Wednesday, March 11, 2020

நல்லூரை நோக்கி - பாகம் 4

ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு மறக்காமல் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த தகவலை வீட்டுக்கு சொல்லி பக்கத்தில் இருந்த ரெஸ்டாரண்ட்டில் மதிய உணவை முடித்து சிறிது ஓய்வுக்கு பின் குளித்து ரெடியாகி நல்லூரை நோக்கி சென்றோம்.



மாலை 5 மணி பூஜை முடிந்து கோவில் அடைத்து விடுவார்கள். அதனால் ஹோட்டலிலிருந்து ஆட்டோ வைத்து கோவிலுக்கு சென்றோம். அந்த கோபுரத்தை நெருங்க நெருங்க கந்தா வந்துவிட்டேன் உன்னை காண, என் 40 வருட கோரிக்கை இதோ இப்பொழுது


நிறைவேறப்போகிறது என மனம் அரற்றிகொண்டே இருந்தது. நெருங்க நெருங்க கோவிலின் முகப்பை கண்டதும் கண்ணிலிருந்து நீர். உன்னை காண என்னை இத்தனை ஆண்டுகள் காக்க வைத்தாயே என சின்ன சண்டையுடன் உள்ளே நுழைய சரியாக கற்பூர தீபாரதனை.



வேல்தான் சந்நிதியில். தீபாரதனை முடிந்து கோவிலுக்குள்ளயே தேரில் முருகன் பவனி வந்தான். மனது குளிர அவன் சந்நிதியில் நின்ற என்னை பார்த்து ஆண்ட்டி சந்தோஷமா கலா என்ற பொழுது கண்ணில் இருந்து வந்த நீர் தான் பதிலாக இருந்தது.

அங்கேயிருந்து ஆண்ட்டி அழைத்து சென்றது ஜெட்விங்க் ஹோட்டலுக்கு. அங்கே ரூஃப் டாப் ரெஸ்டாரண்ட்டில் ஜூஸ் அருந்திவிட்டு இரவு உணவை அங்கே முடித்து கொள்ளலாம் என்றார் ஆண்ட்டி. என் சோலோ இலங்கை பயணத்துக்கு  ஆண்ட்டி தரும் ட்ரீடாம். 7.30 மணியளவில் கீழே ரெஸ்டாரண்ட் சென்றோம்.

புஃபே டைப் தான். ஸ்ரீலங்கன் உணவுகள் அதிலும் ஜாஃப்னா கறிப்பொளடரின் சுவை வித்தியாசமாக நன்றாக இருந்தது. கொத்து சத்தம் கேட்டதும் குஷியோ குஷி. ரசித்து ருசித்து எங்கள் மூவர் கூட்டணி பக்கத்தில் இருந்த கார்கில் ஃபுட்சிட்டி சென்று கொஞ்சம் பழங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வாங்கிகொண்டு ஹோட்டலுக்கு சென்று கட்டையை சாய்த்ததுதான் தெரியும்...

தொடரும்.......


No comments: