Saturday, November 21, 2009

அக்கா, அக்கா நீ அக்காயில்லை....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்ன ஆரம்பமே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு பாக்கறீங்களா?

ரொம்ப நாளா இதைப் பத்தி பதிவு போடலமா! வேணாமான்னு
யோசிச்சுகிட்டே இருந்தேன். நிலமை ரொம்ப மோசமா
போகுது. அதான் பதிவு போட்டிடலாம்னு முடிவு செஞ்சிட்டேன்.


பலரும் அன்பா என்னை அக்கான்னு கூப்பிடறீங்க. நெம்ப
சந்தோஷமா இருக்கு. என்னிய அக்கான்னு கூப்பிடறதால
நான் வயசானவளா நினைக்கலை. அன்பை வெளிப்படுத்தற
சொல்னு தெரியும். ஆனாலும் அக்கான்னு கூப்பிடும்போது
இவுங்க என்னிய விட பெரியவங்களா? சின்னவங்களான்னு
தெரியாம இப்படி கூப்பிடறாங்களேன்னு தோணும்.

இதுக்கு காரணம் இருக்குங்க. ரொம்ப நாளா ஒரு பதிவரோடு
சாட்டிகிட்டு இருந்தேன். அக்கா, அக்கான்னு தான் கூப்பிடுவார்.
ஒரு நாள் எதேச்சையா அவங்க வயச சொன்னாரு.
அவரு 40+ வயது. இதைக்கேட்டதும் எனக்கு பயங்கர ஷாக்
ஆகிடுச்சு. என்னங்க இது நீங்க என்னிய விட ரொம்ப ரொம்ப
பெரியவரு! என்னை இப்படி அக்கானு கூப்பிடறீங்களேன்னு
சொன்னேன்.”அப்படியே பழகி போயிடிச்சு, விடுங்க அக்கான்னு”
சொல்லிட்டாரு. என்ன கொடுமைங்க இது.

தராசு அண்ணன் கூட ஒரு முறை என் பதிவில் அக்கான்னு
பின்னூட்டம் போட்டிருக்க ஃப்ரெண்ட் ஆதி வந்து,”தராசு
உங்களை அக்கான்னு கூப்பிடறாரேன்னு” பின்னூட்டம்
போட்டிருந்தாரு. ஆமாங்க நம்மை விட பெரியவங்க
நம்மை அக்கான்னு கூப்பிடும்போது கொஞ்சம் ஒரு
மாதிரியா இருக்கு.

அப்துல்லா தம்பி, ஜீவ்ஸ் தம்பி, மங்களூர் சிவா
எல்லாம் எனக்குத் தம்பிங்க.

எனக்கு நிஜத்துல அண்ணாவும் கிடையாது, அக்காவும்
கிடையாது. இந்த வலையுலகிலயாவது ஒரு அண்ணா
கிடைக்க மாட்டாரான்னு பாத்துக்கினு இருந்தா..
என்னிய விட பெரியவங்க கூட என்னிய அக்கான்னு
கூப்பிடறது என்ன நியாய்ம்ங்க.

எனக்குத் தெரிஞ்சு இப்பத்திக்கு
நான் அண்ணான்னு கூப்பிட ஒரு ஆளுதான்
இருக்காங்க. நம்ம பினாத்தல் சுரேஷ் அண்ணாதான் அவங்க.
ரொம்ப சந்தோஷமா இருக்கு. (இவராலதான் நான்
வலையுலகில் எழுத வந்தது. ஃபைபாலஜி ப்ரொபசர்
அவர் :))

சில பல க்ளுக்கள் கொடுத்திருக்கேன்.:))
அதை வெச்சு நீங்க எனக்கு அண்ணனா, தம்பியா,
தங்கையான்னு முடிவு செஞ்சு அப்புறமா
என்னை “அக்கான்னு”(சரியா இருந்தா)
தாரளமா கூப்பிடுங்க.ரொம்ப சந்தோஷப் படுவேன்.

வயதுல பெரியவங்களை தம்பின்னு நினைச்சு
மரியாதை குறைவா பேசுறது தப்பு, அவுங்க
ஆயுசு குறையும்னு எங்க ஊரு பக்கம் சொல்வாங்க.
அந்த குத்தம் நான் செய்யாம நீங்க தான் காக்கணும்.

வருகைக்கு நன்றி

37 comments:

துளசி கோபால் said...

ஏம் பாப்பா...... இப்படி ஒரு ஃபீலிங்ஸ்!!!!

அக்கான்னு கூப்புட யாருமில்லையா? நான் இருக்கேனேப்பா.

நல்லவேளை. நம்ம 'வேலை' நம்மைக் காப்பாத்திருச்சு:-)))

ஆயில்யன் said...

ஒ.கே தங்கச்சியக்கா :)

pudugaithendral said...

அக்கான்னு கூப்புட யாருமில்லையா? நான் இருக்கேனேப்பா.//

ஆரம்பத்துல உங்களை அப்படித்தான் சொல்லி பின்னூட்டம் போட்டுகிட்டு இருந்தேன். உலகமே டீச்சர்னு கூப்பிட்டுகிட்டு இருக்கும்போது இது கொஞ்சம் வித்யாசமா இருக்க மாத்திட்டேன். இனிமே அப்படியே கூப்பிடறேன். நன்றி

pudugaithendral said...

நம்ம 'வேலை' நம்மைக் காப்பாத்திருச்சு//

:)))

pudugaithendral said...

வாங்க பாஸ்,

நீங்க எப்ப தம்பியண்ணா, எப்ப பாஸ் என்பதில் தான் குழப்பமே. :))

Prathap Kumar S. said...

சாச்சுப்புட்டியே ஆத்தா...சாச்சுப்புட்டியே...

அக்கா உனக்கு ஒண்ணு தெரியுமாக்கா... நான் உன்னைத்தவிர யாரையும் அக்கான்னே கூப்பிட்டதில்லக்கா.... இனிமே நான் யாரக்கா அக்கான்னு கூப்ப்புடுவேன்...

தராசு said...

அப்பாடா, ஒரு தங்கச்சி கிடைச்சாச்சு.

கானா பிரபா said...

சரி தங்கச்சியக்கா

இதேமாதிரி 40+ அக்காவும் என்னைப் பார்த்து அண்ணான்னு கூப்பிட்டுச்சே
அவ்வ்வ்

கண்மணி/kanmani said...

பெருசுங்க என்ன அக்கானு கூப்பிட்டதும்,சிறுசுங்க நட்பா உரிமையா?????கண்மணி னு பேரு சொல்லிக் கூப்பிட்டதும் தாங்காம நாங்களும் அல்லாடியிருக்கோம்ல.
அப்பாடி...துளசி டீச்சர் போல எங்க 'வேலை'தான் காப்பாத்துச்சு!!!!!!

cheena (சீனா) said...

நான் வழக்கம் போல் அன்பின் புதுகைத் தென்றல என்றோ அன்பின் தென்றல் என்றோ அழைத்து விடுகிறேன். ( எனக்கும் அக்கான்னு கூப்பிட ஆள் கிடையாது ) - நல்வாழ்த்துகள்

pudugaithendral said...

இனிமே நான் யாரக்கா அக்கான்னு கூப்ப்புடுவேன்...//

வருத்தப்படாதீக அண்ணா.

:)

pudugaithendral said...

ஒரு தங்கச்சி கிடைச்சாச்சு.//

தாங்க்ஸ்ணா

pudugaithendral said...

இதேமாதிரி 40+ அக்காவும் என்னைப் பார்த்து அண்ணான்னு கூப்பிட்டுச்சே
அவ்வ்வ்//

அதேதான் பாஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

.துளசி டீச்சர் போல எங்க 'வேலை'தான் காப்பாத்துச்சு!!!!//

வாங்க கண்மணி வலையுலகத்துல நான் டெர்ரரா ஹஸ்பண்டாலஜி ப்ரொபசரா வந்தும் என்னையாரும் ப்ரொபசராவோ, மாண்டிசோரி ஆசிரியையாக இருந்தும் டீச்சராவோ ஏத்துக்கலை.

நம்ம மேல அம்புட்டு அன்பு போல இருக்கு

pudugaithendral said...

நான் வழக்கம் போல் அன்பின் புதுகைத் தென்றல என்றோ அன்பின் தென்றல் என்றோ அழைத்து விடுகிறேன்.//

நன்றி சீனா சார்

அன்புடன் அருணா said...

அட அக்கான்னு கூப்பிட்டு கொஞ்சம் சந்தோஷம் கிடைக்குதுன்னா கிடைச்சுட்டுப் போகட்டுமே தென்றல்? இதுக்குப் போயி அலட்டிக்கலாமா???!!!

மங்களூர் சிவா said...

:))))))))))))))))

ப்ரியமுடன் வசந்த் said...

யக்கா.....

கோபிநாத் said...

ரைட்டுக்கா ;))

எம்.எம்.அப்துல்லா said...

ரைட்டுக்கா :)

இராகவன் நைஜிரியா said...

இப்ப எனக்கு ரொம்ப குழப்பமா ஆயிடுச்சுங்க..

இப்ப நான் அண்ணனா? தம்பி?

புரியலை...

அதனால நான் அன்புத் தோழர் என்று அழைத்து விடுகின்றேன்..

pudugaithendral said...

அட அக்கான்னு கூப்பிட்டு கொஞ்சம் சந்தோஷம் கிடைக்குதுன்னா கிடைச்சுட்டுப் போகட்டுமே//

சந்தோஷம் யாருக்கு?? அவுங்க தன் வயசை குறைச்சுகாட்டிக்கலாம். ம்ம்ம்

:)))))))

pudugaithendral said...

தம்பிகள் மங்களூர் சிவா, வசந்த், கோபி வருகைக்கு நன்றி

இராகவன் நைஜிரியா said...

தமிழ்மணத்தில் ஓட்டு போட்டாச்சுங்க.

தமிஷிழில் நீங்க இணைக்காததால் ஓட்டு போடவில்லை..

pudugaithendral said...

என் பெயர் சேர்க்காததால் நான் கமெண்ட மாட்டேன் என்று செல்லமாக கோபித்துக்கொண்டிருக்கும் தம்பிக்கு சாரி.(இப்படி லிஸ்ட்ல நிறைய்ய பேரு விட்டு போச்சு தம்பி. எல்லோர் பேரும் எழுத முடியாதேன்னு சும்மா சாம்பிளுக்கு சில தம்பிகள் எழுதினேன்)

நிஜமா சொல்றேன்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அப்துல்லா

இராகவன் நைஜிரியா said...

ஜஸ்ட் இக்னோர் இட்...

இல்லீங்க்க சும்மா.. இன்னிக்கு நான் எழுதியிருகும் இடுகையின் தலைப்பு...

எல்லாம் ஒரு விளம்பரம்தான்.. :-)

pudugaithendral said...

இப்ப எனக்கு ரொம்ப குழப்பமா ஆயிடுச்சுங்க..

இப்ப நான் அண்ணனா? தம்பி?

புரியலை...

:)))))) பதிவுல க்ளூல்லாம் கொடுத்திருக்கேனே.

pudugaithendral said...

தமிஷிழில் நீங்க இணைக்காததால் ஓட்டு போடவில்லை..//

மறந்திடுது. :))

ஹுஸைனம்மா said...

அக்கா,

என்னுடைய மன ஓட்டமும் இதுவே. (நானும் பாதிக்கப்பட்டவள்தான்). அக்கா/ அண்ணன் என்று அழைப்பதில் எனக்கும் அவ்வளவு உடன்பாடில்லை. ஆனாலும் மூத்தவர்களை வெறுமே பெயர் சொல்லி அழைப்பது நமது கலாச்சாரத்தில் இல்லையென்பதாலோ என்னவோ என்னைப்போல நிறையபேரால் ”அக்கா”வைத் தவிர்க்க முடிவதில்லை.

இங்கே பலரும் என்னை அக்கா என்றழைப்பதை வைத்து வந்த ஞாபக அலைகளையே ஒரு பதிவாக எழுதினேன்.

ஆனா அக்கா, இந்த அக்கான்னு கூப்பிடற தம்பிங்களை ஒரு லிஸ்ட் எடுத்து வச்சிருக்கேன். நாளபின்ன கடன் கேக்கணுன்னா இவங்களத்தான் முதல்ல கேக்கணும்! அப்பப் பாப்போம் நம்ம தம்பிக எப்படின்னு!! ;-D

pudugaithendral said...

இந்த அக்கான்னு கூப்பிடற தம்பிங்களை ஒரு லிஸ்ட் எடுத்து வச்சிருக்கேன். நாளபின்ன கடன் கேக்கணுன்னா இவங்களத்தான் முதல்ல கேக்கணும்! அப்பப் பாப்போம் நம்ம தம்பிக எப்படின்னு!//

கடன் கேக்கபோறதில்லை ஹுசைனம்மா, மாமன் சீரி இவங்க கொண்டு வரணும்னு சொல்லிட்டேன்ல. :))) நிறைய்ய உறவுகள் கிடைத்ததில் மகிழ்ச்சியாத்தான் இருக்கு. ஆனா நம்மை விட பெரியவங்களும் நம்மை அக்கான்னு சொல்லும்போது கொஞ்சம் நெருடலா இருக்கு.


எனக்கும் பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசித்தான் பழக்கம். இங்க வலையுலக தம்பிகள் பேசும்போது கூட என் கூட கோச்சுக்குவாங்க.”யாராவது தம்பியை வாங்க போங்கன்னு பேசுவாங்களான்னு”. யாருக்கும் மரியாதை கொடுத்தே பழகிட்டேன்னு சொல்வேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நட்புடன் ஜமால் said...

என்னைய மறந்தாச்சா

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மணிநரேன் said...

சகோதரி-னு சொன்னால் குழப்பம் இருக்காதில்லையா??

pudugaithendral said...

என்னைய மறந்தாச்சா

தம்பிகளை மறக்க மனம் கூடுதில்லையே....

pudugaithendral said...

அருமையா சொன்னீங்க மணிநரேன்

நன்றி

பாலராஜன்கீதா said...

kalakkal post
:-)

pudugaithendral said...

Blogger பாலராஜன்கீதா said...

kalakkal post
:-)//


dhanks. nalama??