Monday, March 04, 2019

நல்லூரை நோக்கி - பாகம் 3

பலமுறை போய் வந்த இடமென்றாலும் அயித்தானுக்கு நான் என்னவோ புதிதாக அங்கே செல்வது போலத்தான் ஒரு எண்ணம் :) 2001 பயணம் மாதிரி இதற்கடுத்து இது இப்படி செய்யவேண்டும்னு சொல்லலை, ஆனா தனியாக போகிறாளேன்னு கொஞ்சம் டெர்ரர். எனக்கோ நான் என்ன புது இடத்துக்கா போறேன்னு, இப்படி கலவையான இமோஷன்களுடன் பயண ஏற்பாடுகள்.

தனது சிம்மை கொடுத்து அங்கே போய் போட்டுக்கோ, ஆக்டிவேட் செய்ய சொல்லிவிட்டேன் என்றார். எனது மொபைலிலிருந்து சிம்மை பின் வைத்து எடுக்க வேண்டும். அதெல்லாம் செய்ததே இல்லை. அங்கே மொபிடெல் கவுண்டரில் கேள்னு சொல்லிட்டார். சரி பாத்துக்கலாம்னு இருந்தேன்.
யார்கிட்டேயும் லக்கேஜ் வாங்கிக்காதே!
ஓகே!
சிம் கார்ட் மாத்தினதும் டேடா வந்திரும். ஊபர் புக் செஞ்சுக்கோ!
ஓகே.
கார் ஏறினதும் மெசெஜ் வை!! சரிங்க சாமின்னு கலாயச்சிகிட்டு இருந்தேன்.

டான்ஸ் கிளாஸ் முடிஞ்சதும் என்னை பிக் அப் செய்து வீட்டுக்கு போய் சாப்பிட்டு என்னுடன் ஏர்போர்ட் வரை வருவதாக இருந்தது. ஆனால் மதியம் அப்பாயிண்ட்மெண்ட் அர்ஜண்ட்டா வந்துவிட ஏர்போர்ட் ட்ராபிங் ட்ராப் செய்ய வேண்டிய சூழல். அதுக்கென்ன நான் போய்க்கிறேன்னு கேப் புக் செஞ்சு போயாச்சு.

மட்ட மத்தியானம் கூட்டமே இல்லை! இரண்டு மணிக்குள் செக்கின், இமிகிரேஷன், செக்யூரிட்டி செக் எல்லாம் ஆயாச்சு. ஃப்ளைட்ல நாலஞ்சு பேர்தான் இருப்போமோன்னு சந்தேகம் வந்தது. அப்புறம் கூட்டம் வர துவங்கியது.

ஸ்ரீலங்கன் விமான சேவை எனக்கு ரொம்ப பிடிக்க இரண்டு காரணங்கள்.
டவுன்வேர்ட் கேமரா இருக்கும் அதில் பார்க்கலாம், இன்னொன்னு சாப்பாடு.
ஒரு கேக்,ஃப்ரூட்ஸ் கொஞ்சம்,ஜூஸ் பாக்கெட், சாதம் பருப்பு மாதிரி இதோடு அருமையான தேநீர். அதை சிப்படிக்கும் பொழுது கிடைக்கும் ஃபீலே வேற தான். ஆனா கழுதை தேஞ்சு கட்டெறும்பாகியிருக்கு. இப்போ இது மட்டும்தான். ஜூஸ் கிளாஸ்ல தர்றாங்க. டீவில படமெல்லாம் இருக்கு இந்த டவுன்வேர்ட் கேமரா முன்ன ஈசியா இயக்கலாம். இதுல தெரியலை. பக்கத்துல இருந்தவரை கேட்டேன். அவர் முழிச்சதும் சாரின்னுட்டு ஹெட்போனை மாட்டிகிட்டேன். ( இலங்கை விமானத்தில் சுற்றுலாவுக்கு வருபவர்களை விட வியாபாரிகள் தான் அதிகம் )


வெஜிடபிள் பன். வீடு போய் சேர 7.30 மணி ஆகிடும். தாங்கணுமே. சாப்டாச்சு. ஹெட்போன் போட்டு பாட்டுகேட்டுகிட்டு இருந்தேன். லேண்டிங்கிற்கு தயார் படுத்துமாறு அறிவிப்பு வந்தது. ஆகான்னு முக மலர்ச்சியோட பாத்துகிட்டு இருந்தேன். தாஜ் ஏர்போர்ட் கார்டன் பக்கத்துல அந்த பேக்வாட்டர்ஸின் அழகோட கடல் பக்கத்துலேர்ந்து தரையை நோக்கி விமானம் நுழைய லேண்ட் ஆனதும் செம செம! நான் தனியாக இலங்கை வந்தாச்சுன்னு ஒரே குஷி.

ஃப்ளைட்டை விட்டு இறங்கி முன்பு ஒரு முறை அதிபராக இருந்தப்ப ராஜபக்சே அவர்கள் பூமியை முத்தமிட்டது மாதிரி தான் செய்யலை. (இது கொஞ்சம் ஓவரா தோணும் . ஆனா எனது பார்வையில் என் மகிழ்ச்சி கட்டுக்கடங்காமல் இருந்தது.

தொடரும்.....

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

இத்தொடரின் மூன்று பகுதிகளையும் இப்போது தான் ஒன்றாக படித்து முடித்தேன்.

நாம் இருந்த இடத்தினை சில வருடங்கள் கழித்துச் சென்று பார்ப்பது ஒரு சுகானுபவம். அதுவும் தனியே பயணம்! பல நினைவுகளை மீட்டெடுக்க உதவும். இந்தப் பயணமும் அப்படி அமைந்திருக்கும். உங்கள் அனுபவங்களை இங்கே படிக்க ஆவல்...

தொடர்கிறேன்.

மாதேவி said...

ஆகா!நல்லூர் கந்தனிடம் பயணம்.
தொடருங்கள்.
யாழ் நமது இடம். தற்போது கொழும்பு+யாழ் நாடோடி நாம்.

Ramesh DGI said...

I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News

pudugaithendral said...

கருத்திட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பயணக்கட்டுரையை முடிக்கவில்லை. அதன் பின் சில பயணங்கள், உடல்நிலை என பல காரணங்கள். அடுத்த பாகங்களை உடனுக்குடன் பதிவிட்டு இந்த பயணக்கட்டுரையை முடித்து மற்ற பயண கட்டுரைகளை எழுதுவேன்.
தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு மிக்க நன்றி