Friday, May 21, 2010

புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி!

உங்க பேரு என்னங்க?
புவனா... புவனேஸ்வரி!
உங்களுக்குச் சொந்த ஊரு புதுக்கோட்டையா?
அப்படின்னு கேக்கும் அளவுக்கு எங்க ஊரில்
பிறந்தவங்க பலருக்கு புவனேஸ்வரின்னு
பேர் வைச்சிருப்பாங்க. புதுகை மன்னர்
பூஜித்து அருள் பெற்ற அன்னை பிரகதாம்பாளுக்கு
அடுத்து புதுகையை காத்து அருள் புரிபவள்
இந்த புவனேஸ்வரி. ராஜாகுளக்கரையில் இருக்கிறது
இந்தக் கோவில். பொற்பனையானைப் பார்க்கப்போன
வழியில் ஒரு எட்டு புவனேஸ்வரியையும் தரிசித்து
வந்தேன். போனதடவையே பாஸ் ஆயில்யன்
புவனேஸ்வரி கோவில் பற்றி எழுதச் சொன்னார்.

இந்தப் பதிவு எங்கள் பாஸ் ஆயில்யன் விருப்பப்பதிவு.

முன்பு இந்த இடம் ஜட்ஸ் சுவாமிகள் அவர்களின் ஆஸ்ரமமாக இருந்த
இடத்தை சாந்தானந்தா சுவாமிகள் மேற்கொண்டு
அதிஷ்டானமாக்கி இருக்கிறார். புவனேஸ்வரி
கோவிலுக்கு அதிஷ்டானம் என்று பெயர். 1936ஆம் ஆண்டு
முதல் இந்தக்கோவில் இருக்கிறது.

அன்னை புவனேஸ்வரிக்கு நேர் எதிரில் அஷ்டதச புஜ லட்சுமி.
இருவரின் திருஉருவத்தையும் பார்த்துக்கொண்டே
இருக்கலாம். நேர்   எதிரில் சன்னிதி இருவருக்கும். ஐயர்
வகுப்பினர் புடவை கட்டும் ஸ்டைலில் புவனேஸ்வரிக்கு
அலங்காரம் செய்திருப்பார்கள். எதிரில் பெரிய யாக குண்டம்
இருக்கும். இங்கே வருடத்திற்கு ஒரு முறை செய்யப்படும்
யாகம் மிக பிரசித்தம். அது முடிந்த உடன் ஊரில் மழை
நிச்சயம்.

சரஸ்வதி ஞான ரூபம், லட்சுமி க்ரியா ரூபம், மஹா காளி
இச்சா ரூபம் - இந்த மூன்று சக்திகளும் சேர்ந்த
சாமூண்டிஸ்வரி புவனேஸ்வரியாக அன்னை இங்கே
வணங்கப்படுகிறாள்.


கோவில் வாசலிலேயே தாமரை மலர்கள் விற்றுக்
கொண்டிருப்பார்கள். அர்ச்சனை எல்லாம் கிடையாது.
நுழைந்ததும் ஜட்ஜ் சுவாமிகள் சமாதி இருக்கும்.
இடது பக்கத்தில் புவனேஸ்வரி எதிரே லட்சுமி. லட்சுமியின்
எதிரில் ஸ்ரீ சக்கர மேரு வைத்து பூஜை நடை பெறும்.
கற்பூரார்த்தி நேரத்திலும் இருவருக்கும் ஒரே சமயத்தில்
ஆரத்தி நடைபெறும். காலை மாலை மட்டும்தான் ஆரத்தி.
நடுவில் தரிசனம் மட்டும்தான்.

கோவிலைச் சுற்றி வரும்பொழுது பஞ்சமுக பிள்ளையார்,
பஞ்சமுக ஆஞ்சநேயர், தன்வந்த்ரி, சாஸ்தா, நாமே
அபிஷேகம் செய்யும் வகையில் லிங்கம், பொற்பனையான்
ஆகிய மூர்த்திகள் இருக்கும். படு சுத்தமாக நிசப்தமாக
இருப்பது சிறப்பு.

புதுகை அதிஷ்டானம் பற்றிய இணையதளம்.
சென்னையை அடுத்த தாமபரத்தில் ஸ்கந்தாஸ்ரமம்
இருக்கிறது. அதுவும் சாந்தானந்தா சுவாமிகளால்
அமைக்கப்பட்டதுதான். சேலம் ஸ்கந்தாஸ்ரமமும்
இந்த அமைப்பினருடையதுதான்.



இங்கே கோவில் சுத்தமான தசாங்கம் கிடைக்கும். அதைக்
கோனில் வைத்து ஏற்றுவது ஒருக்கலை. சுகந்தச்ச மனோஹரமாக
வாசம் தூக்கும். புவனேஸ்வரி குங்குமம் எந்தக் கலப்பும்
இல்லாத மஞ்சள் குங்குமம்.






புவனேஸ்வரியை தரிசித்து விட்டு நேராகச் சென்ன்றது
பொற்பனை முனீஸ்வரர்.

இவரைப்பற்றி டிசம்பர் ட்ரிப்பிலேயே எழுதியிருக்கிறேன்.
பெரியவரைப்பாத்து வந்து சாப்பிட்டு சின்னதாக ரெஸ்ட்
எடுத்துக்கொண்டு  மாலை 4 மணிக்கு அரியவள் எங்க ஊர்
அரியநாச்சி அம்மனை பார்க்கப்போனோம். கோவில் இன்னமும்
திறக்கவில்லை. சரி அடுத்த இடத்திற்கு நேரமாகிவிடும்
என்று கிளம்பிவிட்டோம்.

புதுகை கடைவீதி வழியாகப்போனோம். டாடா கோல்ட்
ப்ளஸ் கடையில் ஒரே பரபரப்பு. ஷூட்டிங் எடுப்பதாகச்
சொன்னார்கள். பசங்க டைரக்டர் பாண்டிராஜுக்கு ஊர்பாசம்
ஜாஸ்தி. (என்னிய மாதிரி :) ) பசங்க படத்துல எங்க ஊரு பல இடங்கள்,
ராம் சைக்கிள் மார்டை காட்டினார். எல்லோரும் அங்கேதன்
சைக்கிள் வாங்கியிருப்போம் என்பதால் பலருக்கும்
கொசுவத்தி சுத்தியிருக்கும். இப்ப எடுத்துகிட்டு இருக்கற
”வம்சம்” படத்துல  டாடா கோல்ட் ப்ளஸ் கடை வருதான்னு
பாக்கணும்.

அங்கேயிருந்து போனது.....

யெஸ் அடுத்த பதிவுல...


18 comments:

VELU.G said...

புதுத்தகவல்கள் நன்றி

AKM said...

அதிஷ்டானத்தில் நிலவும் அமைதியும், அந்த அதிர்வும் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்..
முன்பு நிறைய புதுகைகாரர்கள் இங்குள்ள ஐயர்மார்கள் தங்களை மதிப்பதில்லை என்று அதிகம் வருவதில்லை..கடவுளை தரிசிப்பதில் கூட ஈகோ..தற்பொழுது நிலைமை மாறி வருகிறதாம்.. அப்புறம் கோவில் மேற்புறம் எங்கும் எழுதப்பட்டுள்ள சுவாமி சாந்தானந்தாவின் பொன் மொழிகள் பற்றி கூறவி்ல்லையே..
சாம்பிளுக்கு ஒன்று:
”ஏ மனமே உலகை நாடகமாக பார்த்து வா உன்னிடம் உள்ள பேத புத்தி மறைந்து அனைவரும் நல்லவராய் தோன்றுவர்“(உங்க முந்தின பதிவு கடமையை செய் பதிவிற்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பது போல் தெரியுமே..)இது போல் நிறைய எழுத என் வாழ்த்துக்கள்

pudugaithendral said...

முதல் வருகைக்கு நன்றி வேலு

pudugaithendral said...

வாங்க ஏகேஎம்,
அதிஷ்டானத்தில் பொன்னகை மின்ன, பட்டு சரசரக்க வந்தால்தான் மதிப்பு கிடைத்தது என ஒரு சமயம் இருந்தது நிஜம்தான். அன்னையை பார்க்க என் பாட்டியுடன் சென்றிருக்கிறேன். அதுவும் யாகம் நடைபெறும்பொழுது பூர்ணாகுதியில் கூடை கூடையாக போடுவார்கள். தற்போது நிலமை பரவாயில்லை.

pudugaithendral said...

கோவில் மேற்புறம் எங்கும் எழுதப்பட்டுள்ள சுவாமி சாந்தானந்தாவின் பொன் மொழிகள் பற்றி கூறவி்ல்லையே..//

அதெல்லாம் கையில் நோட் எடுத்துபோய் தனியா எழுதவேண்டிய விஷயங்கள். அதனால்தான் விட்டுவிட்டேன். நீங்க சாம்பிளுக்கு சொல்லியிருப்பதே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு.

மிக்க நன்றி

Thamira said...

அப்பப்ப பக்திப்பழமாயிடுறீங்க.. ஆமா அதாரு ஜட்ஜ் சுவாமிகள்.?

தமிழ் அமுதன் said...

good post...!

எல் கே said...

//. ஐயர்
வகுப்பினர் புடவை கட்டும் ஸ்டைலில் புவனேஸ்வரிக்கு//

மடிசார்

ஏற்கனவே ஒரு முறை சென்று இருக்கிறேன் . அருமையான கோவில்.

pudugaithendral said...

அப்பப்ப பக்திப்பழமாயிடுறீங்க.//

:)) ஆமாம் அப்படித்தான்.
. ஆமா அதாரு ஜட்ஜ் சுவாமிகள்//
பதிவுல புவனேஸ்வரி கோவில் லிங்க் கொடுத்தேனே அதுல மெயின் பேஜ்ல ஜட்ஜ் சுவாமிகள் பத்தி இருக்கும். எனக்கு ரொம்ப தெரியாது.

வருகைக்கு நன்றி ஃப்ரெண்ட்

pudugaithendral said...

நன்றி ஜீவன்

pudugaithendral said...

வாங்க எல்கே,

ஓ புவனேஸ்வரி கோவிலுக்கு போயிருக்கீங்களா? சந்தோஷம்.

வருகைக்கு நன்றி

தாரணி பிரியா said...

சேலம் ஸ்கந்தாசிரமம் போய் இருக்கேன். ஜட்ஜ் சுவாமிகள் பெரிய சிலை இருக்கும். கோயில் அமைப்பு அமைதி பிடிக்கும்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஐ... என்னோட பேரு புவனேஸ்வரி தான்... ஆனா சேலம்ல ஒரு கோவில் இருக்கறது தான் எனக்கு தெரியும்.. இந்த கோவில் இப்போ நீங்க சொல்லி தான் தெரியும்... நன்றி

pudugaithendral said...

thanks buvana

pudugaithendral said...

intha pathivuku rendu minus vote vilunthiruku. :( :)

ஆயில்யன் said...

சூப்பர் பாஸ் :))

புதுக்குளமும் புவனேஸ்வரி கோவிலும் அவ்ளோ சீக்கிரத்தில மறந்திடமுடியுமா?

பெரிய அளவில் யாகம் வளர்த்து ஒரு விழா நடந்தது நன்றாக நினைவில் இருக்கிறது 1990ல் என நினைக்கிறேன் !

அந்த தசாங்கம் இப்பவும் எங்க வீட்டு பூஜை அறையில் ரெடியாக இருக்கும் :) தசாங்கம் ஏற்றுவதற்கு முன்னரான அந்த வாசமும் அந்த கோன் செய்வதும் கொள்ளை விருப்பம் !

selva said...

Thanks a lot to popularise our pudukkottai fame.

pudugaithendral said...

நன்றி புதுகை செல்வா,

நம்ம ஊரைப்பத்தி நாமதானே பெருமையா சொல்லிக்கணும். அதான் பதிவு.