வள்ளி பிறந்து வளர்ந்து கந்தனை மணந்த இடம்.
கந்தன் வள்ளி திருமணம் விநாயகர் இல்லாமலா...
கந்தனை மணக்க மறுத்த வள்ளியை விநாயகர் யானையாய்
வந்து பயமு்றுத்த தானே திருமணம் நடந்ததது!!!
கதிர்காமத்தில் கந்தன் வள்ளி திருமணம் புரிந்து
வாழ்ந்த மலை இன்றும் இருக்கிறது. மலை ஏறிச்சென்று
பார்க்கலாம். ஒருமுறை செய்து பார்க்க ஆசைபட்டு
முழங்கால் அளவு உயர படிக்கட்டைப் பார்த்து
பயந்து திரும்பிவிட்டோம்.
இந்த முறை வாகன வசதி இருக்கிறது என்றார்கள்.
நேரமின்மையால் போகமுடியவில்லை.
சரி கதைக்கு வருவோம். கதிர்காமத்திலிருந்து 3 அல்லது
5 கிமீ தொலைவில் இருக்கிறது செல்லக் கதிர்காமம்.
இங்கே தான் வள்ளியை யானை உருவில் வந்து
பயமுறுத்தியிருக்கிறார் விநாயகர். அதனால் அங்கே
ஒரு விநாயகர் கோவில் கட்டி பூஜை நடக்கிறது.
இங்கே இந்து முறைப்படி பூஜை.
இறைவனை வழிபட பூ..

மாணிக்க கங்கை முன்பெல்லாம் சுழித்து ஓடும்.
கடை வீதி வரையில் தண்ணீர் இருக்கும். இந்த
முறை தண்ணீரே இல்லை. 4 மாதங்களாக
மழை இல்லாமல் காய்ந்து போயிருக்கிறது.

விநாயகர் கோவிலின் பின்புறம் கட்டப்பட்டிருக்கும்
நாகர் சிலை.

23.8.09 விநாயக சதுர்த்தி. எதேச்சையாக தம்பிக்கு
உதவிய அண்ணனைப் பற்றிய பதிவும் வந்திருக்கு.

விநாயக சதுர்த்தி பற்றிய முந்தைய பதிவு.
விக்ன நாசன விநாயகனை தொழுது, கொழுக்கட்டை எல்லாம்
சாப்பிட்டு திங்கள் கிழமை வாங்க.
அடுத்த பயணம் எங்கே என்று சொல்கிறேன்.
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்திரம் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
சிந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே..
11 comments:
இனிப்பில்லா கொழுக்கட்டை தான் பிடிக்கும் ...
கை சரியானதும் செஞ்சு பார்சல் அனுப்பி வைக்கறேன்.
ப்ரெசென்ட் சார்..
/
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.
/
நன்றி.
உங்களுக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.
HAPPY BIRTHDAY VINAYAKA.
UMAPUTHRANUKKU VAAZTHTHUKAl.
VANAKKANGAL.
ப்ரெசென்ட் சார்..//
:))) இங்க சார் இல்ல மேடம் தான்.
ப்ரசெண்ட் போட்டுட்டேன்
நன்றி சிவா
அன்பு சகோதரி,குட்டீஸ்களுக்கும் , குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு
நன்றி துபாய் ராஜா
nandri sevaral tips
Post a Comment