Thursday, November 20, 2014

ஹைதை ஆவக்காய பிரியாணி - 20.11.14

ஆஸ்ரமம்னாலே பிரச்சனைகள் தான்ன்னு மக்கள் முடிவு கட்டிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை. சண்டிகரில் நடந்த கலவரங்கள் இன்னொரு வாட்டி அதை ஸ்ட்ராங்க சொல்லுது.ஆஸ்ரமத்துல வெப்பன்ஸ் எதுக்குப்பா. அதுல ஒரு கைக்குழ்ந்தையும் இறந்திருக்குதுன்னு படிக்கும்போது கோவம் தான் வருது.
ஆண்டவனை நாமளே நமக்குள்ளேயும் பிறர்லயும் பார்க்கலாமே. இடைத்தரகர்கள் இன்னாத்துக்கு.

இருக்கும் இடத்தை விட்டு பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது. :(
******************************************************************************
தெலங்கானா புலம்பல்னே வாராவரம் ஒரு தனிப்பதிவு போடலாம் போல இருக்கு. மார்ச் மாதம் ஸ்டேட் போர்ட் பரிட்சை வர இருக்கு. இதுல இப்ப இங்கே இருப்பது ஒரே போர்ட் தான்.  தனி மாநிலமானதுக்கு பின்னாடி இருக்கற பல பிரச்சனைகளைதான் பாத்துக்கிட்டு இருக்காங்களே தப்ப, மாணவர்கள் பரிட்சை பத்தி இப்பதான் யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க.

இப்ப உடனடியா சிலபஸ் மாத்தி பரிட்சை வைப்பது கஷ்டம். அதனால இருக்கும் போர்டே இரண்டு மாநிலத்துக்கும் தனித்தனியா பரிட்சைகளை நடத்துவதா தீர்மானிச்சிருக்காங்க.  இதுக்கப்புறம் மாநில நுழைவுத்தேர்வான எம்ஸட் பிரச்சனை வரும். ஏற்கனவே பிட்சாட் செண்டர் பிரச்சனைன்னு
பசங்க பரிட்சை ஸ்ட்ரெஸ்ஸோட இதையும் சேத்து கஷ்டப்படறாங்க.
**********************************************************************************
தெலங்கானா தனிமாநிலமாகி கொஞ்ச மாசத்துல ஒஸ்மானியாவுல திரும்ப ஸ்ட்ரைக். இதுவரைக்கும் தெலங்கானா வேணும்னு போராடின பசங்களே தெலங்கானா வந்ததுக்கப்புறமும் வேலை வாய்ப்பு ஏதும் சரியா அமைக்கப்படலைன்னு  யுனிவர்சிட்டி ஏரியாவை அதகளம் செஞ்சுகிட்டு இருக்காங்க.
மொத்தத்துல அழகான பல்கலைக்கழம், இப்போ அமைதி இழந்து ஆக்டிவிட்டிகள் நடக்கும் இடமா மாறிப்போச்சு. :(
****************************************************************************
முகநூலில் இதைப் படிச்சேன்.
 அப்பாவுக்கு மகள் மீது இருக்கும் பாசத்தை இது சொல்லுது சரிதான். ஆனா இதைப்படிக்கும்போது என் மனசுல ஒரு கேள்வி. மகனோட மனைவி வந்து மகனுக்கும் தந்தைக்குமான உறவை இல்லாம செய்வது  பல இடத்துல நடக்குதுன்னாலும் கூட, அந்த மாதிரி தன் மகள் செய்யாம இருக்க கத்துக்கொடுக்க வேண்டியது அப்பாவோட கடமையில்ல!!!!! ( அம்மா சொல்லிக்கொடுக்க வேண்டியது தானேன்னு கேக்க கூடாது ஆமா சொல்லிட்டேன். மகள்களை  செல்லம் கொடுத்து கெடுப்பது அப்பாக்களே)
யாராவது ஒரு அப்பா நல்லதை ஆரம்பிச்சு வெய்ங்களேன்!!!
********************************************************************************

இந்த சாக்லெட் பேபி போட்டோவும் நெட்டுல சுட்டதுதான். அது அழகா!! அதோட தொப்பை அழகா! இந்த குட்டி பாப்பா மேல பூசியிருக்கறதால சாக்லெட் அழகா!!! தலையில் இருக்கும் கிரீடம் அழகா. போங்கப்பா... மொத்தத்துல இந்த செல்லக்குட்டி அழகோ அழகு







4 comments:

ஹுஸைனம்மா said...

ஆஸ்ரமம் - முன்னாடிலாம் துறவிகள்னா ஒரு மரியாதை மதிப்பு இருந்துது. இப்ப சாமியார்னாலே சந்தேகம்னு ஆகிடுச்சு. :-( பல தொழில்களும் அப்படித்தான் இருக்கு இன்று -ஆசிரியர்கள், டாக்டர்கள்...

//தெலங்கானா புலம்பல்னே வாராவரம் ஒரு தனிப்பதிவு போடலாம் போல //

தனிக்குடுத்தனம் போனவங்ககூட சீக்கிரம் செட்டிலாகிடுவாங்க. தனி நாடு/மாநிலம்னா காலத்துக்கும் பிரச்னைதான் போல...

மருமகளைக் குறை சொல்றவங்க, தன் மகளும் இன்னொரு வீட்டின் மருமகள் என்பதை மறந்துடுறாங்க.. :-(

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

மருமகளைக் குறை சொல்றவங்க, தன் மகளும் இன்னொரு வீட்டின் மருமகள் என்பதை மறந்துடுறாங்க.. :-(//

இந்த மாமியார் கைபட்டான்னு ஒரு பழமொழி வருமே அது இதுக்கும் பொருந்தும். தன் மகள்னா ஒசத்தி. மருமகள்னா இளப்பம்னு இருக்கறவங்க இருக்காங்க.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

செல்லம் எந்தளவு உண்டோ அந்தளவு கண்டிப்பும் கண்காணிப்பும் வேண்டும்...

செல்லக்குட்டி அழகோ அழகு....

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

நலமா?? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.