Wednesday, March 18, 2009

மறக்கமுடியாத அருங்காட்சியகம்.

Museum போனதுக்கா இம்புட்டு பில்டப்புன்னு கேக்கறீங்களா?
நான் போனது ஆசியா கண்டத்திலேயே முதலாவது!!
இந்த வகை அருங்காட்சியகம் உலகத்திலேயே 5 தான்
இருக்கு தெரியுமா!!!

விசாகப்பட்டிணத்தின் ஆர்.கே பீச்சில் ஓங்குதாங்காக
இருக்கும் குர்சரா எனும் நீர்மூழ்கிக்கப்பல்தான் நான்
சென்ற அருங்காட்சியகம்.






INS-KURUSURA - 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான்
யுத்தத்தில் முக்கியபங்கு வகித்திருக்கிறது.
1969ஆம் ஆண்டு ரஷ்யாவில் செய்யப்பட்ட இந்தக்கப்பல்
1971ஆம் ஆண்டு தனது கன்னிப்பயணத்தை துவங்கி
31 வருடங்கள் வெற்றி வாகை சூடி தற்போது
பீச்சில் அருங்காட்சியகமாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது.

நல்லிணக்க கொடியை பலநாடுகளுக்குத் தாங்கிச்
சென்றதில் இந்தநீர்மூழ்கிக்கப்பல் முதலிடம் வகிக்கிறது.

ஆயுதங்களை ஏந்திய கப்பல் எவ்வறெல்லாம்
கடலில் பயணிக்கிறது? அதனுள் வாழ்க்கை
எப்படி? எதிரிகள் தாக்கினால் எப்படி ஆக்சிஜன்
பெற மேலே வருகிறார்கள் என எல்லாம்
அருமையாக விளக்கிச் சொல்கிறார்கள்.
(தெலுகு பேச், ஹிந்தி பேச், ஆங்கில பேச்
என கேட்டு அந்தந்த மொழிகளில் தெளிவாக
விளக்கிக்கூறுகிறார்கள்)


இப்படி ஒரு அருங்காட்சியகம் அமைக்க நாட்டுக்கு
6 கோடி செலவாகி்ற்றாம்!!

கேப்டன்(கப்பலின் கேப்டனுங்கோ, விஜயகாந்த் இல்லை) அறை:


உணவருந்தும் அறை:




கப்பலின் கட்டுப்பாட்டறை. இங்கிருந்துதான்
செய்தி பரிமாற்றம் நடை பெறும்.


நீரில் குதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால்
அணிய வேண்டிய உடை:



சமையலறை(சுடச்சுட இட்லி ரெடி)



பதப்படுத்தப்பட்ட சாப்பாடுகள் கொண்டு செல்கிறார்கள்.
அதை உள்ளே சூடுபடுத்திக்கொள்வார்களாம்.


போர்க்காலத்தில் நீர்முழ்கிக் கப்பலின் பங்கு மிகப் பெரிதாம்.
அதை அவர்கள் விரிவாக சொல்லும்பொழுது ப்ரமிப்பாக
இருக்கிறது!!!!

நம்மிடம் 18 நீர்மூழ்கிக்கப்பல்கள் இருக்கின்றனவாம்.
ஒன்றே ஒன்று மட்டும் யுத்தத்தில் பாகிஸ்தானால்
நாசமாக்கப்பட்டதாம். அதுவும் இன்னமும் கடலில்
தான் இருப்பதாகச் சொன்னார்கள்.

விசாகப்பட்டிணம் சென்றால் இந்த அருங்காட்சியகத்தை
பார்க்கத் தவறாதீர்கள்.

இங்க சுத்தி பாத்ததே டயர்டாகிடுச்சு. மதிய உணவுக்கு
சஸ்பென்சா ஒரு இடத்துக்கு அயித்தான் கூட்டிகிட்டு
போனாரு! அது எங்கே அதுக்கு முன்னாடி போனது
எல்லாம் அடுத்த பதிவுல.

நீர்மூழ்கிக்கப்பலின்வீடியோ

INS-KURUSURA

13 comments:

Vidhya Chandrasekaran said...

ஹையா மீ த பர்ஸ்ட்:)

Vidhya Chandrasekaran said...

நீர்மூழ்கிக் கப்பலே அருங்காட்சியகமா. வித்தியாசமா இருக்கே. அடுத்த தடவை வாய்ப்பு கிடைச்சா விசிட் போடலாம்.

நிஜமா நல்லவன் said...
This comment has been removed by a blog administrator.
pudugaithendral said...

நிஜமா நல்லவன் சொன்னதுதான் சரி என்பதால் உங்க கமெண்டையும், அவரோட கமெண்டையும் எடுத்திட்டேன் வித்யா. :))

pudugaithendral said...

நீர்மூழ்கிக் கப்பலே அருங்காட்சியகமா. வித்தியாசமா இருக்கே//

ஆமாம் வித்யா,

அருமையா இருக்கு. ஜுனியருக்கு கொஞ்சம் விவரம் தெரியும்போதுகூட்டிகிட்டுப்போங்க.

நிறைய கத்துப்பாரு. அவரும் வாகனப்ப்ரியர்னு வேற சொல்றீங்க.

:))

ஆயில்யன் said...

நிறைய ஆர்வத்துடன் எப்பொழுதுமே யோசிக்க தோணும் வகையில் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் விசயங்களில் இந்த நீர்முழ்கி கப்பலும் ஒன்று - எனக்கு!

படங்களுடன் நல்லா இருக்கு! இன்னும் அட! அப்படியா...!ன்னு நீர்முழ்கி கப்பலை பார்த்தப்ப நீங்க நினைத்த தகவலையும் கூட சொல்லுங்க :))

ஆயில்யன் said...

//Museum போனதுக்கா இம்புட்டு பில்டப்புன்னு கேக்கறீங்களா?
நான் போனது ஆசியா கண்டத்திலேயே முதலாவது!!
//

மஹுக்கும் பெருமை ஒ.கேதான் பட் எனக்கு புதுக்கோட்டை மியூசியம்தான் சூப்பரூ!

pudugaithendral said...

நீர்முழ்கி கப்பலை பார்த்தப்ப நீங்க நினைத்த தகவலையும் கூட சொல்லுங்க //

நிறைய மேட்டர் எழுதிவெச்சிருந்தேன் ஆயில்யன்.

மிஸ்ஸாகிடுச்சு :(

pudugaithendral said...

புதுக்கோட்டை மியூசியம் சூப்பர்தான். ஆனா இது மிக மிக அதிசயம்.

சாதரணமா நீர்மூழ்கிக்கப்பல் எப்படி இருக்கும்னு கூட நமக்குத் தெரியாதுல்ல.

நட்புடன் ஜமால் said...

அருமையான அறிமுகம் ...

நல்லா எடுத்து சொல்லி இருக்கீங்க ...

நிஜமா நல்லவன் said...

:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சூப்பர்ப்பா..நல்லா இருக்கு ..

நானானி said...

நீரில் மூழ்காமலேயே நீர்மூழ்கிக் கப்பலை சுத்திப் பார்த்த உங்கள் அனுபவம்..அற்புதம்! கட்டாயம் பார்க்கவேண்டிய ஒர் அருங்காட்சியகம். வாய்ப்பு? ம்! கிடைக்கும்.