Thursday, July 03, 2008

நானும் ஹிந்தியும்.

ராஷ்டிரபாஷாவில் பெயிலானதால் வேண்டாம் இந்த ஹிந்தின்னு
காய் விட்டுட்டேன்.

விடுவாங்களா எங்க சித்தி!! அம்மா சித்திக்கு சொல்லி அவங்க
அங்கேர்ந்து லெட்டரில் என்னை வாட்டி திரும்ப ஹிந்தி கிளாஸ்.
இந்த முறை பிச்சைசார் ஸ்கூல் வேணாம்னு சொல்லிட்டேன்.

அதனால வடக்கு 3ல் இருக்குற சின்ன டீ.எல்.சியில் ஒரு
டீச்சர் சொல்லிக்கொடுத்தாங்கன்னு அங்கே போனேன்.
ரொம்ப நல்ல டீச்சர். அருமையா சொல்லிக்கொடுத்தாங்க.
விஷாரத் பூர்வாரத் படிக்கும்போதுதான் மும்பை போனது.

சரி இதுக்கு நடுவுல நடந்தது தான் பெரிய கூத்து.
நாம் ப்ரவேசிகா பாஸ் செஞ்சுட்டோம்னு தெனாவெட்டா
இருந்தப்ப சித்தி ஒரு லெட்டர் போட்டாங்க.

“பயோட்டேட்டாவில் நான் விசாரத் படிச்சிருக்கேன்னு
போட்டால்லாம் பத்தாது. வெறும் எழுத படிக்கத்
தெரிஞ்ச்சா ஹிந்தி கத்துகிட்டதா அர்த்தமில்லை.
பேசக் கத்துக்கோ”!!!!!!!!! அப்படின்னு எழுதினாங்க.

வீட்டுல என்னைத் தவிர யாரும் ஹிந்தி படிக்கலை.
இதுல நான் யாருகிட்ட போய் பேச. யாராவது
பேசறதைக் கேட்டாதானே மொழி புரியும்!!!!!

அதுக்கும் ஒரு லெட்டர். சனிக்கிழமை ஹிந்தி
சினிமா பாரு. ஹிந்தி நாடகங்கள் பாருன்னு.
ஒளியும் ஒலியும், போன்றவை பார்க்கவே
அப்பா மனசு வெச்சாதன் உண்டு. வீட்டில
டீவி இருந்தாலும் அப்பா சொல்லாட்டி சுவிச்சை
ஆன் செய்யக்கூடாதே.

ஹிந்தி சினிமால்லாம் பார்க்கவேண்டாம்னு
சொல்லிட்டு போயிட்டாரு. அப்புறம் சித்திக்கு இதைச்
சொல்லி அவுங்க அப்பாவுக்கு வேண்டுகோள்
விடுத்தப்புறம் தான் ஹிந்தி சினிமா, நாடகங்கள்
பார்க்க விட்டாரு.


முதலில் ஒண்ணும் புரியாது. ஹிந்தி புத்தகத்தை
வெச்சு நமக்குத் தெரிஞ்ச வார்த்தை ஏதாவது வருதான்னெல்லாம்
தேடியிருக்கேன். :) ஜோக் அடிக்கறாங்களா ஒண்ணும் புரியாது.
அப்படி பார்த்துகிட்டு இருந்தப்பதான் பாடல் வரிகள் புரிய
ஆரம்பிச்சு அப்படியே பிக்கப் ஆச்சு.


ரேடியோவிலும் ஏக் ஃப்ங்கார், ஆப் கி பர்மாயிஷ்
போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்பேன். அதிலும் ஹிந்தி
பாடல்கள்தான் ஒலிபரப்புவார்கள். ஹிந்தி பேசினா
புரியும், பதில் பேசத் தெரியாதுங்கற லெவல்ல
எனக்கு நானே ஹிந்தியில் பேசிப்பேன்.

திடும்னு ஒரு நாள் காதுல விழுந்த செய்தி,
ஹிந்தியே வேணாம்னு தோண் வெச்சிடுச்சு.

ஹிந்தியில் ஆண் பேசும்போது வார்த்தைப்ரயோகம்
வேறுமாதிரி, பெண் பேசும்போது வேறுமாதிரி வரும்.

உ: மே காதா ஹூன் (இது ஆண் சொல்வது)

மே காத்தி ஹூன் (இது பெண் சொல்வது)

(நான் பாடுகிறேன்னு அர்த்தம்.)
இதை எப்படி கத்துக்கறதுன்னு விட்டுடேன்.

மும்பை போனபோது விசாரத் வரைக்கும்
படிச்சது, ரேடியோ டீவியில கேட்டது எல்லாம் உபயோகித்து
தட்டுத் தடுமாறி பேசினேன். ஹை 2 மாசத்திலேயே
ஹிந்தி சரளமாக வந்துவிட்டது. அதிலும் சவுத் இண்டியன்
ஸ்லான்க் இல்லாமல் சுத்த ஹிந்தி..
(தேங்ஸ் - தூர்தர்ஷன், விவிதபாரதி)

வேப்பங்காயாக கசந்த ஹிந்தியை எனக்குத்
திணித்தார்கள் என் அம்மாவும், சித்தியும்.
பலன் எனக்குத்தான்.

ஹிந்தி அறிந்ததனால் எனக்கு நல்லது
நிறைய நடந்தது. திருமண்மான போது அயித்தான்
ஹிந்துஸ்தான் லீவரில்தான் வேலைப் பார்த்துவந்தார்.
அங்கே ஃபேமிலி மீட்டிங் போன்றவற்றில் ஆங்கிலத்தை
விட ஹிந்திதான் அதிகம் பேசப்பட்டது. கணவரின்
அதிகாரிகள் வடமாநிலத்தவர்கள் தான்.

பல நல்ல நட்பு கிடைத்தது. இவ்வளவு ஏன்
இலங்கையில் 1 வருடம் கல்லூரி மாணவர்களுக்கு
ஹிந்தி போதித்ததை என் சித்தி மிகவும் பெருமையாக
நினைக்கிறார். இருக்காதா!!!!!!
(இண்டியன் கல்ச்சுரல் சென்டரில் ஹிந்தி கற்பிப்பவரைதான்
முதலில் போதிக்கும் படி கேட்டிருக்கிறார்கள். சிலபஸ்
அதிகம். ஆனா ஆவான்னா கற்றுக்கொள்ளவே 6 மாசம்
ஆகும்னு சொல்லியிருக்கிறார். :) நான் சேலஞ்சாக
எடுத்துக்கொண்டு சொல்லிக்கொடுத்து 100% ரிசல்ட்)

ஜி தன்னோட பதிவுல சொல்லியிருக்கறது உண்மைதாங்க
நமக்கு வேணும்னா எந்த மொழியா இருந்தாலும்
கத்துக்கறதுதாங்க நல்லது. அவரோட பதிவைப்
படிக்க இங்கே

20 comments:

MyFriend said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ.. ;-)

MyFriend said...

//வீட்டுல என்னைத் தவிர யாரும் ஹிந்தி படிக்கலை.
இதுல நான் யாருகிட்ட போய் பேச. யாராவது
பேசறதைக் கேட்டாதானே மொழி புரியும்!!!!!//

அதானே.. ;-)

Unknown said...

புதுகை தென்றல் அக்கா!!!
நான் தான் பர்ஸ்ட்டு....

Unknown said...

நல்ல சித்தி!!

MyFriend said...

//ஜி தன்னோட பதிவுல சொல்லியிருக்கறது உண்மைதாங்க
நமக்கு வேணும்னா எந்த மொழியா இருந்தாலும்
கத்துக்கறதுதாங்க நல்லது. அவரோட பதிவைப்
படிக்க இங்கே//

அண்ணே.. உங்க பதிவுக்கு விளம்பரம் இங்கே. ;-)

ஆயில்யன் said...

//நான் சேலஞ்சாக
எடுத்துக்கொண்டு சொல்லிக்கொடுத்து 100% ரிசல்ட்)
//


அப்ப என்ன பதிவுகளிலும் கிளாஸ் ஆரம்பிச்சுட்டா என்னைய மாதிரி தெரிஞ்சுக்க ஆசைப்படறவங்க தெரிஞ்சுப்பாங்களே...! :)))

Unknown said...

///வீட்டுல என்னைத் தவிர யாரும் ஹிந்தி படிக்கலை.
இதுல நான் யாருகிட்ட போய் பேச. யாராவது
பேசறதைக் கேட்டாதானே மொழி புரியும்!!!!!///

விதி வலியது...

Unknown said...

///நமக்கு வேணும்னா எந்த மொழியா இருந்தாலும்
கத்துக்கறதுதாங்க நல்லது///
YES VERY GOOD
புதுகை...... "புயல்"

puduvaisiva said...

there is no limit the language

that means language ehtu வேலி?

puduvai siva

இவன் said...

எனக்கும் ஹிந்தி கத்துக்கனும் என்னு ஆசையாத்தான் இருக்கு இங்க melbourneலயும் எக்கச்சக்க ஹிந்தி பொண்ணுங்க அலையுதுங்க... அதுகள உஷார் பண்ணவாவது கத்துக்கவேணும்...

//ஜி தன்னோட பதிவுல சொல்லியிருக்கறது உண்மைதாங்க
நமக்கு வேணும்னா எந்த மொழியா இருந்தாலும்
கத்துக்கறதுதாங்க நல்லது. //

அட ஜீ சொன்னது இதுக்கும் பொருந்துதே

pudugaithendral said...

அட மை ஃபிரண்டு,

வாங்க வாங்க,

மீ தி பர்ஸ்ட்டு போட்டு ரொம்ப நாளாச்சே...

pudugaithendral said...

தமிழகத்தின் தலைவன் மிஸ் பண்ணிட்டீங்க.

மை ஃபிரண்ட் தான் பர்ஸ்டு.

pudugaithendral said...

ஆமாம் த.தலைவன்,

நான் இன்று எதுவாக இருந்தாலும் அதில் பெரும்பங்கு என் சித்தியுடையது தான்.

என்னை செதுக்கி வடிவமைத்தார் என்று சொன்னால் மிகையாகாது.

pudugaithendral said...

பதிவுகளில் சொல்லிக்கொடுக்கலாம்.

நல்ல யோசனைதான். கொஞ்சம் சிரமம் கூட.

பார்ப்போம்.

pudugaithendral said...

ஏன் என்னைப் புயலாக ஆக்குறீங்க
த.தலைவன்.

நான் தென்றல் தான்.

:)))))))

pudugaithendral said...

வாங்க புதுவை சிவா,

மொழிக்குத் தடையேது.

நமக்குத் தேவை என்பதற்காக ஆங்கிலம் பயில்வது போலத்தான் இதுவும்.

pudugaithendral said...

ஆஹா இவன்,

ஒவ்வொரு விடயமும் வெவ்வேறு கோணங்களில் பார்க்கபடுகிறது என்பது உங்க விசயத்தில உண்மையாகிடுச்சு.

:))))))))))))

Ramkumar said...

ஹிந்தி படிச்சிருந்தா எவ்வளவு நல்லதுன்னு வட மாநிலத்துல வேலை பார்க்கும் போது புரிஞ்சிகிட்டேன். நம்ம தலைவர்கள் மனசு வச்சா இப்போ இருக்குற அரசு பள்ளிகளிலும் ஹிந்திய ஒரு பாடமா வச்சிடலாம்.

அடுத்த தலை முறையாவது தேசிய மொழியை அறிந்தவர்களாக இருக்கட்டும்.
ஹிந்தியின் அருமையை உணர நல்ல பதிப்பு.

pudugaithendral said...

வாங்க போ.பையன்,

அரசாங்கத்தில் கொடுக்கப்படும்
ரேஷன் அரிசி நல்லா இல்லை என்பதற்காக சாப்பிடாலமலேயே இருந்து விடுகிறோமா என்ன?

நல்ல அரிசி வாங்கி சாப்பிடுகிறோமே!

அதுபோல பிரச்சார் சபாவில் தனியாக ஹிந்தி வகுப்புக்களுக்குச் சென்று கற்றுக்கொள்ளலாம்.

கற்க வயது ஒரு தடை அல்ல.

தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

சென்ஷி said...

அக்கா.. நான் உங்களை ஒரு டேக் விளையாட்டுக்கு கூப்பிட்டு இருக்கேன். தவறாமல் கலந்து கொள்ளவும் :))

http://senshe-kathalan.blogspot.com/2008/07/blog-post_14.html