

வருகைக்கு மிக்க நன்றி

ADHI VENKAT said...

நல்ல கதை தான். இங்கயும் அப்பப்போ இந்த கதை நடக்குது...:)


pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

வொய் ப்ளட்.... சேம் ப்ளட். :))

வருகைக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

எப்பவுமே இப்படித்தான்.... :)

பல சமயங்களில் எனது உணவே கிடைக்காது வரண்ட சப்பாத்தி உண்டிருக்கிறேன்! :(

ஹுஸைனம்மா said...

அய்யோ, இதப் பத்தி எழுதணும்னு நினைச்சு, எப்படிப் புரிஞ்சுப்பாங்களோன்னு யோசிச்சு யோசிச்சு எழுதல!! இங்கயும் அதே கதைதான்... இங்க பாதி அம்மாக்கள் பிள்ளைகளுக்கு ஜூஸ், சிப்ஸ்னுதான் கொடுத்து விடுறது. (கேட்டா, பழி பிள்ளைங்க மேல) நம்ம சாப்பாடு கொடுத்துவிடும்போது ஆசப்பட்டு எடுத்துச் சாப்பிடுறாங்க.... சாப்பாடை விடுங்க, தண்ணி??!! அதக்கூடக் கொண்டுவரச் சோம்பல்பட்டு.... கஷ்டம்!!

pudugaithendral said...

வாங்க சகோ,

சப்பாத்தி கூட சாஃப்டா ஏன் இருக்க மாட்டேங்குதுன்னு தான் எனக்கு புரியலை. இத்தனைக்கும் வடநாட்டுக்காரங்க தான் :(

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

நாம எப்பவுமே சேம்ப்ளட்டாத்தானே யோசிப்போம். :))

என் பிள்ளைக்கு இது போதும்னு நினைச்சு டப்பா கட்டுவாங்களான்னு சந்தேகமா இருக்கும் எனக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

நாம எப்பவுமே சேம்ப்ளட்டாத்தானே யோசிப்போம். :))

என் பிள்ளைக்கு இது போதும்னு நினைச்சு டப்பா கட்டுவாங்களான்னு சந்தேகமா இருக்கும் எனக்கு.

வருகைக்கு மிக்க நன்றி