Wednesday, February 15, 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா??!!! . பாகம் 16

எந்த ஒரு செயலுக்கும் ஏதாவது ஒரு எதிர்செயல்பாடு இருக்கும்னு சொல்வாங்க. சில சமயம் நம்ம செயல்பாடுகள் இடியாப்ப சிக்கலில் நம்மை மாட்டி வைத்துவிடும். “Speak when you are angry and you’ll make the best speech you’ll ever regret.” ~Laurence J. Peter. எவ்வளவு அழகா சொல்லியிருக்கார்ல.

 ஏதாவது ஒரு பிரச்சனையின் போதோ வாக்குவாதத்தின் போதோ நாம எப்படி அந்த சமயத்துல நடந்துப்பதுன்னு தெரியாமலேயே தவறா செயல்பட்டுடறோம். சூழ்நிலைக்கு தக்க நடந்துக்கணும்னு என்பதையும் விட அந்த சூழ்நிலையில் நாம எப்படி செயல்படறோம் என்பது முக்கியம். ஆங்கிலத்தில் Respond Instead of Reacing அப்படின்னு சொல்வாங்க.

ரெண்டுக்கும் என்ன பெருசா மாறுதல் இருக்கு. ஒரே அர்த்தம் தானேன்னு தான் நாம நினைப்போம். இரண்டுக்கும் ஒரே அர்த்தம் இல்லை என்பதுதான் நிஜம். Respond : அப்படின்னா பதில்கொடுப்பது. நாம என்ன மாதிரி பதில் சொல்றோம், அல்லது பதில் கொடுக்கறோம்னு வெச்சுக்கலாம்.
 React :  இதற்கு சரியான அர்த்தம் “எதிர்செயல் ஆற்று” அதாவது எதுவும் யோசிக்காம , பின் விளைவுகளைப்பத்தி யோசிக்காம நடந்துப்பதை தான் ரியாக்‌ஷன். பொதுவாவே நாம ஏதாவது ஒரு தருணத்துல முறையா பதில் சொல்வதற்கு பதில் ரியாக்ட் ஆகிடுவோம். ஒரு சூழ்நிலை அல்லது பிரச்சனையின் போது நாம எப்படி Respond செய்றோம் என்பது அவரவரின் மனமுதிர்ச்சியைப் பொறுத்த விஷயம்னு உளவியாளாலர்கள் சொல்றாங்க.

ஆனா நாம கோபத்துல உணர்ச்சி வேசத்துல எதிரா செயல்பட்டு சூழ்நிலையை மோசமாக்கிடறோம். இதை புரிஞ்சுகிட்டு எப்படி தவிர்ப்பதுன்னு தெரிஞ்சிகிட்டா பல பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். ஒரு உதாரணம் பாப்போம்.  கூட்டமான ஒரு இடத்துக்கு போறோம் அங்கே தெரியாம எதிர்ல வருபவர் மேல மோதிடறோம். உடனடியா எதிர்ல வந்தவர் கோபப்பட்டு சண்டைக்கு வர்றார் - இது தான் சிச்சுவேஷன். இப்ப இதுல ரெஸ்பாண்ட் எது ரியாக்‌ஷன் எதுன்னு பார்க்கலாம். ஏதோ ஒரு பிரச்சனை செய்யணும்னு நினைப்பிலயோ, அதீதமான கோவத்தினாலோ,யோசிக்காம எதிர்ல வந்தவர் உடனடியா சண்டைக்கு வந்தது ரியாக்‌ஷ்ன். ஆனா அதுவே அவர் உடனடியா செயல்படாம சில விநாடிகளாவது பொறுத்திருந்தார்னா, தெரியாம மோதினதிற்காக மன்னிப்பு கேட்கபட்டிருக்கலாம். அந்த சிலவினாடிகள் தாமதிக்கும்போது நமக்கு கோபம் குறைந்து நாம செய்வது என்ன? இதன் பக்க விளைவுகள் எப்படி இருக்கும்னு யோசிக்கறோம், எப்படி இதை சரி செய்யலாம் என யோசிக்கும் தன்மை நமக்கு வந்துவிடும். இது தான் சிறப்பான செயல்பாடு.

 கோபத்தை நம் கட்டுக்குள் கொண்டு வர உதவுவது Respond. உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் நாம உந்தப்பட்டு நாம் செய்யும் நடவடிக்கை ரியாக்‌ஷன். கோபத்தோட நாம் செய்யும் செயல்கள், பேச்சுக்களும் பின்னாளில் நாம் வருத்தப்பட நேரும். இது தான் உண்மை. வாழ்க்கையில் நமக்கு நேரும் எத்தனையோ இன்னல்கள், பிரச்சனைகளை பத்தியே நாம அதிக நேரம் நினைச்சுகிட்டு இருக்கோம்.

அதனால நாம சீக்கிரமா புலம்பலுக்கு தள்ளப்படறோம். புலம்பம்பல் இருப்பதால அன்பா பேசும் தன்மையை இழந்திடறோம். நமது வாழ்வின் வேதனைகளையும், துன்பங்களையும் அசைபோட்டுகிட்டு இருப்பதில் ஆனந்தப்படாம இருந்தா நமது செயல்கள், பேச்சுக்கள் நல்லதாவா இருக்கும். சில சமயம் மனசுல இருக்கறதை கொட்டிட்டா நல்லதுன்னு நினைச்சு பேசிடறோம், ஆனா பேசினதுக்கப்புறம் சொல்லாமலே இருந்திருக்கலாமோ எனும் சூழல் தான்.

 கோபத்துல அடுத்த வங்க மேலே கத்தி தீத்திடுவாங்க சிலர். அதன் விளைவுகளை சரிசெய்வது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. நமக்குள்ளே கோபம் கொந்தளிச்சுகிட்டு வரும்போது நாம உண்மை பேசுவதில்லைன்னு அறிஞர்கள் சொல்றாங்க. நம்ம விரக்தியும் வேதனையும்தான் அப்போ வெளிப்படுது. அது வெளிப்படுவதனால எந்த பயனும் இல்லை.

 கோபம் குறைஞ்ச பிறகு நாம சொல்ல நினைச்சதை சொல்லும் பொழுது நம்மால் உண்மை அழகா சொல்ல முடியும். நம் தரப்பு நியாயத்தை சொல்ல முடியும். நம்மளுடைய பயத்தை வெளிப்படுத்துவதை விட நம் நியாயத்தை வெளிப்படுத்துவதுதானே சரி. நாம நமக்கு சொல்லிக்கொடுத்துக்க வேண்டிய விஷயம் இதுதான். எந்த ஒரு சூழ்நிலையின் போதும் உடனடியா செயல்படாம, சிந்திச்சு செயல்படுவோம் என்பதுதான்.

6 comments:

கோமதி அரசு said...

எந்த ஒரு சூழ்நிலையின் போதும் உடனடியா செயல்படாம, சிந்திச்சு செயல்படுவோம் என்பதுதான்.//

உண்மை, சிந்திக்க தவறினால் விளைவுகள் மோசமாய் இருக்கிறது.

பதிவு அருமை.

R.Someswaran said...

தங்களின் தொடர் நன்றாக உள்ளது, இது தொடர்பாக ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சமீபத்தில் தண்டபாணி என்பவருடைய video பார்க்க நேர்ந்தது. அதில், நம் ஆழ்மனதில் பதிந்துள்ள எண்ணங்களோடு தொடர்புள்ள உணர்வுகளை அழிக்க படங்களில் காட்டப்படுவது போல கோபமோ, பயமோ ஏற்படுத்தும் எண்ணங்களை காகிதத்தில் எழுதி எரித்து விட்டால் அந்த உணர்வுகள் அழிந்து நமக்கு பாதிப்பு ஏற்படாது என்கிறார். அவருடைய பேச்சு நன்றாக உள்ளது. https://www.youtube.com/watch?v=aTJWHh44h5w (Speech is not about religious, just about managing ourself)

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாக சொன்னீர்கள்... அனுபவம் : அனைத்தையும் தானாக சொல்லிக் கொடுக்கும்...

புதுகைத் தென்றல் said...

வாங்க கோமதிம்மா,
நலமா?

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சோமேஸ்வரன்,

இதே தொடரில் முந்தைய பதிவு ஒன்றில் நீங்க சொல்லியிருப்பது பற்றி சொல்லியிருக்கேன்.
வீடியோ லிங்கிற்கும் வருகைக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

சும்மாவா சொல்லி கொடுக்குது. முகத்தில அறைஞ்சு சொல்லி கொடுக்குது. :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி