எல்லோருக்கும் அன்பு வணக்கங்கள்.
வழக்கம்போல 2014 வருடத்தின் நிறம் என்னன்ன பதிவு எழுத வந்திருக்கேன். அதற்கு முன்னால சந்தோஷமான விஷயத்தையும் பகிர்ந்துகொள்ள ஆசை.
எங்களது தந்தை திரு.ரமணி அவர்களுக்கு 70ஆம்வயது பூர்த்தி ஆவதை சிறப்பாக கொண்டாடப்போகிறோம். வரும் மாதம் இதே நாளில் அதாவது ஜனவரி 20ஆம் தேதி புதுகையில் அப்பாவிற்கு பீமரத சாந்திவிழா. அப்பாவுக்கு 60 ரொம்ப பெருசா செய்யலை. அப்ப நானும் இலங்கையில் இருந்தேன். தம்பியும் சிங்கைக்கு போன புதுசு. விடுப்பு கிடைக்கலை. அதனால இந்த விழாவை விமர்சையா செய்யணும்னு தம்பி சொல்ல ஆரம்பிச்சோம். ஆனா அப்பாவுக்கு இஷ்டமே இல்லை. மகனுக்கு கல்யாணம் அமையலையேன்னு வருத்தம். இதுல இந்த நிகழ்வு தேவையானு வருத்தப்பட்டார்.
ஒரு சுபம் இன்னொரு சுபத்தை இழுத்துக்கிட்டு வரும்பா!” அப்பாகிட்ட பேசி பேசி அம்மாவோட ஒத்துழைப்போட எப்படியோ ஆரம்பிச்சோம். ஆனாலும் அவர் மனசு ஒரு மாதிரியாதான் இருந்தது.
இதோ அடுத்த மாதம் அப்பாவோட ஃபங்ஷன்னா.... தம்பிக்கு சம்மந்தம் அமைஞ்சிருச்சு. நாங்க எதிர் பார்த்தபடியே பட்டுபுடவை வேணாம்னு சொல்லி சந்தோஷமா எங்க வீட்டுக்கு வர சம்மதிச்ச பொண்ணு கிடைச்சிருக்கு. தூரத்து உறவுன்னு கிட்ட போனப்போ தெரிஞ்சது. 25 வருடங்களா எங்க வீட்டுல நடக்கற கல்யாணங்களில் நோ பட்டு, நோ டவுரி. நகை, பணம், வெள்ளி இதெல்லாம் இம்புட்டு அம்புட்டு வேணும்னு டிமாண்ட் செய்யாத இன்னொரு கல்யாணம் எங்க வீட்டுல.
இந்த கொள்கையை ஆரம்பிச்சு வெச்ச அந்தேரி தாத்தா இப்ப இருந்தா சந்தோஷப்பட்டிருப்பார். இந்த வேலைகளால தான் நானும் பிசி பிசியாய் இருந்தேன். அப்பா ஃபங்ஷனுக்கு முதல்நாள் புதுகையில் தம்பியின் நிச்சயதார்த்தமும் நடக்குது. அந்த வேலைகள் முடிஞ்சு கல்யாண வேலைகள் துவங்கணும்னாலும் வருவேன்...... :))
2014 வருடத்தின் நிறம் என்ன? இதை தெரிஞ்சுக்க நானும் ஆவலா காத்திருந்தேன். இதோ அந்த நிறம்.... அதன் குணாதிசயங்கள் உங்களுக்காக.
Radiant Orchid: இதுதான் அந்த நிறம்.
தன்னம்பிக்கையையும், சந்தோஷத்தையும் தரக்கூடியதாக இருக்கும் இந்த நிறம் அன்பையையும் நோயற்ற வாழ்வையும் தரும்.
கண்ணுக்கு குளிர்ச்சியான இந்த நிறம், நம் கற்பனா சக்தியையும் தூண்டுவதா இருக்கும். பிறக்க இருக்கிற புத்தாண்டு எல்லோருக்கும் தன்னம்பிக்கையையும், அளவிட முடியாத மகிழ்ச்சியையும் தேக ஆரோக்கியத்தையும் தருவதாக அமைய வேண்டுமென ப்ராத்திக்கிறேன்.

20 comments:
அப்பா ஃபங்ஷனுக்கு முதல்நாள் புதுகையில் தம்பியின் நிச்சயதார்த்தமும் நடக்குது.//
அப்பாவின் பீமரத சாந்தி நன்றாக நடக்க வாழ்த்துக்கள்.
தம்பியின் நிச்சயதார்த்தவிழாவுக்கு வாழ்த்துக்கள்.
பிறக்க இருக்கிற புத்தாண்டு எல்லோருக்கும் தன்னம்பிக்கையையும், அளவிட முடியாத மகிழ்ச்சியையும் தேக ஆரோக்கியத்தையும் தருவதாக அமைய வேண்டுமென ப்ராத்திக்கிறேன்.//
நானும் உங்களுடன் சேர்ந்து பிராத்திக்கிறேன்.
2014 ஆம் வருடத்தின் நிறம் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் தரட்டும்.
அருமை... அருமை...
நன்றி.... வாழ்த்துக்கள்...
very nice and happy.
இரட்டை சந்தோஷம்... எல்லாம் நல்லபடியாக நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்..
வருகிற புத்தாண்டில் எல்லார்க்கும் நல்லதே நடக்கட்டும்..
மனமார்ந்த வாழ்த்துகள்.....
அப்பா அம்மாவிற்கு என் நமச்காரங்களையும், தம்பிக்கு என் ஆசிர்வாதங்களையும் தெரிவியுங்கள்.
என் அப்பாவிற்கும் வரும் சித்திரை முதல் நாள் எழுபது பூர்த்தியாகிறது. அதற்குள் என் தம்பிக்கும் நல்ல இடம் அமையவேண்டும். அன்னை பராசக்தி அருளால் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நோ பட்டு, நோ டவுரி. நகை, பணம், வெள்ளி இதெல்லாம் இம்புட்டு அம்புட்டு வேணும்னு டிமாண்ட் செய்யாத இன்னொரு கல்யாணம் எங்க வீட்டுல>>>>>இந்த யுகத்தின் சகாப்தம் !! வாழ்க, வளர்க...தங்களது அமைதி புரட்சி.!
>>வருடத்தின் நிறம் ...........புதிதாய் யோசித்து 2014 வருடத்தை வரவேற்று உள்ளீர்கள்....வாழ்த்துகள்..! நன்றி
- அப்பாஜி
வாங்க கோமதி அரசும்மா,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க தனபாலன்,
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சிவா,
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க ஆதி,
பக்கத்துல தான் புதுக்கோட்டை முடிஞ்சா ஒரு எட்டு வாங்க. பத்திரிகை மெயில் பண்றேன்.
வாங்க சகோ,
மிக்க நன்றி
வாங்க தானைத்தலைவி,
கண்டிப்பா உங்க தம்பிக்கும் சம்மந்தம் சீக்கிரம் அமையும். என்னுடைய மெயிலுக்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்க. ஒரு மேட்டர் சொல்லணும். pdkt2007@gmail.com
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அப்பாஜி,
காஞ்சி மஹா பெரியவர் வாக்கை எங்க வீட்டுல கடை பிடிக்கிறோம்.
வருடத்தின் நிறம் ஒவ்வொரு வருடமும் பெண்டோன் எனும் நிறுவனம் வெளியிடும். அந்த தகவலை இங்கே நான் பகிர்வேன்.
வருகைக்கு மிக்க நன்றி
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...
முதல் வருகையில் ரெண்டு விசேசத்தை தெரிஞ்சுகிட்டேன். ரொம்ப மகிழ்ச்சி. உங்க நோ டௌரி ,நோ பட்டு எதிக்ஸ் கலக்கல் சகோ. நிற அறிமுகமும் அட்டகாசம்!
அப்புறம் ஒரு மேட்டர். நானும் புதுகை தான் சகோ!!
நன்றி தனபாலன்,
வாங்க மைதிலி,
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
நீங்களும் நம்ம ஊரா!!!?? புதுகையில் எங்கே? அடிக்கடி வாங்க
Post a Comment