சாமான்யன் சிவா புகார் பெட்டின்னு ஒரு பதிவு போட்டதன் தாக்கம் இது.
திட்டுறதா இருந்தா அவரைத்திட்டுங்க.
முன்னப்பின்ன செத்தாதானே சுடுகாடு தெரியும்னு சொல்லுவாங்க.
மொத மொதல்ல விமானப் பயணம் தனியாக 3 வயது மகன் மற்றும் 1 வயது மகளுடனும். (அப்புறம் எப்படித் தனியான்னு கேக்ககூடாது.)
என் முதல் விமானப் பயணம் இலங்கைக்குத்தான். பிளைட்
ஒரு மணிநேரம் காலத்தாமதமா கிளம்பிச்சு. வந்து
சேர்ந்தேன் இலங்கைக்கு.
திரும்பும் பொழுதும் விமானம் 1 மணி நேரம் காலத்தாமதம்.
அங்கேதான் பிர்ச்சனையாச்சு.
1 வயது மகள் சூடாக பால் அருந்தினால்
தான் தூங்குவாள் என்பதற்காக கையில் பால்
கலந்து எடுத்துவந்திருந்தேன். 1 மணி நேரப் பயணம்
என்பதாலும் பிஸ்கெட் மாத்திரம் இருந்தது.
விமானம் தாமதமானதால் தூக்கத்திற்கு அழ பாலைக்
குடிக்க கொடுத்துவிட்டேன். ஆனால் பாப்பா தூங்கவில்லை.
விமானத்தில் ஏறி அமர்ந்து கொஞ்ச நேரத்தில் தூக்கத்திற்கு
பாப்பா அழுகிறாள்.
சூடான பால் குடித்தால் தூங்கிவிடுவாள். ஆகவே
ஏர்ஹோஸ்டஸை கேட்டோம். அதெல்லாம் இல்லை
கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். பால் பவுடர்
என்னிடம் இருக்கிறது கொஞ்சம் சுடு நீர்
கொடுத்தால் போதும் என்றும் மறுத்துவிட்டார்.
குழந்தை அழுகையை நிப்பாட்டவே இல்லை. உன் குழந்தை
ரொம்ப "பிடிவாதக்காரி" என்று குழந்தைக்குப் பட்டம் வேறு.
உணவு பரிமாறினார்கள். பொதுவாக இந்தியன் ஏர்லைன்ஸில்
தயிர்சாதம் இருக்கும். அன்று அதுவும் இல்லை.
குழந்தைக்கு மாத்திரம் தயிர் சாதம் கொடுக்கச்
சொன்னதற்கு, "உங்களுக்கு நிஜமாகவே வேண்டுமா"?
என்று கேட்ட அந்தம்மாவை (கொஞ்சம் வயசான அம்மாதான்)
அடிக்கத் தோணியது.
40 நிமிஷமாக அழுதுகொண்டே இருந்த குழந்தை
அந்த தயிர்சாதம் சாப்பிட்டு தூங்க துவங்கிய
பொழுது சென்னை வந்தே விட்டது.
குழந்தைக்கும் டிக்கெட் எடுத்துதான்
பயணம் செய்கிறோம். அவ்வளவுச் சின்னக்குழந்தைக்கு
தனி சீட் தான் கிடையாதே தவிர உணவு
உட்கொள்ளும் குழந்தையாயிருந்தால் உணவு
கொடுத்திருக்க வேண்டும்.
விமானம் காலத்தாமதமானால் பயணிகளுக்கு
காம்பன்ஷேஷனாக உணவு கொடுத்திருக்க வேண்டும்.
அன்று முடிவு செய்தேன் இனி இந்தியன் ஏர்லைன்சில் ஏறக்கூடாது
என்று. அதன்பிறகு ஒன்லி ஸ்ரீலங்கன் விமானச் சேவைதான்.
விதியாரை விட்டது? அங்கே என்ன நடந்தது என்ன??????????
தொடரும்.......
14 comments:
பேசாம தோணி பிடிச்சி ராமேஸ்வரம் வந்திருக்கலாம்ல அதுல எல்லாம் டிக்கட்டே கிடையாது!!!
:))
மதுரைக்கு ரெண்டு மூனு தடவை இந்தியம் ஏர்லைன்ஸ்ல போய்ருக்கேன்...வேஸ்ட்...எல்லாம் திமிரெடுத்த கிழவிகள்...
இப்ப ஒன்லி பாரமவுண்ட்...எல்லாமெ நல்லாருக்கு....ஹி..ஹி..ம்ம்ம்ம்
டிக்கெட் கிடையாது சரி,
வாங்கின டிக்கெட்டுக்கு தரவேண்டிய சேவையைத்தராத இவங்களை என்ன செய்ய்றது?
இரண்டாம் சொக்கன்,
ஒஹோ நீங்க அப்படி வர்றீங்களா?
சரி சரி... வீட்டுல தெரியுமா?
அவங்க முகபாவமே பாருங்க..திமிரா..அலட்சியமா..எல்லாம்கலந்த கலவையா..ஏதோ அவங்க வீட்டுக்கு அழையாத விருந்தாளியாப் போன மாதிரி
நாம்தான் அய்யோ பாவம்..
சரியா சொன்னீங்க பாசமலர்,
ஆமா எல்லோருக்கும் என்னை மாதிரியே இந்தியன் ஏர்லைன்ஸ் காரங்களோட அனுபவமா?
இவங்களை யாருங்க கேக்கறது.
காசைக் கொடுத்தும் காண்டுகோல்னு எங்கப்பா ஒரு வசனம் சொல்வார்.
அது மாதிரி இருக்கு.
பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி நாம்ப் போறோம் இவங்க என்னவோ இவங்க அப்பன் வீட்டு சொத்தை எடுக்க வ்ந்த மாதிரி பிகேவ் பண்றாங்க.
இந்தியன் ஏர்லைன்ஸ் போன்ற மோசமான பயணிகளை சக மனிதர்களாக கூட மதிக்காத சேவை வேறெந்த ஏர்லைன்ஸ்சிலும் கிடையாது.
ரொம்ப சரி நிஜமா நல்லவன்.
இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமில்லை ஏர் இந்தியாவும்தான்...நாள்கணக்கில் தாமதமாக்கி..பயணிகள் படும் அவஸ்தை..அப்பப்பா...
இந்தியனாக இருந்துகிட்டு ஏர் இந்தியாவுலயும், இந்தியன் ஏர்லைன்ஸ்லயும்தான் பயணம் செய்யனும்னு ஒரு கொள்கையாவே வச்சுருந்தேன் கொஞ்ச நாளைக்கு முன்!
இத எப்பிடியோ தெரிஞ்சுகிட்ட அவங்க, பயணிகள இம்சிப்பத நெறுத்துறது இல்லென்னு ஒரு கொள்கையா ஆக்கிட்டாங்க. ரெண்டு ஏர்லைன்ஸ்லயும் நான் பட்ட அவஸ்தைகள தனிப் பதிவாவே போடலாம் :) இது கொஞ்ச நாளைக்கு முன்னே..
இப்போ ஏர் இந்தியா எவ்வளவோ தேவலாம். இந்தியன் ஏர்லைன்ஸ்தான் கொள்கைப் பிடிப்புல உறுதியா இருக்காங்க!
கொசுறு தகவல்: இந்த ரெண்டு ஏர்லைன்ஸ்லயும் பணிப்பெண்ணா சேர்றதுக்கு குறைந்தபட்ச வயது: 50 :)
வாங்க பாசமலர்,
அதுவும் உண்டுதான்.
வாங்க தஞ்சாவூரான்.
//கொசுறு தகவல்: இந்த ரெண்டு ஏர்லைன்ஸ்லயும் பணிப்பெண்ணா சேர்றதுக்கு குறைந்தபட்ச வயது: 50//
சும்மா நச்சுன்னு சொல்லிட்டீங்க?!!!
<==
சாமான்யன் சிவா புகார் பெட்டின்னு ஒரு பதிவு போட்டதன் தாக்கம் இது.
திட்டுறதா இருந்தா அவரைத்திட்டுங்க.==>
சாமான்யன்னு மொட்டக்கட்டயா போட்டா எப்டி? "சாமான்யன்" மேல மௌசால் க்ளிக் பண்ணா,அவரோட ப்ளாக்குக்கு போவணும்.
[வடிவேலு பாணியில் படிக்கவும்] பேச்சு பேச்சா இருக்கணும்[கைய நீட்டக்கூடாது அடிக்கறதுக்கு]
தப்புதாங்கண்ணா,
போட மறந்த்துட்டேன். இனி சங்கிலி போட்டுடறேன்.
ஆமா அண்ணாத்த
சொல்லீக்கிற மாதிரி பேச்சு, பேச்சா இருக்கணும்.
Post a Comment