பள்ளிக்கூட வாசலிலே இலந்தைப் பழம், இலந்தவடை, நாவற்பழம், காரப்பொடி
தூவிய மாங்காய் எல்லாம் வித்துகிட்டு இருக்கறதை பார்க்க
நாக்குல ஸ்ஸ்ஸ்... எச்சில் ஊரும்.ஆசையாய் இருக்கும்.
ஆனா வீட்டில் 144. கையில காசு எல்லாம் கொடுக்க
மாட்டங்க.
வீதியில் ஒரு பாட்டி எலந்தபழம், நாவற்பழம்
வித்துகிட்டு வருவாங்க. ஸ்கூல் வாசலில் தானே
வாங்கக் கூடாது, எங்க வாங்கித்தாங்கன்னு
பாட்டியைக் கெஞ்சி கூத்தாடினா, ( அம்மா, அப்பா வேலைக்குப்
போற வீட்டிலே எல்லாம் பாட்டிதானே) 1 பைசா, 2 பைசா
(5 பைசா முழுசா கொடுப்பதை விட இப்படி சில்லறையா
கொடுப்பது ரொம்ப பிடிக்கும்.)5 பைசா கிடைக்கும்.
அதைக்கொண்டு போய் இலந்தைபழம் விக்கிற பாட்டிகிட்ட
கொடுத்தா, 1 பொட்டலம் இலந்தைபழமோ, நவாப்பழமோ
தருவாங்க. அதை சுத்தமா கழுவி எங்க பாட்டி
உப்பு கலந்து கொடுப்பாங்க. துவர்ப்பான உப்பின் சுவையோடு
சாப்பிட்டா................ம்ம்ம்ம்ம்ம். நல்லா இருக்கும்.
தோசை அம்மா தோசை பாட்டில் வருவதைப் போல,
இன்னும் கேட்டால் எங்க பாட்டி பூசை தான் கொடுப்பாங்க.
5 பைசா பெரிய விசயம் ஆச்சே.
காசா அடிக்கடி கேட்டா கிடைக்காது. அதுனால பாட்டி
ஒரு பிடி அரிசியோ அல்லது குருணையோ குடுப்பாங்க.
”இதைக் கொடுத்தா திட்டப்போறாங்கன்னு” முனங்கிகிட்டே
போவேன்.
ஆனா அந்த பழம் விக்கிற பாட்டி 1 பிடி அரிசியை
வாங்கிகிட்டு தன்கிட்ட இருக்கிற( அளவு) டம்பளரால்
1 டம்பளர் பழம் கொடுத்தாங்க. நானும் பண்ட மாற்று
முறை செஞ்சேன்னு பெருமையா இருக்கும். :)
கடந்த 6 வருடங்களாக இலங்கைவாசியா இருந்ததுல
நவாப்பழம், எலந்தப்பழம் எல்லாம் சாப்பிட முடியாம
போச்சு.
இங்க வந்ததுக்கப்புறம் சூப்பர் மார்க்கெட்டில் நவாப்பழத்தை
பாத்ததும் மண்டையில் பல்பு எரிந்தது. டபக்கென்று
ஒரு டப்பா(1 டிஸ்போஸபிள் தட்டில் வைத்து மேலே
பிளாஸ்டிக் கவரால் பேக்கிங்கெல்லாம் செய்து
அழகாக இருந்தது.)எடுத்து டிராலியில் போட்டுகிட்டேன்.
பில் கவுண்டரில் வந்து பில் போட்டால் ”ஷாக்”.
அந்த டப்பா 22 ரூபாயாம். 100 கிராம் இருந்திருக்கும்.
ஆத்தாடி அது 22 ரூபாய். :(
(ரோட்டில் எங்கேயும் நவாப்பழமே கண்ணுக்கு
தட்டு படல... )
கோழிகூவுது படத்தில ஒரு பாட்டு வருமே
அதுதான் ஞாபகத்துக்கு வந்துச்சு!!!
அண்ணே! அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப
கெட்டு போச்சுண்ணே.
பாட்டு பார்க்க இங்க சொடுக்குங்க:
37 comments:
முதலில் வந்தது யாரு?
மீ தி பர்ஸ்ட்டு
///காசா அடிக்கடி கேட்டா கிடைக்காது. அதுனால பாட்டி
ஒரு பிடி அரிசியோ அல்லது குருணையோ குடுப்பாங்க.
”இதைக் கொடுத்தா திட்டப்போறாங்கன்னு” முனங்கிகிட்டே
போவேன்.///
எங்க பாட்டி ஒரு மரக்கால் நெல்லு கொடுப்பாங்க. அதை கொண்டு போய் பக்கத்து மளிகை கடையில் கொடுத்து காசு வாங்கிட்டு போவேன். நீங்க என்ன எப்ப பார்த்தாலும் பழசை எல்லாம் ஞாபகபடுத்துற மாதிரி பதிவு போடுறீங்க? நல்லா இருக்கு பதிவு.
என்னங்க அக்கா 100 கிராம் 22 ரூ எல்லாம் உங்களுக்கு பெரியவிசயமா???
சப்பை மேட்டரு!!
இதுக்கு இம்மாம் பெரிய பதிவா??
:))))
நல்லவரே ஜஸ்ட் மிஸ் பண்ணீட்டேன்
ஹையோ ஹையோ மங்களூர் அண்ணே நான் தான் பர்ஸ்ட்டு:)
ஆனாலும் நான் பதிவ படிச்சிட்டேன் (பிலிஸ் நம்புங்கப்பா )
நீ இன்னும் படிக்கலை
(மீ த பர்ஸ்டுக்கு போட்டா போட்டியா???)
:)))))))))
பழசை எல்லாம் மறக்காம
ஞாபகப்படுத்தி பார்க்கணும் நி.நல்லவன்.
இது மழைக்காலம் வேற, வத்தி சுத்திதானே ஆகணும். :)))))))
///பில் கவுண்டரில் வந்து பில் போட்டால் ”ஷாக்”.
அந்த டப்பா 22 ரூபாயாம். 100 கிராம் இருந்திருக்கும்.
ஆத்தாடி அது 22 ரூபாய். :(
(ரோட்டில் எங்கேயும் நவாப்பழமே கண்ணுக்கு
தட்டு படல... )///
எங்க ஊருக்கு வாங்க. நாவல் மரம் இலந்தை மரம் எல்லாம் நிறைய இருக்கிறதால வேணும்கிற அளவுக்கு பழங்கள் சாப்பிடலாம்.
22 எனக்கு பெரிய விசயம் தான்
சிவா,
இப்ப இருக்கற விலை வாசி அப்படி
///மங்களூர் சிவா said...
என்னங்க அக்கா 100 கிராம் 22 ரூ எல்லாம் உங்களுக்கு பெரியவிசயமா???
சப்பை மேட்டரு!!
இதுக்கு இம்மாம் பெரிய பதிவா??
:))))///
ரிப்பீட்டேய்.....
ம்ம் ஊரை ஞாபகப் படுத்தாதீங்க
நிஜமா நல்லவன்.
பெருமூச்சு தான் விட முடியும்.
//மங்களூர் சிவா said...
ஆனாலும் நான் பதிவ படிச்சிட்டேன் (பிலிஸ் நம்புங்கப்பா )
நீ இன்னும் படிக்கலை///
நீயும் படிக்கலை நானும் படிக்கலை முதல் கமெண்ட் போடுறப்ப. அதுக்கப்புறம் நான் பதிவ முழுசா படிச்சேன். ஆனா நீ படிச்சியா?
///புதுகைத் தென்றல் said...
ம்ம் ஊரை ஞாபகப் படுத்தாதீங்க
நிஜமா நல்லவன்.
பெருமூச்சு தான் விட முடியும்.///
சரி விடுங்க. உங்களுக்கு பார்சல் அனுப்ப சொல்லுறேன். இல்லைனா நானே கொண்டு வந்து கொடுத்திடுறேன்:)
ரோட்டுல தள்ளுவண்டிக்காரர் 100கி 10 ரூபாய்க்கு தில்லியில் தந்தார் ரொம்ப நல்லா இருந்தது ஆனா வீட்டில் யாரும் விரும்பி சாப்பிடலன்னா வெயில்நேரம் வாடிவதங்கி வீணாப்போகுமேன்னு அதிகம் வாங்கல..
ஆனைமலையில் மாமியார் வீடு இருந்தப்ப மரங்கள் இருந்தது பக்கத்துல விழ விழ ந்ல்லதா பொறுக்கி எடுத்து வைப்பாங்க.. நாக்கெல்லாம் பர்ப்பிள் கலராவே எப்போதும் சாப்பிட்டுக்கிட்டு ( அதிகம் திங்காதேன்னு பாட்டு வாங்கிகிட்டு) இருப்பேன்..
சூ சூ நிறுத்துங்கப்பா.
நிஜமா நல்லவன், சிவா ரெண்டுபேரும் சண்டை போட்டுக்க கூடாது.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....
///புதுகைத் தென்றல் said...
(மீ த பர்ஸ்டுக்கு போட்டா போட்டியா???)
:)))))))))///
என்னைய விடுங்க. ஆர்குட்ல கும்மி தமிழ்மணத்துல இருக்கிற இல்லாத பதிவுகளிலும் கும்மி உங்க பதிவுக்கும் பர்ஸ்ட் வர்ற சிவா பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை:)
வாங்க கயல்விழி,
நவாப்பழம் சாப்பிட்டு நாக்கு பர்ப்பில் ஆகறது, நெல்லிக்காய் சாப்பிட்டு
தண்ணி குடிச்சா இனிக்குதுன்னு
பெருமையா பேசுவோம்,
அல்ப சந்தோஷம் தான் ஆனால் அது தங்க ஆனந்த்திற்கு விலை ஏது?
///புதுகைத் தென்றல் said...
சூ சூ நிறுத்துங்கப்பா.
நிஜமா நல்லவன், சிவா ரெண்டுபேரும் சண்டை போட்டுக்க கூடாது.///
:))))))))))
வாங்க சரவண குமரன்,
வருகைக்கு நன்றி.
///புதுகைத் தென்றல் said...
அல்ப சந்தோஷம் தான் ஆனால் அது தங்க ஆனந்த்திற்கு விலை ஏது?///
விலை இல்லைன்னு சொல்லிட்டு இப்படி சொன்னா எப்படி?
/////பில் கவுண்டரில் வந்து பில் போட்டால் ”ஷாக்”.
அந்த டப்பா 22 ரூபாயாம். 100 கிராம் இருந்திருக்கும்.
ஆத்தாடி அது 22 ரூபாய். :(////
///புதுகைத் தென்றல் said...
வாங்க சரவண குமரன்,
வருகைக்கு நன்றி.///
எங்க வருகைக்கு எல்லாம் நன்றி இல்லையா? சிவா எங்க போன? என்னோட பதிவுல மட்டும் நன்றி கேட்டு வாங்குற நீ அக்கா பதிவுல கேட்காம போறியே?
ஆஹா நிஜமா நல்லவன்,
அந்த சந்தோஷத்திற்காகத்தானே
வாங்கி கிட்டு வந்தது.
விலை வாசி ஏறினதைச் சொல்ல வந்தேன்பா.
சிவா ஆபீஸ் போயிட்டார் நிஜமா நல்லவன்,
நீங்க கும்மி முடிங்க. அப்புறம் நன்றி நவிலல் எல்லாம் சொல்றேன்.
:)))))))))))))))))
/
புதுகைத் தென்றல் said...
(மீ த பர்ஸ்டுக்கு போட்டா போட்டியா???)
:)))))))))
/
எதோ எங்களால முடிஞ்சது!!
/
புதுகைத் தென்றல் said...
22 எனக்கு பெரிய விசயம் தான்
சிவா,
இப்ப இருக்கற விலை வாசி அப்படி
/
ஆமாங்க 1 ரூபாவா இருந்தாலும் பணம் பணம்தான்.
/
புதுகைத் தென்றல் said...
சூ சூ நிறுத்துங்கப்பா.
நிஜமா நல்லவன், சிவா ரெண்டுபேரும் சண்டை போட்டுக்க கூடாது.
/
ஓகே ஓகே கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!
/
நிஜமா நல்லவன் said...
///புதுகைத் தென்றல் said...
வாங்க சரவண குமரன்,
வருகைக்கு நன்றி.///
எங்க வருகைக்கு எல்லாம் நன்றி இல்லையா? சிவா எங்க போன? என்னோட பதிவுல மட்டும் நன்றி கேட்டு வாங்குற நீ அக்கா பதிவுல கேட்காம போறியே?
/
:))))
/
புதுகைத் தென்றல் said...
சிவா ஆபீஸ் போயிட்டார் நிஜமா நல்லவன்,
நீங்க கும்மி முடிங்க. அப்புறம் நன்றி நவிலல் எல்லாம் சொல்றேன்.
:)))))))))))))))))
/
சொல்லீட்டாங்கப்பா அக்காவே ஆப்பீஸ்கு ப்ளாக் படிச்சி, சாட் பண்ண போயிட்டார் சிவா!!!
:)))))
பதிவு படிச்சதிலேயே பாதிமனம் கால் கடந்து,கடல் கடந்து வேப்ப மர நிழலில் உட்கார்ந்திருக்கும் பாட்டியிடம் போய்விட்டது.கூட சுட்ட பழம் படத்தையும் போட்டு மனசை அலைக்கழிக்கிறீங்க போங்க!
விடாமல் வந்து கும்மிய கும்மி
ஸ்பெஷலிஸ்டுகள் மங்களூர்
சிவா அண்ட் நிஜமா நல்லவன்
இருவருக்கும்
வருகைக்கு நன்றிங்கோ
வாங்க ராஜ நடராஜன்,
தங்களின் வருகைக்கும் பாரட்டுதலுக்கும் நன்றி.
நாவல்பழம் வாங்கிச் சாப்பிட்டுக் கறை படிந்த கையும் சட்டையுமாய் இருந்ததெல்லாம் ஒரு காலம். ஹிம்
வாங்க பிரபா,
என்ன கொசு வத்தி சுத்த ஆரம்பிச்சிடுச்சா!!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
நல்லவனையும் நல்லவனோட நல்ல நண்பனையும் விட்டா வேற யாருமே மறு மொழி போடறது இல்லியா ?
நவாப்பழம், இலந்தைப்பழம், மிளகாப்பொடி தூவின மாங்கா, கடல முட்டாய், கொடுக்காப்புளி, பொறி உருண்ட, புளிப்பு முட்டாயி - அய்யோ அய்யோ - இதெல்லாம் இப்ப திங்கணுமுன்னு ஆசையா இருக்கு
வாங்க சீனா சார்,
மறுமொழி மத்தவங்களும் போடறாங்க.
ஆனா இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறாங்க.
கடலை உருண்டை, புளிப்பு மிட்டாயி,பொறி உர்ண்டை கூட கிடைச்சுடும்.(அதான் சூப்பர் மார்க்கெட் இருக்கே)
இந்த கொடுக்காப்புளி.....
ஞாபக படுத்தி விட்டுடீங்களே சார்.
Post a Comment